வீட்டுப் பொருட்களை வாங்கும் போது பணத்தை இப்படியும் சேமிக்கலாம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்த காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் நமக்குப் போதுமானதாக இல்லை. சம்பாதிப்பது வயிற்றுக்கே சரியாகப் பொய் விடுகிறது என பலர் சொல்ல நீங்கள் கேட்டிருப்பீர்கள். வீட்டு வரவு செலவில் ஒரு மிகப்பெரிய செலவினமாக இந்த மாளிகையும் பிற வீட்டுப்பொருட்களும் இருக்கின்றன.

 

உண்மையில், அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவுகளில், நான்கு பேர் கொண்ட ஒரு சராசரி குடும்பத்தின் உணவுச்செலவு வாரத்திற்கு சராசரியாக 145 டாலர் முதல் 289 டாலர் வரை பிடிக்கிறது.

இது ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய 7,500 டாலர்கள் முதல் 15,000 டாலர்கள் வரை ஆகிறது. எனவே உங்களுடைய மளிகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான செலவைக் குறைக்க பின் வரும் 10 வழிகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

செய்தி தாள்கள்

செய்தி தாள்கள்

நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாள்களுடன் பொருட்களுக்கான தள்ளுபடி கூப்பன்கள் நிறைய கிடைக்கின்றன. உங்களுடைய சேமிப்பை இரட்டிப்பாக்க அவற்றை ஒன்றிற்கும் மேலான பிரதிகள் வாங்கினால் நிறைய கூப்பன்கள் கிடைக்கும். ஆனால் நீங்கள் அதிகம் விரும்பும் உணவையே வாங்க முயலுங்கள். கூப்பன் உள்ளதே என்பதற்காக நீங்கள் விரும்பாத அல்லது உங்களுக்குத் தேவைப்படாத ஒன்றை வாங்கி வீணடிக்காதீர்கள்.

உணவுத் தேவையை திட்டமிடுங்கள்

உணவுத் தேவையை திட்டமிடுங்கள்

அடுத்த வாரம் நீங்கள் என்ன சாப்பிடப்போகிரீர்கள் என்பதை குறித்து நீங்கள் இப்போதே கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனால் ஒரு வாரத்தில் பொதுவாக என்ன சமைக்க அல்லது சாப்பிடப் போகிறீர்கள் என்பதைத் திட்டமிடலாம் அல்லவா? இது நீங்கள் கடைக்குபோய் பொருட்களை வாங்குகையில் மிகவும் உபயோகமாக இருக்கும் செலவையும் குறைக்கும். இதன் மூலம் கடைசி நிமிடத்தில் இது இல்லை அது இல்லை என கடைக்கு ஓட வேண்டியதில்லை, நேரமும் சமையல் கேஸும் மிச்சம்

வாங்க வேண்டிய பொருட்களை பட்டியலிடுங்கள்
 

வாங்க வேண்டிய பொருட்களை பட்டியலிடுங்கள்

மேலே சொன்ன திட்டத்தின் படி ஒரு பட்டியலை தயாரித்துக்கொள்ளுங்கள். இதற்காக அவுட் ஒப் மில்க் (Out Of Milk) எனப்படும் ஒரு சிறிய மென்பொருள் உள்ளது. அதை நீங்கள் டவுன்லோட் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் வைத்துக்கொள்ளலாம். இது அந்த பட்டியலை எளிதாக தயாரிக்கவும் பராமரிக்கவும் உதவும். இது போன்று பட்டியலிடும்போது உங்களுக்கு என்ன அவசியமாக தேவை என்பதை அறியமுடிவதொடு தேவைக்கதிகமாக வாங்கி செலவுகளை அதிகரிப்பதைத் தவிர்க்க உதவும்.

அளவிற்கு அதிகமாக வாங்காதீங்க

அளவிற்கு அதிகமாக வாங்காதீங்க

ஏதாவது அதிரடி ஆஃபர் அல்லது தள்ளுபடிகளைப் பார்த்தால் நமக்கு கை குறு குறு வென்று வரும். ஆனால் ஆறு பாக்கெட் தயிர் வாங்கினால் ஒரு பாக்கெட் இலவசம் என்று சொன்னால் நன்றாகத்தான் இருக்கிறது அதற்காக அதை வாங்கி ஏழு பாக்கெட் தயிரை நீங்கள் சாப்பிட முடியாமல் வீணாகிப்போனால் அது வீண் செலவு தானே?

ஆன்லைன் கூப்பன்கள் இருக்கா?

ஆன்லைன் கூப்பன்கள் இருக்கா?

பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தங்கள் இணைய தளத்தில் பிரிண்ட் செய்துகொள்ளக்கூடிய கூப்பன்களை தருவார்கள். அது போன்று ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள். சில ரூபாய்களை மட்டும் இது மிச்சம் செய்யுமென்றால் அவற்றை சேர்த்து வையுங்கள், நாளடைவில் அது பெரிய சேமிப்பாக மாறலாம். உங்கள் கடைகாரர் அது போன்ற கூப்பன்களை வாங்கிக் கொல்வார என்பதை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான கடைகள் அவற்றை வாங்கினாலும், தள்ளுபடிகளைத் தரும் சில கடைகள் அவற்றை வாங்குவதில்லை.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

பேஸ்புக்கைப் பார்ப்பது கேம் விளையாடுவது என இருப்பதை விட்டுவிட்டு உங்கள் சேமிப்பை அதிகரிக்க இதுபோன்ற தள்ளுபடிக் கூப்பன்களை டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

உழவர் சந்தை

உழவர் சந்தை

உங்கள் உணவில் அதிக அளவு காய்கறி மற்றும் பழங்கள் இருக்குமானால், அருகில் உள்ள உழவர் சந்தையில் சென்று பாருங்கள். இங்கு அவை புதிதாகக் கிடைப்பதோடு, உங்கள் செலவில் 20 சதவிகிதம் வரை குறைக்கும், நீங்கள் தேர்வு செய்வதற்கும் நிறைய கிடைக்கும். இவை வாரத்தின் சில நாட்கள் மட்டுமே இயங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பரிசுத் திட்டங்கள்

பரிசுத் திட்டங்கள்

நீங்கள் வழக்கமாக வாங்கும் கடையில் உள்ள பரிசுத்திட்டங்களில் உங்கள் பெயரை வாடிக்கையாளராக சேர்த்துள்ளீர்களா? அப்படி இல்லை என்றால் ஒரு பெரும் சேமிப்பினை நீங்கள் தவறவிடுகிரீர்கள். சில பெரும் ஷாப்பிங் நிறுவனத்திலிருந்து வாரத்திற்கு ஒருமுறைஅடிக்கடி வாங்கும் பொருட்கள் மீதான தள்ளுபடிக் கூப்பன்கள் வந்த வண்ணம் இருக்கும். அதை பயன்படுத்தி அதிகப்படியான பணத்தை சேமிக்கலாம்.

கிரெடிட் கார்ட்

கிரெடிட் கார்ட்

நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்துபவரானால் சரியாக எந்த கார்டை பயன்படுத்துவது என்பதை அறிந்து வைத்துக் கொண்டால் நிறைய சேமிக்கலாம். சில வங்கி நிறுவனங்கள் வீட்டு சாமான்களை வாங்க காஷ் பேக் வசதியை தருகிறது.

கிளியரன்ஸ் சேல்-ல வாங்குங்களேன்?

கிளியரன்ஸ் சேல்-ல வாங்குங்களேன்?

அட என்னங்க கெட்டுபோன பொருள வாங்கச் சொல்றீங்களான்னு நீங்க கேக்குறது எனக்குப் புரியிதுங்க. ஆனா பெரும்பாலும், கடைகள்ள கிளியரன்ஸ் செக்ஷன்-னு ஒன்னு உண்டு. இதில் பல பொருட்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு தள்ளுபடி கிடைக்கும், ஏனென்றால், கடைக்காரர் அதிகமாக வாங்கி வைத்து விட்டு பின்னர் அதை காலி செய்ய இது போன்று விலையைக் குறைப்பதுண்டு. அதில் தரமான பொருட்களும் கிடைக்கும்.

பணம்

பணம்

அதனால் வீட்டுப் பொருட்கள் வாங்கும்போது நம் பணத்தை சேமிப்பது பெருமளவு சாத்தியமே. பணம் சும்மா உங்கள் வங்கிகளில் முடங்கிக் கிடைப்பதை விட, ஒய்வுகாலத் திட்டம் அல்லது குழந்தைகள் கல்வித் திட்டம் போன்ற நீண்டகால திட்டங்களிலோ முதலீடு செய்யுங்கள். வீட்டுசெலவுகளில் மிச்சம் பிடிப்பது நல்ல விஷயம் தான். அதே நேரம் சேமிச்சதை சரியாய் உபயோகப்படுத்துவதும் அதே அளவு முக்கியம் தானே..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 Ways to Save Cash at the Grocery Store

Food and groceries are one of the most expensive line items in a family's budget. In fact, according to an article published in USA Today, the average cost to feed a family of four a healthy diet ranges from $146 to $289 per week.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X