ஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..? ஏன்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வங்கிகளின் தலைவன் என்றால் அது ஆர்பிஐ தான். இப்படி ஒவ்வொரு நாட்டு வங்கிகளுக்கும் ஒரு தலைமை அமைப்பு இருக்கும்.

அந்தந்த நாடுகளில் பொருளாதாரத்தை சீராக வைத்துக் கொள்ள அந்த வங்கிகளின் தலைமை அமைப்புகளுக்கும் பெரிய பொறுப்பு உண்டு. இந்த வங்கிகளுக்குக்கான தலைமை அமைப்புகளை மத்திய வங்கிகள் எனச் சொல்வார்கள்.

இந்த மத்திய வங்கிகள் தங்களிடம் இருக்கும் பணத்தை பல்வேறு முதலீடுகளில் போட்டு வைப்பார்கள். அதில் தங்கத்துக்கும் எப்போதுமே இடம் உண்டு.

after 46 years

after 46 years

1971-ம் ஆண்டுக்குப் பிறகு 2018-ல் தான் மத்திய வங்கிகள் மிக அதிக அளவில் தங்கத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் என உலக தங்க கவுன்சில் சொல்கிறது. 2018-ம் ஆண்டில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கிகளால் வாங்கப்பட்ட தங்கத்தின் அளவு 651.5 டன். உலகின் வளர்ந்து வரும் சந்தைகளாக ரஷ்யா, துருக்கி, கசகஸ்தான் போலந்து, இந்தியா போன்ற நாடுகள் 2018-ல் அதிக அளவில் தங்கத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள்.

What is special on Gold..?

What is special on Gold..?

அமெரிக்க பொருளாதார வலிமைச் சின்னமாக இருப்பது டாலர் தான். டாலர் ஏறினால் தங்கம் இறங்கும், தங்கம் ஏறினால் டாலர் இறங்கும். இந்த இரண்டுமே பகியுள்ள பங்காளிகள் போலத் தான். ஆங்கிலத்தில் Negative correlation எனச் சொல்வார்கள். இது தான் தங்கத்துக்கும் டாலருக்கு உள்ள விலை மாற்ற உறவு..? அதனால் தான் டாலருக்கு இணையாக தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள்.

Explain the math..?

Explain the math..?

உதாரணத்துக்கு ஆர்பிஐ இடம் 50 ரூபாய் அளவுக்கு டாலரும் 50 ரூபாய் மதிப்புக்க தங்கமும் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அமெரிக்க சீன வர்த்தப் போரால் டாலர் மதிப்பு 45 ரூபாய்க்கு சரிந்து விட்டது என்றால் தங்கத்தின் விலை 55 ரூபாயாக அதிகரித்திருக்கும். வர்த்தகப் போர் எல்லாம் சரியாக டாலர் 60 ரூபாய்க்கு அதிகரித்தால் தங்கத்தின் விலை 40 ரூபாய்க்கு சரிந்திருக்கும். இப்படி டாலரின் விலை மாற்றங்களை அனுசரித்து தன் சொத்துக்களை சரி செய்து கொள்ளத் தான் டாலரில் முதலீடு செய்கிறார்கள்.

INR Vs USD

INR Vs USD

ஜனவரி 01, 2018-ல் ஆர்பிஐ வலைதளத்தில் சொல்லப்படிருக்கும் பரிமாற்ற விலைப்படி 1 அமெரிக்க டாலருக்கு 63.66 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஜனவரி 01, 2019-ல் 1 அமெரிக்க டாலருக்கு 69.43 ரூபாய் கொடுத்திருக்கிறோம். ஆக 9.06 சதவிகிதம் விலை அதிகரித்திருக்கிறது.

Indian Gold

Indian Gold

22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ஜனவரி 01, 2018-ன் படி விலை 2,821 ரூபாய், அதே 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ஜனவரி 01, 2019-ல் விலை 3,246 ரூபாய். ஆக லாபம் 15.06 சதவிகிதம். எனவே டாலரில் முதலீடு செய்து வைப்பதற்கு பதில் தங்கத்தில் முதலீடு செய்து வைத்து வரும் லாபத்தை வைத்தே அமெரிக்க டாலருக்கு நிகரான் இந்திய ரூபாய் ஏற்ற இறக்கத்தை சரி செய்து கொண்டது ஆர்பிஐ. அதனால் தான் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் விலை 9.06% அதிகரித்த போதும் தங்கத்தின் மூலம் கிடைத்த 15.06 சதவிகித லாபத்தை வைத்து சரி கட்டிக் கொண்டது. இப்படி ஒரு முதலீட்டில் இருந்து வரும் நஷ்டத்தை வேறு முதலீட்டை வைத்து சமாளீப்பதற்குப் பெயர் தான் hedging என்பார்கள். இதே டெக்னிக்கைத் தான் ரஷ்யா, அர்ஜென்டினா, போலாந்து, துருக்கி என அனைவரும் செய்து வருகிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

why reserve bank of india is investing on gold..?

why reserve bank of india is investing on gold..?
Story first published: Thursday, February 7, 2019, 12:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X