சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு..குளோபல் ஹெல்த் ஐபிஓ.. யாரெல்லாம் தயார்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளோபல் ஹெல்த் நிறுவனம் இன்று அதன் பங்கு வெளியீட்டினை செய்துள்ளது. இந்த வெளியீட்டின் மதிப்பானது 2119.3 - 2205.6 கோடி ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 3 அன்று தொடங்கியுள்ள இந்த பங்கு வெளியீடானது, நவம்பர் 7, 2022 அன்று முடிவடையவுள்ளது.

இந்த பங்கு வெளியீட்டில் வெளியீட்டு விலையாக 319 - 336 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முகமதிப்பு 2 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்.. 10 மோசமான நாடுகள் எது எது..இந்தியாவுக்கு எந்த இடம்? குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்.. 10 மோசமான நாடுகள் எது எது..இந்தியாவுக்கு எந்த இடம்?

புதிய வெளியீடு எவ்வளவு?

புதிய வெளியீடு எவ்வளவு?

இந்த வெளியீட்டில் 65,641,942 ஈக்விட்டி பங்குகள் பொது வெளியீடாக செய்யப்படவுள்ளது. இதன் முக மதிப்பு 2 ரூபாயாகும். இதில் 14,880,952 பங்குகள் புதிய வெளியீடாக செய்யப்படவுள்ளன. இதன் மூலம் 500 கோடி ரூபாய் நிதி திரட்டப்படவுள்ளது. இதே ஏற்கனவே உள்ள பங்குதாரர்கள் மூலம் 50,761,000 பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இதன் மூலம் 1705.6 கோடி ரூபாய் திட்டரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

யார் யார் விற்பனை?

யார் யார் விற்பனை?

ஏற்கனவே பங்குதாரர்களிடம் உள்ள பங்குகளில் ஆனந்த் இன்வெஸ்ட் மூலம் 50,661,000 பங்குகள் விற்பனை செய்யப்படலாம் என்றும், சுனில் சச்தேவா 100,000 பங்குகளை விற்பனை செய்யலாம் என்றும் தெரிகிறது.

இதே புதிய வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியானது, GHPPL மற்றும் MHPL உள்ளிட்ட இரண்டு துணை நிறுவனங்களில் முதலீடு செய்தல், கடனை திரும்ப செலுத்துதல், பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் திரட்டப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குளோபல் ஹெல்த் லிமிடெட்

குளோபல் ஹெல்த் லிமிடெட்

குளோபல் ஹெல்த் லிமிடெட் (Medanta) இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இயங்கும் ஒரு தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இது இதயவியல் மற்றும் இதய அறிவியல், நரம்பியல், புற்று நோயியல், செரிமானம், ஹெபடோபிலியரி அறிவியல், எலும்பியல், கல்லீரல் மாற்று மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கும் மெடாண்டா பிராண்டின் கீழ் 5 மருத்துவனைகளில் செயல்பட்டு வருகின்றது. இது தற்போது குருகிராம், இந்தூர், ராஞ்சி, லக்னோ மற்றும் பாட்னா உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகின்றது. நொய்டாவில் கட்டுமான பணியில் தற்போது இருந்து வருகின்றது.

தரகு நிறுவனங்களின் கணிப்பு?

தரகு நிறுவனங்களின் கணிப்பு?

மெடாண்டா தற்போது முக்கிய சந்தைகளில் அதன் இருப்பை வலுப்படுத்திக் கொள்ள தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. குறிப்பாக தற்போதுள்ள வ்சதிகளுடன் சேர்த்து அதன் படுக்கை எண்ணிக்கை திறனை கவனமாக அதிகரிப்பதுடன், இதர துணை சேவைகளுக்கு கிடைக்கும் நிலத்தை பயன்படுத்துவதையும் கருத்தில் கொண்டுள்ளது.

படுக்கை வசதிகளை மேம்படுத்துவதோடு அதன் தரம் மற்றும் சேவைகளின் தரத்தையும் மேம்படுத்தவும் திட்டமிட்டு வருகின்றது. மேலும் குறைந்த செலவின் மூலம் பாரமரிப்பு சேவைகளை வழங்கவும் எதிர்பார்க்கிறது. தகவல் தொழில் நுட்பம், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பிற வளங்களையும் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

மருத்துவ துறைகளில் குறிப்பிட்ட துறைகளில் உயர் செயல் திறன் கொண்ட, புதிய மருத்துவ நிபுணர்களை தொடர்ந்து பணியமர்த்துவதன் மூலம் மருத்துவமனைகளில் ஆக்கிரமிப்புகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதோடு மருத்துவமனைக்களில் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டையும் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

மருத்துவ நடைமுறைகள் மற்றும் தொழில் நுட்பத்தினை பயன்படுத்துவதன் மூலம், பயனாளிகள் மருத்துவமனைகளில் தங்கியிருக்கும் சாரசரி காலத்தினை குறைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஊழியர்களின் திறனை மேம்படுத்தவும், தொழில் நுட்பம் மற்றும் செயமுறைகளை நெறிமுறைப்படுத்துவதன் மூலம் செயல்பாடுகளை மேம்படுத்தவும் எதிர்பார்க்கிறது.

மருத்துவமனைகளில் சர்வதேச மற்றும் உள்நாட்டு நிபுணர்களுடன் இணைந்து, மேம்படுத்துவதன் மூலம் தொடர்ந்து செயல்பாடுகளை மேம்படுத்தும். தொடர்ந்து மேம்பட்ட தொழில்நுட்பத்தினையும் மேம்படுத்தும்.

சுகாதார பாதுகாப்பு வசதிகளை அதி நவீன உபகரணங்களுடன் அதிகரிக்கும். இது தேவையான இடங்களில் ஆட்டோமேஷன் வசதிகளையும் அதிகரிக்கும். இதன் மூலம் நம்பகத் தன்மையை அதிகரிக்கும்.

மெடாண்டா விரிவாக்கத்தினை பொறுத்த வரையில், உள்கட்டமைப்பில் பெரியளவில் முதலீடுகள் இல்லாமல், குருகிராம் மருத்துவமனையில் 100 படுக்கைகள் சேர்க்கப்படும், லக்னோ மருத்துவமனையில் 400 - 500 படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும். லக்னோ மருத்துவமனையில் 103,703.22 மீதமுள்ள தளத்தினை வைத்துள்ளது. அதனுடன் 13 ஏக்கர் நிலத்தினையும் வைத்துள்ளது. இது குடியிருப்பு மற்றும் விருந்தினர் இல்லமாகவும் உள்ளது.

இந்திய சுகாதர துறையானது 2022 - 2026ம் ஆண்டுகளுக்கு இடையில் 13 - 15% CAGR விகிதத்தினை பதிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது வலுவான அடிப்படை காரணிகள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நீண்டகால கட்டமைப்பு காரணிகள், அதிகரித்து வரும் ஆயுஷ்மான் பாரத் போன்ற மலிவான திட்டங்கள் உள்ளிட்ட பல காரணிகளினால், குறைந்த வருமானம் பெறுபவர்களும் மருத்துவ வசதிகளை பெற சாதகமாக இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் மேற்கண்ட பல்வேறு காரணிகளும் நீண்டகால நோக்கில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த பயன்படும்.

கடந்த 2020 - 2022ம் நிதியாண்டில் மெடாண்டாவின் வருவாய், எபிடா மற்றும் நிகரலாபம் முறையே 20.2%, 55.4% மற்றும் 132.4% வளர்ச்சி கண்டுள்ளது. சராசரி எபிட்டா மார்ஜின் விகிதமானது 16% ஆகும். இதே PAT மார்ஜின் விகிதமானது 6% ஆகும். இதன் RoE/RoCE விகிதங்கள் 14%/9.3% ஆகும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வருவாய் 617 கோடி ரூபாயாகும். இதன் எபிட்டா மார்ஜின் 21.4% ஆகும்.

சுகாதார பிரிவில் உள்ள வளர்ச்சி, நேயாளிகளின் எண்ணிக்கை, செலவு, வலுவான நிதி நிலை, விரிவாக்கம் என பல காரணிகளுக்கு மத்தியில் நிறுவனத்தின் வளர்ச்சியானது நீண்டகால நோக்கில் முன்னோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் இந்த பங்கினை வாங்கி வைக்கலாம் என அஷிகா ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

ஜியோஜித் என்ன சொல்கிறது?

ஜியோஜித் என்ன சொல்கிறது?

மெடாண்டா அதன் போட்டி நிறுவனங்களுடம் ஒப்பிடும்போது, அதனை வாங்கி வைக்கலாம். இது வலுவான பிராண்ட் மதிப்பு, புதிய மருத்துவ மனைகள் சேர்க்கை, தொடர் விரிவாக்கம், மலிவு விலையில் சேவை, தேர்வு செய்யும் மருத்துவ சுற்றுலா, நம்பிக்கை என பல காரணிகளுக்கும் மத்தியில் இந்த நிறுவனத்தினை வாங்கி வைக்கலாம் என கூறியுள்ளது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Global health IPO opens november 3, 2022: should you buy it? What do brokerage firms say?

Global Health opens IPO november 3rd 2022, its Expires on November 7, 2022. The issue price for this share issue is fixed at Rs 319-336
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X