மும்பை: தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக பேங்க் நிஃப்டி உச்சம் தொட்டு வருகின்றது. இது தொடர்ச்சியாக வங்கி பங்குகள் ஏற்றம் கண்ட நிலையில் இந்தளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.
பல வங்கி பங்குகளும் இன்று 52 வார உச்சத்தினை எட்டியுள்ளது. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பாங்க ஆப் பரோடா உள்ளிட்ட பங்குகள் உச்சத்தினை எட்டின.
இந்த வங்கி பங்குகள் மட்டுமல்ல , ஜுன் ஜுன்வாலா பின்னணியில் உள்ள வங்கி பங்கும் ஏற்றம் கண்டுள்ளது.பிரபல பங்கு சந்தை முதலீட்டாளரும், இந்தியாவின் வாரன் பஃபெட் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதியின்று உடல் நல பிரச்சனையால் மறைந்தார். தற்போது அவரின் போர்ட்போலியோ முதலீடுகளை அவரது மனைவி ரேகா ஜுன் ஜுன்வாலா தான் கவனித்து வருகின்றார்.

52 வார உச்சம்
கனரா வங்கியும் இன்று 52 வார உச்சத்தினை எட்டிய பங்குகளில் ஒன்றாகும். இன்று காலை சற்றே சரிவில் தொடங்கிய கனரா வங்கியின் பங்கானது, அதன் பிறகு மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியது. இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது என் எஸ் இ-யில் 52 வார உச்சமான 333.95 ரூபாயினை எட்டியது.

குறைந்த மதிப்பில் கனரா வங்கி
சந்தை நிபுணர்களின் கணிப்பின் படி, கனரா வங்கி பங்கின் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இந்த பொதுத்துறை வங்கியானது அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, இந்த பங்கு விலையானது குறைந்த மதிப்பில் காணப்படுகின்றது.

விலை அதிகரிக்கலாம்
இந்த வங்கியின் மார்ஜின் விகிதமானது மூன்று காரணங்களுக்கு மத்தியில் மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று மார்ஜின் விகிதம் அதிகரிப்பு, வட்டி விகிதம் அதிகரிப்பு, லோவரிங் புரவீசன்ஸ் அதிகரிப்பு என சில காரணங்களுக்கு மத்தியில் இந்த பங்கின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது/.

இலக்கு விலை
கனரா வங்கியின்பங்கு விலையனது 360 ரூபாயினை மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பங்கின் விலையானது தொடர்ந்து அதிகரிக்க குறைந்த மதிப்பீடு என்பது காரணமாக அமையலாம். அவர்களுடைய காலாண்டு முடிவுகளும் சாதகமாக வந்துள்ளது. இதற்கிடையில் அடுத்து வரும் காலாண்டுகளிலும் இந்த போக்கானது தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை அதிகரிக்கும்
இதற்கிடையில் நீண்டகால நோக்கில் இந்த பங்கு விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெக்னிக்கலாகவும் இந்த பங்கு விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பங்கினை தற்போதைய லெவலில் வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதற்கு ஸ்டாப் லாஸ் 319 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர். இதன் இலக்கு விலை 350 - 360 ரூபாயாகவும் நிர்ணயம் செய்டுள்ளனர்.

ஜுன்ஜுன்வாலா வசம்
இந்த பொதுத்துறை வங்கியில் கனரா வங்கியானது செப்டம்பர் காலாண்டில், ராகேஷ் ஜுன் ஜுன்வாலா வசம் 2,68,47,400 பங்குகள் இருந்தது. இது மூலதனத்தில் 1.48% ஆக இருந்தது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.