ரூ.383 டூ 1,058.. 1 வருடத்தில் 150% லாபம்.. மின்டா இண்டஸ்ட்ரீஸால் ஜாக்பாட் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்கு சந்தை முதலீடுகளை பொறுத்தவரையில் நீண்டகால முதலீடு என்பது லாபகரமானதாகவே இருந்து வருகின்றது. 10 - 20 வருடங்களுக்கு முன்பு ஒரு முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தார் என வைத்துக் கொள்வோம்.

இன்று அவர் கோடீஸ்வரர் எனலாம். ஏற்கனவே பங்கு சந்தைகள் பெரும் ஏற்றத்தில் உள்ளனவே. இந்த சமயத்தில் வாங்கலாமா? என்ற கேள்வி எழம். நன்கு வளர்ச்சி கண்டு வரும் நிறுக்வனங்களை கண்கானித்து வாங்கினால், அந்த நிறுவனம் வளர்ச்சி காணும்போது, உங்களது பங்கும் லாபகரமானதாக மாறும்.

உதாரணத்திற்கு மின்டா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நீண்டகால நோக்கில் நலல் லாபகரமான நிறுவனமாக உள்ளது.

ஓராண்டில் என்ன நிலவரம்

ஓராண்டில் என்ன நிலவரம்

கடந்த ஒராண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 383 ரூபாயில் இருந்து, 1,058 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் 176% அதிகரித்துள்ளது. திங்கட்கிழமையன்று இந்த பங்கின் விலையானது 12% ஏற்றம் கண்டு அதன் ஆல் டைம் உச்சமான 1058.7 ரூபாயினை பிஎஸ்இ-ல் எட்டியது.

கூட்டு ஒப்பந்தம்

கூட்டு ஒப்பந்தம்

இந்த நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த FRIWO AG நிறுவனத்துடம் கூட்டு சேர்ந்த நிலையில், அதன் உற்பத்தி திறன் மற்றும் தொழில் நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றது. மின்டா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கூட்டு சேர்ந்திருந்தாலும், அதன் வசம் 50.1% பங்குகள் உள்ளது.

பெரும் முதலீடு

பெரும் முதலீடு

இந்தியாவில் அடுத்த 5-6 ஆண்டுகளில் மின்சார இருசக்கர வாகனங்களின் எழுச்சியினை நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்தியாவில் இத்தகைய வளர்ச்சிக்கு ஆதரவாக அடுத்த 6 ஆண்டுகளில் 390 கோடி ரூபாயினை, இந்த கூட்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளில் 160 கோடி ரூபாய் முதலீட்டினை செய்ய திட்டமிட்டுள்ளது.

இன்னும் அதிகரிக்கலாம்

இன்னும் அதிகரிக்கலாம்

ஆக நீண்டகால நோக்கில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த நிறுவனத்தில் நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்த நிறுவன பங்கின் விலையானது 9,000% மேலாக அதிகரித்துள்ளது.

லாபம் அதிகரிக்கலாம்

லாபம் அதிகரிக்கலாம்

மூலதன பொருட்கள் விலை உயர்வு, சம்பளதாரர்களின் சம்பள உயர்வு என பல காரணிகளினால் சற்று தடுமாற்றம் கண்டாம், இந்த நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சி விகிதமானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் முன்பை விட அதிகரித்துள்ளது. இது வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs.383 to Rs.1,058: Minda industries share delivered over 150% return in 1 year

Rs.383 to Rs.1,058: minda industries share delivered over 150% return in 1 year/ ரூ.383 டூ 1,058.. 1 வருடத்தில் 150% லாபம்.. மின்டா இண்டஸ்ட்ரீஸால் ஜாக்பாட் தான்.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X