ரூ.666 டூ ரூ.3,397.. 410% லாபம்.. இனியும் ஏற்றம் காணுமா.. வாங்கலாமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் நாம் வாங்கும் பங்கு மட்டும் ஏறவே மாட்டேங்குது? சொல்லப்போனால் நாம் வாங்கிய பிறகு தொடர்ந்து பங்கின் விலை இறங்கிக் கொண்டே இருக்கிறது என்று நண்பரின் புலம்பலை கேட்டேன். ஏன் அந்த பங்கு இறங்குகிறது என கேட்டால் தெரிவதில்லை.

 

இன்று நம்மில் பலரும் இதே நிலையில் தான் இருக்கிறோம். எதை பற்றியும் யோசிக்காமல் வாங்கி விட்டு, பின்னர் புலம்பி என்ன பயன்.

பொதுவாக ஒரு பங்கின் விலை குறைகிறது எனில் அந்த நிறுவனத்தின் அறிவிப்பினால் குறைந்துள்ளதா? இல்லை எனில் வேறு என்ன காரணம்? என்ற பல காரணங்களையும் அலசி ஆராய வேண்டும். ஒரு பங்கு விலை குறைந்தால் மட்டும் அல்ல, அதிகரித்தாலும் அது என்ன காரணத்தினால் அதிகரிக்கரிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்று என்ன பங்கு?

இன்று என்ன பங்கு?

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் நிறுவனம் ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் (Hinduja Global Solutions) நிறுவனத்தின் பங்கு விலை பற்றித் தான். அதிலும் கடந்த 2 அமர்வுகளாகவே தொடர்ந்து அப்பர் சர்க்யூட் ஆகி வரும் இந்த பங்கின் விலையானது, கடந்த 1 ஆண்டில் பெருத்த லாபத்தினை கொடுத்துள்ளது. இந்த ஏற்றத்திற்கு என்ன காரணம்? எதற்காக இந்த பங்கின் விலை இப்படி ஏற்றம் கண்டு வருகின்றது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

கடந்த ஜூன் காலாண்டில் 117.02 கோடி ரூபாய் நிகர லாபத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 47.94 கோடி ரூபாய் லாபத்தினை கண்டிருந்தது. இது இருமடங்கிற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது. வலுவான வருவாயை கண்ட நிலையில் தான், இந்த நிறுவனம் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.

பட்டையை கிளப்பும் வருவாய்
 

பட்டையை கிளப்பும் வருவாய்

இதே செயல்பாட்டின் மூலமாக கிடைத்த வருவாய் விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 25% அதிகரித்து, 1,550.52 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1,235.89 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு பரபரப்பான நிலையில் தான் இந்த பங்கின் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.

EPS விகிதம்

EPS விகிதம்

கடந்த ஜுன் 2020ல் EPS விகிதம் 22.97 ரூபாயாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் காலண்டில் 56.05 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இன்று இந்த பங்கின் விலையானது இரண்டாவது நாளாக இன்றும் 5% அப்பர் சர்க்யூட் ஆகி, 3397.60 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. முந்தைய அமர்வில் 3,235.85 ரூபாயாக முடிவடைந்திருந்தது.

ஏற்றம் காணலாம்

ஏற்றம் காணலாம்

இதற்கிடையில் மிட் கேப் வகையை சேர்ந்த இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 7,094 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது 5 நாள், 20 நாள், 10 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜூக்கும் மேலாக வர்த்தகமாகி, இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது.

லட்சங்களில் லாபம்

லட்சங்களில் லாபம்

இந்த பங்கின் விலையானது கடந்த 12 மாதங்களில் முதலீட்டாளர்களை லட்சாதிபதியாக்கியுள்ளது எனலாம். கடந்த ஆண்டில் 666 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது, தற்போது 3397.6 ரூபாய் என்ற நிலையில் காணப்படுகிறது. கடந்த 12 மாதங்களில் 410% ஏற்றம் கண்டுள்ளது.

முதலீட்டாளர்களுக்கு கொட்டிக் கொடுத்த லாபம்

முதலீட்டாளர்களுக்கு கொட்டிக் கொடுத்த லாபம்

இந்த பங்கில் கடந்த ஆண்டில் 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 5 லட்சம் ரூபாய். இதே 5 லட்சம் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 25 லட்சம் ரூபாய்க்கு மேல். மொத்தத்தில் லட்சாதிபதி தான். இந்த காலகட்டத்தில் சென்செக்ஸ் 42% ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒன்பது புதிய ஒப்பந்தங்கள்

ஒன்பது புதிய ஒப்பந்தங்கள்

இந்த நிறுவனம் ஜூன் காலாண்டில் ஒன்பது புதிய ஒப்பந்தங்களை செய்துள்ளதாக கூறியுள்ளது. இது புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் பழைய வாடிக்கையாளார்களிடம் இருந்து பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வருடத்தில் பிற்பாதியில் நாங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிகாக பெரும் முதலீடினை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆக இது இன்னும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றே கூறலாம்.

சுகாதார துரையில் வலுவான வளர்ச்சி

சுகாதார துரையில் வலுவான வளர்ச்சி

குறிப்பாக சுகாதாரத் துறையில் இருந்து ஒரு வலுவான வளர்ச்சியினை எதிர்பார்க்கிறோம். நாங்கள் இங்கிலாந்து மற்றும் ஜமைக்காவில் புதிய மையங்களை அமைத்து, எங்கள் புதிய வாடிக்கையாளர்களை ஆதரிப்போம். பலரையும் பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளோம் என ஹிந்துஜா குளோபல் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தா டிசார்கர் கூறியுள்ளார்.

சாதகமான காரணிகள்

சாதகமான காரணிகள்

கடந்த ஜூன் காலாண்டில் மட்டும் அல்ல, இந்த நிறுவனம் தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாகவே நேர்மறையான முடிவுகளை அறிவித்து வருகின்றது. மேலும் இதன் குறைந்த அளவு கடன், அதன் வளர்ச்சியினை ஊக்குவிக்கவும், சேவையை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

டெக்னிக்கல் பேட்டர்ன்கள்

டெக்னிக்கல் பேட்டர்ன்கள்

இதே டெக்னிக்கலாக பார்க்கும்போது இந்த பங்கின் விலையானது தற்போது சற்று பையிங் டிரெண்டுக்கு மாறி வருகின்றது. குறிப்பாக MACD, Bollinger Band, KST, and OBV உள்ளிட்ட குறியீடுகளும் இந்த பங்கிற்கு சாதகமாக உள்ளன. ஆகை இந்த பங்கின் விலையானது இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஹெல்த்கேர் துறையில் சீரான வளர்ச்சி

ஹெல்த்கேர் துறையில் சீரான வளர்ச்சி

கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனத்தின் ஹெல்த்கேர் வணிகமானது கணிசமான அளவு வளர்ச்சியை, தொடர்ந்து கண்டு வருகின்றது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் உருவாக்கிய நிதியை பயன்படுத்துவோம்.

இது HGS நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சி வழிவகுக்கும் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹிந்துஜா குழும வணிகம்

ஹிந்துஜா குழும வணிகம்

ஹிந்துஜா குழுமம் வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம், மீடியா, பொழுதுபோக்கு, வங்கி மற்றும் நிதி சேவைகள்., உள்கட்டமைப்பு, சைபர் பாதுகாப்பு, எண்ணெய் மற்றும் சிறப்பு இரசாயனங்கள், பவர் செக்டார், ரியல் எஸ்டேட், டிரேடிங் மற்றும் ஹெல்த்கேர் துறையிலும் தூள் கிளப்பி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs.666 to Rs.3397; this hinduja group stock gave 410% return in 12 months; is it still worth to buying this stock?

Hinduja Global solutions share price continually trade higher after company posted a strong growth in Q1
Story first published: Wednesday, August 11, 2021, 18:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X