எட்டாக் கனியாகும் தங்கம்!: ஒரு பவுன் ரூ.25,000ஐ தொடப் போகுது!!

By Mayura Akilan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எட்டாக் கனியாகும் தங்கம்!: ஒரு பவுன் ரூ.25,000ஐ தொடப் போகுது!!
தங்கம் விலை பவுனுக்கு 280 ரூபாய் வரை அதிகரித்து ஒரு பவுன் 24,424 ரூபாயாக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிரடியாக உயர்ந்து வரும் இந்த மஞ்சள் நிற உலோகம் சமான்ய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறிவருகிறது.

ஒரு கிராம் தங்கம் இன்றைய சந்தை விலையில் ரூ.3053 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது கடந்த பத்தாண்டுகளுக்கு முன் அதாவது 2002 ம் ஆண்டு ஒரு பவுன் விலை. அன்றைய கால கட்டத்திலேயே நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெண் குழந்தைகளுக்கு பத்து பவுன் நகை போட்டு திருமணம் செய்து கொடுப்பது என்பது சிரமமான காரியம். ஆனால் இன்றைக்கு பத்து பவுன் நகை என்பது செய்கூலி சேதாரம் எல்லாம்சேர்த்து மூன்று லட்சம் இருந்தால்தான் முடியும்.

2009 ம் ஆண்டு ஒரு பவுன் தங்கம் 11 ஆயிரம் ரூபாயை எட்டியது. கடந்த மூன்று ஆண்டுகளில் 25 ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது. தங்கம் விலை உயர்வுக்கான காரணம் பல கூறப்பட்டாலும் பயன்பாடும், தேவைகளும் அதிகரிப்பதே காரணம் என்கின்றனர் நிபுணர்கள். மேலும்

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இந்தியாவில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயருகிறது. நடுத்தர வர்க்கத்தினரும், பணக்காரர்களும் பணமாக வைத்திருப்பதை விட தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

இந்தியாவில் தற்போது திருமணம் மற்றும் பண்டிகை சீசன் என்பதால் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கம் ஒரு கிராம் ரூ.3053-க்கு விற்கப்படுகிறது.

வியாழக்கிழமை தங்கத்தின் விலை பவுன் ரூ. 24,144ஆக இருந்து. இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் மேலும் கிராமுக்கு ரூ.35 அதிகரித்தது. வெள்ளிக்கிழமை என்பதால் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்ட அறிவிப்பினை அடுத்து தங்கத்தின் விலை ரூ.280 உயர்ந்து பவுன் 24,424 ரூபாய் ஆனது.

கடந்த 6-ந்தேதி சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ. 23 ஆயிரத்து 904 ஆக இருந்தது.

8-ந்தேதி அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்தது. அதன்படி ஒரு பவுனுக்கு ரூ. 528 அதிகரித்தது தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 24,176 ஆக விற்பனை ஆனது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கத்தில் விலை ஆண்டு இறுதிக்குள் பவுன் 30 ஆயிரம் ரூபாயை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

தங்கத்தைப் போல வெள்ளியின் விலையும் உயர்ந்து வருவதுதான் வேதனையான விசயம். வெள்ளி ஒரு கிராம் ரூ.70.50 ஆக உயர்ந்துள்ளது.

உலோகங்களின் விலை உயர்வு பெண் குழந்தையை வைத்திருப்பவர்கள் வயிற்றில் இந்த செய்தி புளியை கரைத்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை என்கின்றனர் நிபுணர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold rate Surges suddenly | எட்டாக் கனியாகும் தங்கம்!: ஒரு பவுன் ரூ.25,000ஐ தொடப் போகுது!!

Gold and Silver rates are increasing sharply now. The current price of Gold in Chennai Market is Rs 24,424 per sovereign. Silver rate is Rs 70.50 paise per gram.
Story first published: Friday, September 14, 2012, 13:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X