பட்ஜெட் 2013 எதிரொலி: சொத்து வாங்கினால், விற்றால் என்ன பாதிப்பு ஏற்படும்?

Posted By:
Subscribe to GoodReturns Tamil

சிதம்பரத்தின் பட்ஜெட்டும்: சொத்து முதலீடுகள் பாதிப்பும்
பெங்களூர்: 2013-2014ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டால் சொத்துகளில் முதலீடு செய்வது எந்த வகையில் பாதிக்கப்படும் என்று பார்ப்போம்.

2013-2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் இனி ரூ. 50 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை விற்கையில் 1 சதவீத வரி செலுத்த வேண்டும் என்று அறிவித்தார். அதாவது நீங்கள் ரூ. 50 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள நிலமோ, வீடோ விற்றால் 1 சதவீத வரி கட்ட வேண்டும். இது ஒரு பாதிப்பு ஆகும். ஆனால் விவசாய நிலத்தை விற்கையில் இந்த 1 சதவீத வரி செலுத்தத் தேவையில்லை.

வீட்டுக் கடன் மீதான வரி விலக்கு ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது தான் இன்னொரு பாதிப்பு. இது நல்ல விஷம் தானே அதில் பாதிப்பு என்னவென்று நினைக்கலாம்.

நீங்கள் முதல் முறையாக வீடு வாங்கும் போது அதுவும் ரூ.25 லட்சத்திற்கு வீட்டுக் கடன் வாங்கினால் மட்டுமே நீங்கள் செலுத்தும் வட்டியில் ரூ. 1 லட்சம் கூடுதலாக வரி விலக்கு பெற முடியும். வரி விலக்கு பெற வேண்டும் என்றால் அந்த வீட்டில் நீங்கள் குடியிருக்க வேண்டும். வாடகைக்கு விட்டால் வரி விலக்கு பெற முடியாது. வீட்டுக் கடன் வாங்குகையில் வட்டி தவிர்த்து முதல் தொகையில் ரூ. 1 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How Union Budget 2013 affects property investments? | சிதம்பரத்தின் பட்ஜெட்டும்: சொத்து முதலீடுகள் பாதிப்பும்

The Union Budget 2013 has made a few changes, which is likely to impact the way you invest in property. Firstly, the Finance Minister has proposed a 1 per cent TDS on property valued at Rs 50 lakh and above. Another way property investment has been affected is through the increase of interest exemption on home loans.
Story first published: Friday, March 1, 2013, 13:04 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns