தங்கத்தின் பயன்பாட்டை குறைக்க, அரசின் நடவடிக்கை!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில், தங்க நுகர்வைத் தவிர்ப்பதன் மூலம் ரூபாயின் கௌரவத்தை சிறிதளவேனும் நிலைநிறுத்த அனைவரும் தம்மால் இயன்ற வரையில் முயன்று வருகின்றனர். அதிக அளவிலான தங்க நுகர்வு அதிக அளவிலான டாலர் புழக்கத்தை உருவாக்கும்; இத்தகைய சூழல், இந்திய ரூபாயின் மீது அதிக அழுத்தத்தை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பல்வேறு சங்கங்கள், அரசாங்கம், ஆர்பிஐ மற்றும் நிறுவனங்கள் தங்க நுகர்வைக் குறைப்பதில், எத்தகைய பங்களிப்பை வழங்குகின்றன என்பது பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

ஸ்பாட் பேமண்டு
 

ஸ்பாட் பேமண்டு

ஜூன் மாத ஆரம்பத்தில், தங்க இறக்குமதிகள் அனைத்தும் 100% ரொக்க அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்று ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது. அதாவது, கடனடிப்படையில் வர்த்தகம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதே இதன் அர்த்தமாகும்.

இறக்குமதி வரி

இறக்குமதி வரி

தங்க இறக்குமதிகளை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில், அரசாங்கம் அவற்றுக்கான இறக்குமதி வரிகளை சுமார் 6 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஆனால், மற்றொரு புறம், அடிக்கடி சுங்க வரிகளை உயர்த்தினால் அது கடத்தலுக்கு வழி வகுத்து, அரசாங்கத்துக்கு பெரும் நஷ்டத்தையே உருவாக்கும் என்ற வாக்குவாதமும் எழுந்து உள்ளது.

தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள்

தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள்

ஆல் இந்திய ஜெம்ஸ் அண்ட் ஜுவல்லரி டிரேட் ஃபெடரேஷன் அமைப்பு அதன் உறுப்பினர்கள் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் விற்பதை தடை செய்துள்ளது.

ஆர்கேப் நிறுவனம்
 

ஆர்கேப் நிறுவனம்

"ரிலையன்ஸ் காபிடல் (ஆர்கேப்), அரசு மற்றும் ஆர்பிஐ ஆகியவற்றின் பாலிஸி தொடர்பான அனைத்து கொள்கைகளையும் ஆதரிக்கக் கடமைப்பட்டுள்ளது. வர்த்தகம், வாணிபம் மற்றும் தொழில் சார்ந்த துறைகளில் உள்ள பங்குதாரர்கள் பொறுப்பான முறையில் நடந்து கொண்டு தங்க இறக்குமதிகளைக் குறைக்க உதவுவார்கள் என்று நாங்கள் உளமார நம்புகிறோம்." என்று ரிலையன்ஸ் காபிட்டலின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு சாம் கோஷ் தெரிவித்துள்ளார்.

கிராமப்புற வங்கிகள்

கிராமப்புற வங்கிகள்

இனி, தங்க ஆபரணங்கள் மற்றும் நாணயங்களைப் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாக கடன் அளிக்கக்கூடாது என்று ஆர்பிஐ, கிராமப்புற வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது.

இடிஎஃப்களுக்கு லோன்கள் கிடையாது

இடிஎஃப்களுக்கு லோன்கள் கிடையாது

தங்கத்திற்கு ஈடாக அளிக்கப்படும் முன்தொகைகளை மேலும் குறைக்கும் நோக்கில் ஆர்பிஐ, கோல்டு-எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்கள் மற்றும் கோல்டு மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு கடன் கொடுக்க, வங்கிகள் அனுமதிக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The mad rush to prevent gold consumption

With the rupee plunging to abysmal depths, everybody seems to be contributing to salvage some pride for the rupee, by preventing consumption of gold.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?