பங்கு சந்தையில் லாபம் அள்ளித் தரும் 7 துறைகள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்றைய நாட்களில் முதலீடு செய்வதென்பது மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது. இன்றைய வியாபார உலகத்தில் முன்னேறிச் செல்லவும் மற்றும் இலாபம் பெறவும் மற்றும் சந்தையிலுள்ள பிடிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் முதலீடு செய்வது தான் சிறந்த வழியாகும்.

 

முதலீடு செய்வது இலாபகரமான விஷயமாக இருந்தாலும், அது ஒவ்வொரு வருடமும் நிலையாக இருப்பதில்லை. இதில் நிறைய ஆபத்துக்களும் உள்ளன. எனவே முதலீடு செய்வதற்கு முன்னதாக நன்றாக ஆராய்ந்து, கற்றுத் தேர்ந்து இருக்க வேண்டியது அவசியமாகும்.

ஊங்களுடைய பணத்தைச் சேமிக்க எந்தவிதமான துறையை தேர்ந்தெடுப்பது என்று தீர்மானிப்பது தலைவலியைத் தரக்கூடிய அனுபவமாக இருக்கும். ஏனெனில், சந்தையின் நிலை மாறிக்கொண்டே இருக்கும். தர்போதைய நிலையை வைத்து 2014-ம் ஆண்டில் முதலீடு செய்ய வேண்டிய துறைகளைப் பற்றி நல்லதொரு முடிவை எடுக்கும் முன்னர், இங்கே பரிந்துரைக்கப்பட்டுள்ள துறைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

#1 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு சேவைத் துறை

#1 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு சேவைத் துறை

உலகமயமாக்கலும், தொழில்மயமாக்கமும் இந்த உலகத்தையே சுருங்கச் செய்து விட்டன. இந்த சேவைகள் இல்லாமல், நண்பர்களுடனும் மற்றும் உறவினர்களுடனும் நம்முடைய அறையில் இருந்தவாறே, எல்லைகளைத் தாண்டி அரட்டையடிக்க முடியாது. வேகமாக எழுச்சி பெற்று வரும் இந்த புதிய பிரபலமான துறைகளில் முதலீடுகள் செய்வது, உங்களுக்கு நல்ல இலாபத்தை திரும்பக் கொடுக்கும் என்பது நிச்சயம்.

#2 சுகாதாரத் துறை

#2 சுகாதாரத் துறை

நல்ல ஆரோக்கியத்திற்காக மக்கள் கடுமையாக உழைத்து வரும் வேளையில், ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுகளுக்கான தேவையும் அதிகமாக இருக்கும். எனவே, சுகாதாரத்துறையும் முதலீடு செய்ய மிகவும் ஏற்ற துறையாகும்.

சுகாதாரத் துறை வேகமாக வளர்ந்து வருவதால், பொது மற்றும் தனியார் துறைகளில் வாளிப்பான சந்தைகளை உருவாக்கி வருகிறது. உலகெங்கும் உள்ள நபர்களுக்குத் தேவையாக இருக்கக் கூடிய சுகாதார சேவைகளை கொடுத்து வரும், இந்த துறையில் முதலீடு செய்வது மிகவும் இலாபகரமானதாக இருக்கும்.

#3 நுகர்வோர் விருப்பம்
 

#3 நுகர்வோர் விருப்பம்

மக்களின் விருப்பங்கள் தொடர்பான விஷயங்களையே இந்த துறை கொண்டுள்ளது. தங்களுக்குத் உண்மையில் தேவையில்லாத சேவைகள் மற்றும் பொருட்களில் மக்கள் பணத்தை செலவு செய்து வருகிறார்கள். அவசியமற்றதாக கருதப்படும், இவற்றை ரெஸ்டாரெண்டுகள், ஹோட்டல்கள், பொழுதுபோக்கு, ஸலோன் மற்றும் ஆடம்பர பொருட்கள் என வகைப்படுத்தலாம்

மனிதர்களின் விருப்பங்களுக்கு முடிவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த இரகசியமாகும். எனவே அழியாத இடத்தைப் பெற்றிருக்கும் இந்த துறை, முதலீட்டாளர்களுக்கு மிகவும் இலாபகரமானதாகவும், சந்தைகளில் இறக்கம் கண்டாலும் தாக்குப்பிடிக்கக் கூடியதாகவும் இருக்கும்.

#4 தொழில் துறை

#4 தொழில் துறை

ஒரு கட்டுமானம் நடக்கக் கூடிய இடங்களில் நீங்கள் பார்க்கும் இயந்திரங்களும் மற்றும் கருவிகளும் அல்லது சுவற்றில் ஆணி அடிக்க உதவும் எளிமையான கைக்கருவிகளும் அடங்கியவை தான் தொழில் துறைகளாகும்.

முழு வேகத்தில் தொழில்மயமாக்கம் நிகழ்ந்து வரும் வேளையில், புதிய கண்டுபிடிப்புகள் வந்து விழும் வேளையில், பல்வேறு வகையிலான இயந்திரங்களின் பயன்பாடுகளும் அதிகரித்து வருகிறது. எனவே, நிலையான வளர்ச்சியை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இலாபகரமான துறையாக தொழில்துறை உள்ளது.

#5 நுகர்வோர் அத்தியாவசிய பொருட்கள்

#5 நுகர்வோர் அத்தியாவசிய பொருட்கள்

மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருட்களால் சந்தை நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் முக்கியமான பகுதியாக இருக்கும் இந்த பொருட்களையே, மக்களில் ஒருவராகிய நீங்களும் எதிர்பார்த்திருப்பீர்கள். இந்த சந்தைக்கான துறையில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு இலாபத்தை ஈட்டித் தரும் என்பதில் ஐயம் இல்லை. இந்த துறையில் முதலீடு செய்வதன் மூலம் சந்தையில் ஒரு பொழுதும் வளர்ச்சியை சந்திக்க மாட்டீர்கள். ஏனெனில், தங்களிடம் குறைவான பணம் இருந்தால் கூட, அத்தியாவசியமாக தேவைப்படும் இந்த பொருட்களை மக்கள் வாங்காமல் இருக்க மாட்டார்கள்.

 #6 மூலப்பொருட்கள் துறை

#6 மூலப்பொருட்கள் துறை

உலகெங்கும் உள்ள பல்வேறு நிறுவனங்களும் செயல்படத் தேவையான மூலப்பொருட்களின் துறையாக இது உள்ளது. ஒரு வீட்டிற்குத் தேவைப்படும் சிறிய பொருளிலிருந்து, பெரும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான பொருட்கள் என பல்வேறு மூலப்பொருட்களின் அளிப்பும் இருந்தால் தான் உங்களால் வேலை செய்யவும் மற்றும் உற்பத்தி செய்யவும் முடியும்.

தொழில்மயமாக்கத்தால் பெரும் வளர்ச்சி பெற்று வரும் துறைகளின் தொடர்புடன், சந்தையில் இவற்றைப் பெறுவதற்கான தேவை அதிகமாக இருக்கும். எனவே, இது இலாபமும் குறைவில்லாமல் இருக்கும் துறையாகும்.

#7 பவர் மற்றும் எனர்ஜி

#7 பவர் மற்றும் எனர்ஜி

முதலீட்டாளர்களைப் பொறுத்த வரையில், பவர் மற்றும் எனர்ஜி துறை மிகவும் அறியப்பட்ட துறையாக உள்ளது. இலாபத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த துறையின் பங்குகளை வாங்கலாம். அதிகரித்து வரும் எண்ணைய், எரிவாயு மற்றும் மின்சாரத்தின் விலைகள் காரணமாக, இந்த துறையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அதிகமான ஆர்வம் காட்டவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 Top-Performing Sectors to Invest In 2014

Investing is an important tool for majority of people these days. It’s the best way to surge ahead in the business world and a great tool for gaining profits and strengthening the market hold.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X