பழைய தங்கத்திற்கு மாற்றாக புதிய தங்கத்தை வாங்கும் ரிசர்வ் வங்கி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் இந்தியா சுதந்திரத்திற்கு முன்னதாக வாங்கப்பட்ட பழைய தங்கத்திற்கு மாற்றாக புதிய தங்கத்தை மாற்றிக் கொள்ளவும், இந்த மஞ்சள் நிற உலோகத்தின் இருப்பை வரைமுறைப்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

இதற்கு ரிசர்வ் வங்கி, முன்மொழியப்பட்ட வங்கிகளிடம் தங்கத்தை மாற்றுவதற்கான விலைகூறல்களை (Quotes) கேட்டுள்ளது.

வங்கிகள்

வங்கிகள்

முன்மொழியப்பட்ட வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பாக தங்கத்தை இறக்குமதி செய்யும். அதன் தொடர்ச்சியாக தங்கம் மாற்றிக் கொள்ளப்படும். இந்த திட்டத்தின் படி, இந்திய ரிசர்வ் வங்கியானது, நாக்பூரில் உள்ள தன்னுடைய காப்பறையில் (Vault) வைக்கப்பட்டுள்ள சுதந்திர காலத்திற்கு முந்தைய, முழுமையான சொக்கத் தங்கமாக அல்லாத தங்கத்தை மாற்றிக் கொள்ள உள்ளது.

உலக தரம்

உலக தரம்

ரிசர்வ் வங்கியிடம் உள்ள தங்கத்தை உலகளாவிய தரத்திற்கு நிகராக கொண்டு வருவதும் மற்றும் இருப்பில் இருக்கும் தங்கத்தை அதனுடைய வெளிநாட்டு காப்பாளரான, பேங்க் ஆஃப் இங்கிலாந்திடம் கொண்டு சேர்ப்பதுமாகவுமே இந்த செயல்பாடு இருக்கும் என்று கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

தங்க இருப்பின் மதிப்பு

தங்க இருப்பின் மதிப்பு

இந்த செயல்பாடு முழுமையாக, புத்தக பதிவாகவும் மற்றும் பண பரிமாற்றமே இல்லாததாகவும் இருக்கும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஜுன் 27-ம் நாள் வரையிலும் ரிசர்வ் வங்கியிடம் இருந்த தங்கத்தின் மதிப்பு 20.79 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

தங்கத்தின் புழக்கம் அதிகரிக்கும்

தங்கத்தின் புழக்கம் அதிகரிக்கும்

முன்மொழியப்பட்ட வங்கிகளைக் கொண்டு ரிசர்வ் வங்கி, தன்னிடமுள்ள பழைய தங்கத்தை சந்தைக்கு கொண்டு வரும் என்று ஒரு புல்லியன் வணிகர் (தங்கத்தை விற்பவர்) தெரிவத்துள்ளார். இறக்குமதியாகும் தங்கத்தை இந்த வகையில் குறைத்திடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

நடப்பு கணக்கு பற்றாக்குறை

அதே நேரத்தில், நடப்பு பற்றாக்குறை கணக்கின் (Current Account Deficit) மீது மேலும் சுமை இல்லாமல், தங்கம் கிடைப்பது அதிகரிக்கப்படும். ஏனெனில், ஈராக்கில் நிலவி வரும் போரினால் பெட்ரோல் விலை அதிகரித்து நடப்பு பற்றாக்குறை கணக்கில் சுமை ஏற்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

அதிகரித்து வரும் நடப்பு பற்றாக்குறை கணக்கின் போக்கை தடுத்து நிறுத்தும் விதமாக, இறக்குமதிகளின் மீதான வரியை அரசு உயர்த்தியுள்ளது மற்றும் தங்கம் இறக்குமதி செய்வதையும் ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது மற்றும் இந்த மதிப்பு மிக்க உலோகத்தை நாட்டிற்கு உள்ளே கொண்டு செல்வதற்கும் பல்வேறு முன்-கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI initiates swap of old gold with new one

The Reserve Bank has undertaken an excercise to swap old gold in its reserves with a new one with a view to standardise the yellow metal stock.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X