தங்க முதலீட்டுப் பத்திரங்கள் நவம்பர் மாதத்தில் வெளியீடு: மத்திய அரசு அறிவிப்பு

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய சந்தையில் தங்க இறக்குமதி மற்றும் பற்றாக்குறையைக் குறைக்க மத்திய அரசு நவம்பர் மாதத்தில் 2 தங்க முதலீட்டுப் பத்திரங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

 

இந்தியாவில் தங்க நகைகளைச் செய்யும் வாடிக்கையாளர்களை விடவும், தங்கம் மீதான முதலீட்டில் அதிகமானோர் ஈட்டுப்பட்டு வருகின்றனர். இத்தகையை முதலீட்டாளர்களின் மூலமாகத் தான் அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் நடப்பு கணக்குப் பற்றாக்குறையில் மிகப்பெரிய வித்தியாசம் ஏற்படுகிறது.

தங்கம் இறக்குமதி மற்றும் அதன் பற்றாக்குறை குறைக்க மத்திய அரசு பல முறை இறக்குமதி வரியை உயர்த்தியும் பயன் இல்லை. இப்பிரச்சனையைக் களைய மத்திய அரசு தங்கம் மீதான முதலீட்டுப் பத்திரங்களை வெளியிடத் திட்டமிட்டு, நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் பெற்றது.

(முதலீட்டாளர்களுக்கு நேரடி லாபம் தரும் தங்க முதலீட்டுப் பத்திரம்)

நவம்பரில் வெளியீடு..

நவம்பரில் வெளியீடு..

தங்க பணமாக்கும் திட்டம் மற்றும் தங்க சவரன் திட்டம் ஆகிய பெயரில் மத்திய அரசு இரு முதலீட்டுப் பத்திரங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை செய்து வருகிறோம். மேலும் இரண்டு திட்டங்களுமே நவம்பர் மாதத்தில் வெளியிடப்படம் எனப் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

முதிர்வு காலம் மற்றும் முதலீட்டு அளவு

முதிர்வு காலம் மற்றும் முதலீட்டு அளவு

இப்பத்திர முதலீட்டின் முதிர்வு காலம் 1- 15 வருடமாகவும், 5 கிராம், 10 கிராம், 100 கிராம் வரையில் முதலீடு செய்யும் விதமாகப் பத்திரங்களை மத்திய அரசு வடிவமைத்துள்ளது.

அதிகபட்சமாகத் தனிநபர் 500 கிராம் வரையில் முதலீடு செய்யலாம். இவை அனைத்தும் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே, இதில் என்ஆர்ஐ முதலீடு செய்ய முடியாது.

நிதி திரட்டுதல்
 

நிதி திரட்டுதல்

இத்திட்டத்தில் சுமார் 15,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படும் என மத்திய அரசு கணக்கிட்டுள்ளது.

தங்கம் பற்றாக்குறை

தங்கம் பற்றாக்குறை

முதலீட்டாளர்களுக்காகத் தங்கம் மீது நேரடி தொடர்புடைய இரு முதலீட்டுப் பத்திரங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளதால் தங்க இறக்குமதி அதிகளவில் குறையும்.

இதன் பின் உள்நாட்டில் நிலவும் பற்றாக்குறையைத் தீர்க்க, அசோக சக்கிரம் சின்னம் அச்சடிக்கப்பட்ட தங்க நாணயங்களை வெளியிட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தங்க நாணயங்கள்

தங்க நாணயங்கள்

தங்க நாணயங்களை அச்சடிக்கவும், அதனை விநியோகம் செய்யவும் MMTC அமைப்பு தனது பணிகளைத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் ஒப்புதல்

நாடாளுமன்றத்தில் ஒப்புதல்

உள்நாட்டில் நிலவும் பற்றாக்குறையைத் தீர்க்கத் தங்க நாணயங்களை வெளியிடும் திட்டத்தை அருண் ஜேட்லி 2015ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் அறிவித்தார்.

இதன் பின் நாட்டில் தங்க இறக்குமதியை கட்டுப்படுத்த மோடியின் திட்ட வடிவமைப்பின் படி தங்க முதலீட்டுப் பத்திர வெளியீடுகளுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தங்க முதலீட்டு பத்திரம்..

தங்க முதலீட்டு பத்திரம்..

இதைக் கிளீக் செய்யவும்.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold monetization, bond schemes to be launched in November

The government will next month launch two gold schemes—monetization and sovereign bond—to rein in demand for physical gold and contain its import.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X