இனி வருடத்திற்கு 4 கிலோ தங்கம் வாங்கலாம்.. வருமான வரி துறை எந்த கேள்வியும் கேட்காது..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

மத்திய அமைச்சகம் புதன் கிழமை வெளியிட்ட அறிக்கையில் சவரன் தங்கம் பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்பர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஆண்டுக்கு 500 கிராம் வரம்பை உயர்த்தி 4 கிலோ வரை வாங்கலாம் என்று அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள இந்த வரம்பு நிதி ஆண்டைப் பொருத்து என்றும் இதனை வங்கி மற்றும் இல்லாமல் பங்கு சந்தை மூலமாகவும் வாங்கலாம் என்று அமைச்சக கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்டது.

4 கிலோ தங்கம்

அறிக்கையின் படி இந்து கூட்டுக் குடும்பத் தனிநபர் ஒருவர் ஒரு நிதி ஆண்டிற்கு 4 கிலோ வரையிலும் இதுவே அறக்கட்டளை என்றால் 20 கிலோ வரையிலும் தங்க பத்திரமாக வாங்கலாம்.

வீட்டில் உள்ள தங்கத்துடன் இது கணக்கில் வராது

மேலும் மத்திய அமைச்சகம் அறிவித்துள்ள இந்த வரம்பு ஏற்கனவே விட்டில் உள்ள தங்க அல்லது வங்கி தங்கம் திட்டங்கள் மற்றும் நிதி நிறுவன திட்டங்களில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

எங்கு வாங்குவது

எனவே தங்கப்பத்திரத்தினை தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தை, வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் என எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம்.

குறிப்பிடத்தக்க மாற்றங்கள்

தங்கம் பத்திரத்தில் முதலீடுகளை அதிகரிக்க இந்த வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கியக் குறிக்கோள்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இலக்குகளைப் பொறுத்தவரை நிதி திரட்டல், தங்கத்தின் இறக்குமதியால் ஏற்படுகின்ற பொருளாதாரத் தடைகள் குறைக்கப்படுதல் மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை (CAD) குறைப்பது ஆகியவையாகும்.

முதலீட்டு மாற்றுத் திட்டம்

வெவ்வேறு வட்டி விகிதங்கள் மற்றும் ஆபத்துக் காலங்களில் இருந்து பாதுகாப்பு அல்லது வேறுபட்ட வகை முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு மாற்றுகளை வழங்குவதற்கான உத்திகள் ஆகியவற்றைக் கொண்டு சவரன் தங்கப் பத்திர திட்டத்தில் மாறுபாடுகளை வடிவமைத்து அறிமுகப்படுத்த நிதி அமைச்சகம் வளைந்து கொடுக்கும்.

சவரன் தங்க பத்திரம் திட்டத்தின் கீழ் வளைந்து கொடுத்து செல்வதன் மூலமாக முதலீட்டாளர்களுக்குப் புதிய மாற்றுப் பாதையினை அமைத்துத் தருவதாக இருக்கும், மேலும் தங்க விலை போன்றவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

 

சவரன் தங்க பத்திரம்

சவரன் தங்க பத்திரம் 2015 நவம்பர் 5-ம் தேதி மத்திய அமைச்சகத்தின் ஒப்புதலை பெற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் முக்கியக் குறிக்கோள் நேரடி தங்கத்தினை வாங்குவதினை குறைப்பது ஆகும்.

இலக்கு

2015-2016 நிதி ஆண்டில் மொத்தமாக 15,000 கோடி முதலீடுகளைச் சவரன் தங்கப் பத்திரம் மூலமாகத் திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதுவே 2016-2017 நிதி ஆண்டில் 10,000 கோடி ஆகும். மத்திய அரசு கணக்கில் இதுவரை 4,769 கோடி சவரன் தங்கப் பத்திரம் மூலமாகக் குவிந்துள்ளது.

துபாயில் தங்கம்

துபாயில் தங்கம் வாங்க விமானத்தில் பறந்துசெல்லும் இந்தியர்கள்.. காரணம் என்ன?

இந்தியர்கள்..!

தங்கம் மீது தீராத காதல் கொண்ட இந்தியர்கள்..!

‘கேடிஎம், ஹால்மார்க்'

‘கேடிஎம், ஹால்மார்க்' சுத்தமான தங்கம் எது? அல்லது இவற்றில் எதுவுமே இல்லையா?

நகை கடைக்காரர்.

பிரைவேட் ஜெட், ரோல்ஸ் ராய்ஸ் காரில் சுற்றும் நகை கடைக்காரர்.. யார் இவர்..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Government Hikes Sovereign Gold Bond Investment Limit To 4 kg Per Fiscal

Government Hikes Sovereign Gold Bond Investment Limit To 4 kg Per Fiscal
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns