தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி..? முழுமையான வழிகாட்டி..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: நீங்கள் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யத் தேடுபவர்களாக இருந்தால் மிக அதிகமானத் தேர்வுகள் உங்களுக்கு இருக்கின்றன.

முதலில், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு உங்களுக்குத் தேவையானது என்ன? நீங்கள் இதில் முதலீடு செய்ய தேவையான காரணங்கள் என்ன? வரிவிதிப்பு, பல்வேறு முதலீட்டுத் தேர்வுகள் மற்றும் தங்கத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எல்லா விஷயங்களையும் இப்போது பார்க்கப்போகிறோம்.

தங்கத்தில் முதலீடு செய்ய உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் என்ன?

நீங்கள் திட வடிவத் தங்கத்தில் முதலீடு செய்வதாக இருந்தால் (தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள், தங்க நகைகள்) ரூ. 2 இலட்சத்திற்கும் மேல் மதிப்புடையதாக இருந்தால் உங்களுக்குத் தேவைப்படும் ஒரு விஷயம் பான் கார்டு ஆகும். எனவே நீங்கள் பான் கார்டு வைத்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒருவேளை நீங்கள் தங்கப் பரிமாற்றாக வணிக நிதிகளான ஈடிஎஃப் களில் முதலீடு செய்வதாக இருந்தால், ஒரு டீமேட் கணக்குடன் தரகு நிறுவனத்தில் ஒரு கணக்கைத் திறக்க வேண்டும். நீங்கள் ஏன் தங்க ஈடிஎஃப் கள் வாங்க வேண்டும் மற்றும் தங்க நாணயங்களாக, தங்கக் கட்டிகளாக மற்றும் தங்க நகைகளாக வாங்கக் கூடாது என்பதை இந்தக் கட்டுரையில் நாங்கள் உங்களுக்குப் பிறகு சொல்கிறோம்.

 

திடத் தங்கம், தங்க ஈடிஎஃப் கள் மற்றும் சவரன் தங்கப் பத்திரங்களை எப்படி வாங்க வேண்டும்?

திட வடிவத் தங்கம் வாங்குவது மிகவும் எளிதானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நகைக் கடைக்குச் சென்று உங்கள் பான் கார்டைக் காட்டி தங்கம் வாங்க வேண்டியது தான். இப்போது இங்கே உங்களுக்கு ஒரு எச்சரிக்கை - நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்வதாக இருந்தால் தங்க நகைகளாக வாங்க வேண்டாம். தங்க நாணயங்களாக வாங்குங்கள்.
இது ஏனென்றால், தங்க நகைகளுக்குச் செய்கூலிகள் உள்ளன.

அந்த நகைகளை நீங்கள் திரும்ப விற்க முயலும் போது அந்தக் கட்டணத்தை மீட்டெடுக்க முடியாது. நீங்கள் வாங்குவதற்குச் சிறந்த தேர்வு தங்க ஈடிஎஃப் ஆகும். ஏனென்றால், இதில் திருட்டுபயம், பத்திரப்படுத்துதல் போன்ற கவலைகள் இல்லை. மேலும் இதை எளிதாக விற்க முடியும். இதில் சிறந்த விஷயம் என்னவென்றால், இது தங்கத்தின் விலை நிலவரங்களைக் கண்காணிக்கிறது. திட வடிவத் தங்கத்தை விற்கும் போது நகைக் கடைக்காரர் அவர் தனது விற்பனைப் பங்கை எடுத்துக் கொள்கிறார்.

 

தங்க ஈடிஎஃப்

தங்க ஈடிஎஃப் களை வாங்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு தங்கத் தரகு மற்றும் வணிகக் கணக்கைத் தொடங்கிய பிறகு, உங்கள் தரகரிடம் தங்கப் பரிமாற்றாக வணிக நிதிப் பத்திரங்களை வாங்கச் சொல்லிக் கேளுங்கள்.

தங்க ஈடிஎஃப் களை வாங்க தங்க வணிகத்தில் மிகப் பெரிய நிறுவனமான கோல்டு மேன் ஸச் தங்க ஈடிஎஃப் கள், கொடாக் தங்க ஈடிஎஃப், எஸ்பிஐ தங்க ஈடிஎஃப் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், சவரன் தங்கப் பத்திரங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளை வாங்கிய அதே முறையில் நீங்கள் இவற்றையும் வாங்கலாம்.

 

தங்க ஈடிஎஃப்-கள் மற்றும் சவரன் தங்கப் பத்திரங்களை ஏன் வாங்க வேண்டும்?

திட வடிவத் தங்கத்தை திருட முடியும் அதே சமயம் தங்க ஈடிஎஃப் கள் மற்றும் சவரன் தங்கப் பத்திரங்களைத் திருட முடியாது. தங்க நகைகளில் செய்கூலியும், தங்க ஈடிஎஃப் களில் செலவு விகிதங்களும் இருக்கின்றன. ஆனால், சவரன் தங்கப் பத்திரங்களில் அத்தகைய கட்டணங்கள் எதுவும் இல்லை. சவரன் தங்கப் பத்திரங்களை மீட்கும் போது அவை வரி விதிப்புகளைக் கவருவதில்லை. ஆனால் திட வடிவத் தங்கம் குறியீட்டு முறையில் கணக்கிடப்பட்ட 20 சதவிகித வரிகளை ஈர்க்கிறது.

இது மட்டுமல்ல. சவரன் தங்கப் பத்திரங்கள் அரையாண்டுக்கு ஒரு முறை 2.5 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. ஆனால், தங்க ஈடிஎஃப் களும் திட வடிவத் தங்கமும் இவ்வாறு தருவதில்லை. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதைப் போல தங்க ஈடிஎஃப் கள் அதன் சொந்த அனுகூலங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், தங்கப் பத்திரங்கள் அளவுக்கு இல்லை. எனவே நீங்கள் வாங்க வேண்டியது சவரன் தங்கப் பத்திரங்கள் ஆகும்.

 

நீங்கள் தங்கத்தை ஏன் வாங்க வேண்டும்?

அடிக்கடி கேட்கப்படும் கேள்வி என்னவென்றால், நான் ஏன் தங்கம் வாங்க வேண்டும்? உங்கள் கேள்விக்கு நாங்கள் பதில் சொல்கிறோம் வாருங்கள். தங்கம் ஒரு இறந்த முதலீடு என்று நினைத்து உங்கள் எல்லாப் பணத்தையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

2008 இல் பங்குச் சந்தைக்கு என்ன நடந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும். 2008 ஆம் ஆண்டு லேமன் பிரதர்ஸ் நெருக்கடிக்குப் பின்னர் தங்கத்தின் விலை மூன்றாண்டுகளில் இரு மடங்கானது. எனவே, 2008 ஆம் ஆண்டு முதல் தங்கத்தில் செய்யப்படும் முதலீடுகள் கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு வருவாயை திருப்பியளித்துள்ளது.

 

உலகப் பொருளாதாரம்

இது ஏனென்றால் உலகப் பொருளாதாரம் சரிந்து முதலீட்டாளர்கள் தங்க முதலீடுகளில் தஞ்சம் தேடினர். எனவே முதலீடுகளின் பன்முகத் தன்மையின் ஒரு அளவீடாக நீங்கள் உங்கள் ஃபோர்ட்ஃபோலியோவில் தங்கத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

தங்க முதலீட்டை ஒரு சிறந்த முதலீடு என்று பலர் கருதிய போதிலும் தங்கத்தில் 10 சதவிகித முதலீடாவது இருக்க வேண்டுமென்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 

22 காரட் மற்றும் 24 காரட் தங்கம் என்றால் என்ன?

நீங்கள் தங்கத்தில் இப்போது தான் முதலீடு செய்வதாக இருந்தால், 22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்திற்கு இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். 24 காரட் தங்கம் பெரும்பாலும் 100 சதவிகிதம் தூய்மையானது. ஆனால் அது வழக்கமாக்க 99.99 சதவிகிதம் தூய்மையானதாகக் கருதப்படுகிறது.

தூய்மையான தங்கம்

அத்தகைய உயர்ந்த தூய்மை கொண்ட தங்கத்தை வைத்து உங்களால் நகைகள் செய்ய முடியாது. ஏனென்றால் தூய தங்கம் நொறுங்கும் தன்மை உடையது. இதில் நகைகள் செய்தால் உடைந்து விடும். எனவே நகைகள் உடையாமலிருப்பதை உறுதி செய்வற்காக தங்கம், செம்பு அல்லது வேறு ஏதேனும் உலோகத்தோடு உலோகக் கலப்புச் செய்யப்படுகிறது.

916 தங்கம்

916 சதவிகிதம் தூய்மை கொண்ட 24 காரட் தங்கத்திற்கும் இதே சாராம்சம் பொருந்தும். பல நாடுகளில் 18 காரட் மற்றும் 12 காரட் குறைந்தத் தூய்மை கொண்ட தங்கத்தை நீங்கள் காணலாம். இது 8 காரட் வரை கூட தூய்மைக் குறைவாகக் கிடைக்கிறது. நீங்கள் நகைகள் வாங்குவதாக இருந்தால், அது 22 காரட் தங்கமாக இருப்பது சிறந்தது.

தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகள்

மற்றொருபுறம் நீங்கள் தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளாக வாங்குவதாக இருந்தால், அது 24 காரட்டாக இருக்க வேண்டும். எனவே, தேர்வு உங்களுடையது. நீங்கள் தொடக்க கால முதலீட்டாளராக இருந்தால் தங்க ஈடிஎஃப் கள் மற்றும் சவரன் தங்கப் பத்திரங்களை வாங்கச் சொல்லி நாங்கள் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளோம்.

இந்தியாவில் தங்கத்தின் தரக்குறியீடுகளைப் பற்றி ஒரு வழிகாட்டி

நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை இப்போது தான் தொடங்கியிருப்பவர் என்றால் இந்தியாவில் தர அடையாளமிடப்பட்ட தங்கத்தையே நீங்கள் வாங்க வேண்டும். இது ஏனென்றால் தரக்குறியீட்டு முத்திரையிடப்பட்ட தங்கம் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. மேலும் அதன் மீது தங்கத்தின் தூய்மையின் நம்பகத்தன்மைக்கு ஒரு முத்திரையிடப்பட்டிருக்கும்.

தர அடையாள முத்திரை

தர அடையாள முத்திரையிடுதல் என்றால், தர மதிப்பீட்டுச் சான்றளிக்கும் மையம் தங்கத்தின் தூய்மைக்கு உங்களுக்கு உறுதியளிக்கிறது என்று பொருள். இந்தக் கணத்தில் நாட்டில் தரக்குறியீட்டு முத்திரையிடும் மையங்கள் வெகு சிலவே உள்ளன. இந்த மையங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

நீங்கள் கவனிக்க வேண்டியவை

தங்கத்தின் தர முத்திரையைப் பார்க்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், தர முத்திரையிட்ட மையத்தின் அடையாளச் சின்னம் மற்றும் தர முத்திரையிடப்பட்ட ஆண்டு ஆகியவையாகும். இந்தத் தர முத்திரையிடும் மையங்கள் அனைத்தும் இந்தியத் தர நிர்ணய கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் வருகின்றன.

இந்தியாவில் தங்கத்தின் விலையைப் பாதிக்கும் காரணிகள் என்ன?

தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பவர்கள், இந்தியாவில் தங்கத்தின் விலைகளைப் பாதிக்கும் பல்வேறு காரணிகளைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இவற்றில் மிகப் பெரிய காரணி சர்வதேச விலைகளாகும்.

சர்வதேச சந்தை

இது அமெரிக்க வட்டி விகிதங்கள், புவியியல் சார்ந்த அரசியல் பதற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தைகளிலுள்ள வாங்கல் விற்றல் மற்றும் தேவை ஆகியவற்றைப் பெருமளவில் சார்ந்துள்ளது. உதாரணமாக அமெரிக்கப் ஃபெடரல் வட்டி விகிதங்களை உயர்த்தும் போது அதற்கு நேர்மாறாக தங்கத்தின் விலைகள் வீழ்ச்சியடைகின்றன.

இந்தியாவில் தங்கம் விலை

இந்திய தங்க விலைகள் சர்வதேச விலைகளிலிருந்து பெறப்படுகின்றன. மேலும் அவை தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும். தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றொரு விஷயம் டாலருக்கு எதிராக நாணயத்தின் மதிப்பில் ஏற்படும் நகர்வாகும். டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்து லாபம் அடையும் போது இந்தியாவில் தங்கத்தின் விலைகள் மலிவாகும். மற்றொருபுறம் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தால் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.

உள்ளூர் காப்புவரி

தங்கத்தின் விலையைப் பாதிக்கும் மற்றொரு காரணி தங்கத்தின் மீது விதிக்கப்படும் உள்ளூர் காப்புவரிக் கட்டணங்கள் மற்றும் இறக்குமதி வரிகளாகும். அவை குறைக்கப்படும் போது தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும். அதிகரிக்கும் போது நேர்மாறாக இருக்கும். மேலும் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் கூட தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், அது நீண்ட காலத்திற்கான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நாணயத் தங்க விலை

உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கியாளர்களின் கொள்கைகளும் இந்த விலைகளைத் தாங்கி நிற்கின்றன. இது ஏனென்றால், நாணயத் தங்க விலைகள் எளிதாக தளர்த்தப்படும் போது தங்கத்தின் விலைகள் உயர்த்தப்படும். மற்றும் இறுக்கப்படும் போது தங்கத்தின விலைகள் வீழ்ச்சியடையும். இது புரிந்து கொள்வதற்கு மிகவும் சிக்கலானது. இவை தங்கத்தின் விலைகளுக்கு எதிரான பின்னணியாகப் பார்க்கப்பட வேண்டும்.

தங்கத்தின் மீது வரி விதிப்பு

உங்கள் தங்கத்தின் மதிப்பு ரூ 30 லட்சத்திற்கும் அதிகமாயிருந்தால் நீங்கள் ஒவ்வொரு வருடமும் சொத்து வரியைச் செலுத்த வேண்டியிருக்கும். இந்த ஏற்பாட்டைப் பற்றி பல தனிநபர்களும் அறிந்திருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1 சதவீத சொத்துவரி

மார்ச் 31, 2017 அன்று தங்கத்தின் மதிப்பு மதிப்பீடு செய்யப்படும். ரூ 30 லட்சத்திற்கும் மேற்பட்ட தங்கத்தின் மதிப்பிற்கு 1 சதவிகித தொகையை சொத்துவரியாக செலுத்தத் தவறினால் நகைகள் பறிமுதல் செய்யப்படுவதற்கு வழிவகுக்கும்.

மூலதன ஆதாய வரி

தங்க ஈடிஎஃப் கள் மற்றும் திடவடிவத் தங்கம் கூட விலை குறியீட்டு இணைப்புடன் 20 சதவிகித மூலதன ஆதாய வரியைக் கவர்கிறது. மேலும் இந்த தங்கம் 36 மாதங்களுக்குப் பிறகு விற்கப்பட்டால், நீண்ட காலத்திற்கான மூலதன ஆதாய வரியைக் கவர்கிறது எனவே தங்கம் நிச்சயமாக வரிவிதிப்புடையது.

வரி செலுத்த வேண்டியது அவசியம்

மேலும் வரிவிதிப்பைப் பொறுத்து நீங்கள் வரி செலுத்த வேண்டியது அவசியமாகும் மூலதன ஆதாய வரி என்பதற்கு நீங்கள் தங்கத்தை வாங்கி லாபத்திற்கு விற்றால் அந்த லாபத்தின் மீது விதிக்கப்படும் வரி என்று பொருள்.

ப்யூச்சர் மார்கெட்

இந்தியாவில் தங்கத்தை எதிர்கால சந்தையில் வாங்குதல் நீங்கள் இந்தியாவில் தங்கத்தை வருங்கால பேரங்களில் வாங்கலாம். வருங்கால தங்க திட்டங்களில் ஒப்பந்தம் காலாவதியாகுவதற்கு முன்பு உங்கள் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். எனவே நீங்கள் மார்ச் மாத ஒப்பந்தத்தில் ஒரு தங்க வருங்கால திட்டத்தை வாங்குவதாக இருந்தால் மார்ச் மாத இறுதிக்குள் உங்கள் ஒப்பந்தத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

முழுமையான தொகை

வருங்கால ஒப்பந்தங்களில் நீங்கள் தங்கத்திற்கு ஒட்டுமொத்த தொகையை செலுத்த வேண்டியதில்லை. ஆனால் பணத்தின் எல்லையை மட்டும் தீர்மானிக்கிறீர்கள். எனவே உங்கள் வெளிப்பாடு பலதடவை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இருந்தாலும் இது உயர் மிக உயர் அபாயமுள்ள விளையாட்டு பொதுவாக இந்த வகை சந்தைகளில் அதிக மதிப்புடைய தனிநபர்கள் மட்டுமே இந்த வகை ஆபத்துக்களை எடுப்பார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Complete Guide To Investing In Gold

Complete Guide To Investing In Gold | தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி..? முழுமையான வழிகாட்டி..!
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns