அமெரிக்கா - வட கொரியா இடையில் போர் வரும் சூழல்.. தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

அதிக வட்டி விகிதத்தில் ஆர்வமுடைய போக்குக் கொண்டிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி(ஃபெட்) சுட்டிக்காட்டும் அதிக வட்டி விகிதம் என்ற மாயத்தோற்றமும், ஃபெட் -இன் வீக்கமடைந்த பாலன்ஸ் ஷீட்டைப் பிரிப்பதற்கான முயற்சியும் சேர்ந்து டாலர் மற்றும் சரிந்து கொண்டிருக்கும் தங்க விலைகளுக்குப் புத்துயிர் அளித்துள்ளன.

ஃபெட் -இன் வட்டி அதிகரிப்பு விகிதம் கடந்த டிசம்பரில் சுமார் 30 சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததற்கு முரணாக ஒரு மாதத்திற்கு முன் சுமார் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

உலகச் சந்தையில் தங்க விலை நிலவரம்

செப்டம்பர் மாதத்தில், தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1300 டாலர் என்ற அளவுகோலை விடக் குறைவாக, சுமார் 3.1% என்ற வீதத்தில், 1280 டாலராகக் குறைந்துள்ளது.

வட்டி விகிதம்

மாறிக்கொண்டேயிருக்கும் சூழல் மற்றும் இந்த வருடத்தில் கடைசியாக ஒரு முறை வட்டி விகிதத்தை ஃபெட் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை தங்க விலையை வெகுவாகப் பாதித்துள்ளன.

வரும் டிசம்பரில் வட்டி விகிதம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதும், அதனால் அதிகப் பாதிப்பு இருக்காது என்பதும், 2018 ஆம் ஆண்டில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி அதிகபட்சமாக மூன்று முறை வட்டியை அதிகரிக்கும்.

 

பண வீக்கம்

வட்டி அதிகரிப்பில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி காட்டி வரும் ஆர்வம், சிறந்த பொருளாதாரப் பின்புலத்தை உருவாக்க வேண்டும் என்பதை விடப் பணம் சார்ந்த கொள்கையைச் சீராக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்புடையதாக இருப்பதாகத் தான் தோன்றுகிறது. பணவீக்கம் இவ்வருடத்தில் 2% என்ற அளவை எட்டும் வரை வட்டி விகிதத்தை ஹோல்டில் வைப்பது என்பது விவேகமற்றது என்கிறார் எல்லன். மேலும் அவர் ரெகவரியைப் பற்றி ஃபெட் தவறான முடிவுக்கு வந்திருக்கலாம்; ஆனால் வட்டி அதிகரிப்பு இருக்கும் என்று முன்கூட்டியே அறிவுறுத்தியது உண்மை என்றும், சீராக உயரும் வட்டி விகிதம் தான் பணவீக்கத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மைக்கான சரியான அணுகுமுறை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

பேலன்ஸ் ஷீட்

சுருங்கிக் கொண்டிருக்கும் பேலன்ஸ் ஷீட்
ஃபெட் அக்டோபர் மாதத்திலிருந்து, அதன் 4.5 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான பேலன்ஸ் ஷீட்டை சுருக்குவதற்கான ஆயத்தத்தில் இருப்பதாலும், விலை அதிகரிப்பு முடக்கப்பட்டிருப்பதாலும், வட்டியை மேன்மேலும் அதிகரிப்பதற்கான அதன் கணிப்பை குறைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபெட் உறுப்பினர்கள் தம் சொந்த ஃபெட் நிதி வட்டி விகிதங்களுக்கான கணிப்பை குறைத்துக் கொண்டுள்ளது, வட்டி விகிதம் தொடர்பான கணிப்பை ஃபெட் மேலும் குறைத்துக் கொள்ளும் என்பதையே காட்டுகிறது.

அமெரிக்கப் பொருளாதாரம்

அதிகரிக்கலாம் என்ற எண்ணம் இருக்கலாம் ஆனால் அது டேட்டாவைச் சார்ந்ததே. மேலும் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி, இத்தகைய இறுக்கத்தைத் தாக்குப்பிடிக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை வணிகத்தில் எதிர்பாராவிதமாக ஏற்பட்ட சரிவு பொருளாதாரப் பலத்தை அசைத்துப் பார்த்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட விற்பனைச் சரிவு மற்றும் முந்தைய மாதங்களில் இருந்தது போழல்லாத கீழ்முக மாற்றம் ஆகியவற்றினால் பொருளாதாரத்தின் முக்கியப் பகுதியான நுகர்வு விகிதம், முந்தைய காலாண்டின் 3.3% வளர்ச்சி விகிதத்தை எட்ட நிறையவே மெனக்கிட வேண்டியிருக்கும்.

குறைவான் வட்டி விகித உயர்வுக்கான வாய்ப்பு

குறைந்த பணவீக்கம் காரணமாக ஃபெடரல் ரிசர்வ் அதன் கணிப்பை விடக் குறைவான விகிதத்தில் வட்டியை அதிகரிக்கக்கூடும். மேலும் அமெரிக்காவின் வரிச் சீர்திருத்தங்கள் ஏமாற்றம் அளிப்பதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதினால், உலக அரசியலில் மிகுதியான மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதனால் தங்கம் அதன் சமீபத்திய சரிவிலிருந்து மிக விரைவாக மீண்டு விடும்.

வரி விலக்கு

வரி விலக்குகள் மற்றும் கட்டமைப்புச் செலவினங்கள் பொருளாதாரத்தைச் சீராக்க உதவும். எனினும், இதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படும். இதில் முக்கியமான கேள்வி என்னவென்றால் இந்த நிதி எங்கிருந்து வரும் என்பது தான். கிடைக்கும் என்ற நம்பிக்கை மீதான அனுமானம் தான் இதற்கான பதில்.

தங்கம் விலை உயர வாய்ப்பு

தற்போதைய விரிவான பொருளாதாரச் சூழலில், தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு முடிவுகட்டப்பட்டு, ஏற்ற இறக்கங்கள் இருப்பினும், மெல்ல மெல்ல உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அரசியல் போர்

உலகளாவிய பொருளாதாரம் மற்றும் நிலம் சார்ந்த அரசியல் ஆகியவற்றைப் பொறுத்தவரை உலகம் சமன்பாடற்ற தன்மையுடன் காணப்படுகிறது. உலகளவில் நிகழும் நிலம் தொடர்பான அரசியல் சண்டைகள் தங்கத்தின் விலை சரிவுக்கு முடிவுகட்டுவதாகக் காணப்படுகின்றன.

தங்கம் முதலீடு

தற்போதைய விரிவான பொருளாதாரப் பின்புலத்தில், தங்கம் மிகவும் உபயோகமான முதலீட்டுச் சாதனமாக இருப்பதோடல்லாமல் ஒட்டுமொத்த முதலீட்டில் இருக்கக்கூடிய அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Why you should buy gold as the world turns riskier

Why you should buy gold as the world turns riskier
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns