சாப்ட்பேங்க்-இன் 1 டிரில்லியன் முதலீடுக்கு மிகப்பெரிய செக்.. மோடி அரசு என்ன செய்யும்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி அளவை 175 ஜிகாவாட் அளவிற்குஉயர்த்த வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது.

 

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 2020ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அளவிலான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைத்தயாரிக்க ஜப்பான் நாட்டின் முன்னணி முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்க் 1 டிரில்லியன் டாலர் அளவிலானமுதலீட்டைச் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்நிறுவனம் விதித்துள்ள கண்டிஷன்களைப் பார்த்தால் மத்திய அரசு இந்த முதலீட்டை வேண்டாம் எனக்கூறிவிடும் அளவிற்கு உள்ளது.

மசயோஷி சன்

மசயோஷி சன்

2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலரை இந்திய மின்சார உற்பத்தித் துறையில் முதலீடு செய்யும் திட்டம் குறித்து மசயோஷி சன் சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார், இதைத் தொடர்ந்து முதலீடு மற்றும்வர்த்தகம் குறித்து மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மற்றும் இதர அரசு தலைவர்களிடம் விளக்கினார்.

அதிக முதலீடு

அதிக முதலீடு

மத்திய அரசு 2022ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்கத் திட்டத்திற்குத் தேவைப்படும் 89.88 பில்லியன் டாலர் முதலீட்டை விடவும் அதிகமான 1 டிரில்லியன் டாலர் முதலீட்டை சாப்ட்பேங்க் செய்கிறது.

ஆக ஒரு மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்கத் தேவைப்படும் தொகை 6 கோடி ரூபாய்.

 

கூட்டணி
 

கூட்டணி

2015ஆம் ஆண்டில் சாப்ட்பேங்க், பாக்ஸ்கான் டெக்னாலஜி, பார்தி எண்டர்பிரைசர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 20 பில்லியன் டாலர் முதலீட்டில் 20 ஜிகாவாட் அளவிலான மின்சாரத்தைத் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியது.

கண்டிஷன்

கண்டிஷன்

இந்நிலையில் சாப்ட்பேங்க் தற்போது முதலீடு செய்ய உள்ள மின்சாரத் திட்டத்தின் மீதான 1 டிரில்லியன் டாலர்முதலீட்டில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை மத்திய அரசு டாலர் மதிப்பில் தான் வேண்டும் எனத் திட்டவட்டமாகக்கூறுகிறது.

உத்திரவாதம்

உத்திரவாதம்

அதேபோல் இத்திட்டத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை மத்திய அரசு கண்டிப்பாக வாங்கும் என்ற உத்திரவாதத்தைஅளிக்க வேண்டும் என்றும் மசயோஷி சன் தலைமையிலான சாப்ட்பேங்க் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரச்சனை

பிரச்சனை

மின்சாரம் கொள்முதல் குறித்து மத்திய உறுதி அளிப்பத்தில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை, ஆனால் மின்சாரத்தைடாலர் மதிப்பில் வாங்குவது என்பது தான் முடியாது.

 ரூபாய் மதிப்பு மட்டுமே

ரூபாய் மதிப்பு மட்டுமே

இந்திய அரசின் மின்சாரக் கொள்முதல் சட்டத்திடத்தில் (power purchase agreements (PPAs)) ரூபாய் மதிப்பில் மட்டுமே வாங்கவேண்டும் என்று இருக்கும் நிலையில் டாலரில் வாங்குவது முடியாது.

வரலாறு..

வரலாறு..

அதேபோன்ற கோரிக்கையுடன் 80களில் சீனா லைன் & பவர் அமைப்பிற்கு 25 வருட காலத்திற்கு 3 சென்ட் தொகையில்மின்சாரத்தை அளிக்கச் சாப்ட்பேங்க் ஒப்பந்தம் செய்தது. அப்போதைய காலகட்டத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரானஇந்திய ரூபாயின் மதிப்பு 32 ரூபாய், தற்போது இதன் மதிப்பு 67 ரூபாய்.

இதில் லாபம் சாப்ட்பேங்க் நிறுவனத்திற்குத் தான்.

 

நிராகரிப்பு

நிராகரிப்பு

இந்நிலையில் மோடி அரசு இந்த முதலீட்டை ஈர்த்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் எனத் திட்மிட்டால்கண்டிப்பாகச் சட்டதிட்டத்தை மாற்ற வேண்டும். இதற்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும், ஏற்கனவே மோடி அரசுமிகவும் மோசமான நிலையில் இருக்கும் போது சட்டதிட்டத்தை மாற்றுவதன் மூலம் கூடுதல் வெறுப்பைப் பெறவிரும்பாது.

இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு சாப்ட்பேங்க் நிறுவனத்தின் 1 டிரில்லியன் டாலர் முதலீட்டை நிராகரிப்புசெய்வதைத் தவிர வேறு வழி இல்லை.

 

மசயோஷி சன்

மசயோஷி சன்

<strong>1 டிரில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்யும் மசயோஷி சன்.. யார் இவர்..?</strong>1 டிரில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்யும் மசயோஷி சன்.. யார் இவர்..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt may wont accept SoftBank’s $1trillion investment

Govt may wont accept SoftBank’s $1trillion investment
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X