இன்டெல் நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது வடிவமைப்பு மையத்தை பெங்களூருவில் அமைக்க இருக்கிறார்கள். இதற்காக ரூ.1,100 கோடியை இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கிறது இண்டெல் நிறுவனம்.

பெரிய முதலீடு
இது அமெரிக்காவுக்கு வெளியே இன்டெல் மேற்கொள்ளும் அதிக பட்ச முதலீடு. இண்டெல் நிறுவனத்துக்கு இந்தியாவின் சிலிகான் வேலியான பெங்களூருவில் அமைக்கும் இரண்டாவது வடிவமைப்பு மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு பெரிது
பெங்களூருவில் 44 ஏக்கர் பரப்பளவில் 6,20,000 சதுர அடியில் இந்த வடிவமைப்பு மையம் அமைய இருக்கிறது. 1,00,000 சதுர அடிக்கு உலகத் தரத்திலான ஆய்வக கட்டமைப்பும் வர இருப்பது தான் சிறப்பு.

சொல்லவில்லை
இந்த மையத்துக்கு எத்தனைப் ஊழியர்களை பணிக்கு எடுக்க உள்ளார்கள், எங்கிருந்து ஆட்களை எடுக்க இருக்கிறார்கள். இந்தியர்களை அதிக அளவில் எடுப்பார்களா... அல்லது முழுக்க முழுக்க வெளிநாட்டில் இருந்து இறக்க இருக்கிறார்களா என்று எந்த விஷயத்தையும் இண்டெல் தெரியப்படுத்தவில்லை.

இந்தியத் தலைவர்
இண்டெல் நிறுவனத்தின் இந்திய தலைவர் மற்றும் டேட்டா செண்டரின் துனைத் தலைவரான நிவ்ருதி ராய் "இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இண்டெல் நிறுவனம் தன்னை தயார் படுத்தி வருகின்றது. இதற்கான தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள் என இண்டெல் தனது பிரமாண்ட விரிவாக்கத்தினை மேற்கொள்கிறது. குறிப்பாக கிளவுட் சேவை, 5ஜி தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு எனப்படும் artificial intelligence என பல முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது என்றார்.

கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும்
எங்கள் முன்னெடுப்புகள் மற்றும் முயற்சிகளால் இந்தியாவில் கண்டுபிடிக்கும் கலாச்சாரம் அதிகரிக்கும். அதோடு இந்த நாட்டை டெக்னாலஜி துறையில் முன்னெடுத்துச் செல்வதையும் உறுதிப்படுத்தும் என்றார்.