மீண்டும் உயரும் தங்க விலை..! காரணம் பொருளாதார மந்த நிலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. இதற்கு உலக பொருளாதார மந்த நிலை ஒரு பெரிய காரணமாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.

கடந்த ஐந்து நாட்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை இன்று அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக அமெரிக்க டாலர் வலுவாக இருக்கும் போதும், அமெரிக்காவின் ஜிடிபி தரவுகளாலும் தங்கத்தின் விலை அதிகரித்திருக்கிறது.

ஸ்பாட் தங்கத்தின் விலை 0.1 சதவிகிதம் அதிகரித்து 1,278.62 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது ஒரு அவுன்ஸ் தங்கம். இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று வரை தங்கத்தின் விலை 0.4% அதிகரித்திருக்கிறது. கடந்த மார்ச் 22, 2019 அன்று நிறை வடைந்த வாரத்துக்குப் பிறகு, இந்த வாரம் தான் தங்கத்தின் விலை அதிகரித்திருக்கிறது.

நஷ்டத்திலிருந்து மீண்ட ஆக்ஸிஸ் பேங்க்.. நிகர லாபம் ரூ.1505 கோடி நஷ்டத்திலிருந்து மீண்ட ஆக்ஸிஸ் பேங்க்.. நிகர லாபம் ரூ.1505 கோடி

உலக மந்த நிலை

உலக மந்த நிலை

ஆசிய பங்குச் சந்தைகள் முன்னேற முடியாமல் பயத்திலும் நெகட்டிவ் மார்க்கெட் செண்டிமெண்டிலும் தயங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு ஜெர்மனி மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து வெளிவரும் அனைத்து பொருளாதார தரவுகளும் உலகம் ஒரு பொருளாதார மந்த நிலையில் இருப்பதைச் சொல்கிறது.

ராய்ட்டர்ஸ் கணிப்பு

ராய்ட்டர்ஸ் கணிப்பு

அதோடு ராய்ட்டர்ஸ் (Reuters)நிறுவனம், அனலிஸ்டுகளிடம் நடத்திய சர்வேயில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கள் கொள்கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்த பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரமே கூட, தன் சராசரி வளர்ச்சிக்கே முக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது என்கிறார்கள். அதோடு பணவீக்கமும் பெரிய அளவில் அதிகரிக்காமல் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் என்கிறார்கள்.

கனடா & ஜப்பான்

கனடா & ஜப்பான்

இந்த உலகப் பொருளாதார மந்த நிலையை பேங்க் ஆஃப் கனடா மற்றும் பேங்க் ஆஃப் ஜப்பான் என இரண்டு பெரிய அமைப்புகளுமே தங்கள் வளர்ச்சிக் கணிப்புகளைக் குறைத்து உறுதி செய்து இருக்கின்றன. அதோடு இந்த இரண்டு நாடுகளுமே தங்களின் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அடுத்த ஒரு வருடத்துக்காவது குறைவாகவே வைத்திருப்போம் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.

பணக் கொள்கை முடிவுகள்

பணக் கொள்கை முடிவுகள்

இப்படிப்பட்ட பொருளாதார நிலையை சரி செய்ய பணக் கொள்கை முடிவுகளில் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்து சரி செய்ய வேண்டும். ஆகையால் ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். அதனால் தான் தங்கம் விலை உயர்கிறது, என்கிறார் ஹெலன் லா என்கிற அனலிஸ்ட். அதோடு வேறு சில பெரிய முதலீட்டு நிறுவனங்கள், பெரும் பணக்காரர்களும், தங்களின் ஈக்விட்டி முதலீடுகளைக் குறைத்துக் கொண்டு பாதுகாப்பான முதலீடுகளில் பணத்தை போட்டு வைக்க தங்கத்தை தேர்வு செய்கிறார்கள். இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

again gold price is surging gradually investors are seeking safe haven gold to save their investments

again gold price is surging gradually investors are seeking safe haven gold to save their investments
Story first published: Friday, April 26, 2019, 15:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X