இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 10 சதவிகிதம் சரியலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக தங்க கவுன்சிலின் கணக்குப் படி, 2018-க்கு முந்தைய பத்து ஆண்டுகளில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 838 டன்னாக இருந்தது. ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு இந்தியாவில் தங்கத்துக்கான தேவை வெறும் 760.4 டன்னாக மட்டுமே இருந்தது.

 

இது கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் சராசரி தேவையை விட சுமார் 10 சதவிகிதம் சரிந்து 760.4 டன்னாக 2018-ல் இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 2019-ம் ஆண்டும் இந்தியாவில் தங்கத்தின் தேவை 2018-ம் ஆண்டின் தங்க தேவையை விட சுமார் 10 சதவிகிதம் குறையலாம் என விலை உயர்ந்த உலோகங்கள் துறை சார்ந்தவர்கள் சொன்னதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

உலக நம்பர் 2

உலக நம்பர் 2

தற்போது வரை உலகின் நம்பர் 1 தங்க வாடிக்கையாளராக இருக்கிறது சீனா. அவர்களைத் தொடர்ந்து இந்தியா, உலகின் இரண்டாவது பெரிய தங்க வாடிக்கையாளராக இருக்கிறது. இந்த சூழலிலும் தங்கத்தின் தேவை 2019-ல் குறைவாகத் தான் இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

ஆறு ஆண்டுகளில் இல்லாத விலை

ஆறு ஆண்டுகளில் இல்லாத விலை

தங்கம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் விலை உயர்ந்திருக்கிறது. இப்படி பயங்கரமாக விலை அதிகரித்திருக்கும் போது வாடிக்கையாளர்கள் தங்கத்தை வாங்க மாட்டார்கள் என All India Gem and Jewellery Domestic Council (GJC)-ன் தலைவர் அனந்த பத்மநாபன் சொல்லி இருக்கிறார்.

ஒதுக்க மாட்டார்கள்
 

ஒதுக்க மாட்டார்கள்

"தற்போது தங்கம் விற்கும் விலைக்கு யாரும் தங்கத்துக்காக பணத்தை ஒதுக்கமாட்டார்கள், இதனால் தங்கத்தின் தேவை, கடந்த ஆண்டை விட சுமார் 10 சதவிகிதம் வரை சரியலாம்" என்கிறார் All India Gem and Jewellery Domestic Council (GJC)-ன் தலைவர் அனந்த பத்மநாபன்.

விலை நிலவரம்

விலை நிலவரம்

இன்று சென்னையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 3,266 ரூபாயாக இருக்கிறது. அதே போல ஒரு கிராம் (24 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 3,566 ரூபாயாக இருக்கிறது. வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்துக்கான ஸ்பாட் ரேட் 33,997 ரூபாயாக இருக்கிறது. தங்கம் மீதான ஃப்யூச்சர்களின் விலையும் சின்ன சின்ன ஏற்றங்களுடனேயே காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gold demand தங்கம்
English summary

India gold demand may fall 10 percent than 2018

India gold demand may fall 10 percent than 2018
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X