துபாயில் தங்கம் வாங்க திட்டமா..? முதலில் இதை படியுங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா முழுவதும் தந்தேரஸ் அல்லது தந்த்ரயோதசி பண்டிகை வருகிற அக்டோபர் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை என்பது செல்வத்தின் கடவுளான குபேரன் மற்றும் லக்ஷ்மி-யை வணங்குவதற்காகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.

இந்த நாளில் மக்கள் தங்கம், வெள்ளி மற்றும் பாத்திரங்களை வாங்குவதன் மூலம் தங்களது செல்வமும் பெருகும் என நம்புகின்றனர், இதனாலேயே இப்பண்டிகை காலத்தில் தங்கம், வெள்ளிக்கு அதிகப்படியான டிமாண்ட் உருவாகிறது.

இந்தியாவில் தங்கம் மீதான வரி அதிகமாக இருக்கும் நிலையில் பலர் வரி இல்லாமல் தங்கம் விற்பனை செய்யப்படும் துபாயில் இருந்து அதிகமாக வாங்கத் திட்டமிடுகின்றனர்.

அப்படி நீங்க துபாயில் இருந்து தங்கத்தை வாங்க திட்டமிட்டால் முதலில் இதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

 சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. தீபாவளி சமயத்தில் நல்ல வாய்ப்பு தான்..! சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. தீபாவளி சமயத்தில் நல்ல வாய்ப்பு தான்..!

தந்தேரஸ் பண்டிகை

தந்தேரஸ் பண்டிகை

தந்தேரஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பெண்கள், ஆண்கள் மட்டும் அல்லாமல் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்குத் தங்கத்தைக் கிப்ட் ஆகக் கொடுக்கத் திட்டமிட்டு அதிகளவில் தங்கம் வாங்க முடிவு செய்துள்ளனர். இதில் பலர் துபாயில் இருந்து தங்கத்தை வாங்க முடிவு செய்துள்ளனர்.

துபாய்

துபாய்

துபாயில் தங்கத்தை வாங்கி இந்தியாவில் விற்பனை செய்து அவ்வளவு எளிதாக லாபம் பார்க்க முடியாது. பல விதிமுறை சிக்கல், வரி விதிப்பு ஆகியவை அதிகமாக உள்ளது. இதனால் துபாயில் இருந்து தங்கம் வாங்கும் முன் விஷயத்தை முழுமையாகத் தெரிந்துகொண்டு வாங்குங்கள். இல்லையெனில் தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.

6 மாதம்
 

6 மாதம்

இந்திய பாஸ்போர்ட் கொண்டவர்கள் அல்லது இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் துபாயில் இருந்து வந்து இந்தியாவில் 6 மாதத்திற்கு அதிகமாகத் தங்கினால், கொண்டு வரப்படும் தங்கத்திற்கு வரிச் சலுகை விகிதம் 12.5% + சமூக நல கூடுதல் கட்டணம் 1.25% விதிக்கப்பட்டும்.

1 கிலோ தங்கம்

1 கிலோ தங்கம்

பிற காரணிகளில் அதாவது குறுகிய காலகட்டத்திற்கு இந்தியா வரும் போது தங்கம் வாங்கி வந்தால் 38.5 சதவீதம் சுங்க வரி செலுத்த வேண்டியது கட்டாயம். இதேபோல் ஒருவர் 1 கிலோவிற்கு அதிகமாகத் தங்கம் கொண்டு வரக்கூடாது.

ஒரு வழி

ஒரு வழி

இந்த வரி விதிப்பில் இருந்து தப்புவதற்கு வழிகளும் உண்டு. அதாவது துபாயில் இருந்து வரிக்கு உட்பட்ட அளவில் மட்டும் தங்கத்தைக் கொண்டு வந்தால் வரி விதிக்கப்பட மாட்டாது. ஒரு வருடத்திற்கும் அதிகமாக வெளிநாட்டில் வசித்து வருபவர் 20 கிராம் தங்கம் வரையில் கொண்டு வரலாம், இதன் மதிப்பு 50000 ரூபாய்க்கு மேல் தாண்ட கூடாது. இதுவே பெண் பயணியாக இருந்தால் 40 கிராம் தங்க நகைகளை வரி இல்லாமல் கொண்டு வரலாம், ஆனால் இதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய் அளவீட்டை தாண்டக் கூடாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Buying Gold From Dubai for Diwali or Dhantetaras? Know this important Customs Duty info before buying

Buying Gold From Dubai for Diwali or Dhantetaras? Know this important information before buying
Story first published: Friday, October 21, 2022, 17:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X