அடேங்கப்பா... 7 வருடங்களில் இல்லாத உச்ச விலையில் தங்கம்! சென்னையில் பவுன் விலை என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்துக்கும் மனித குலத்துக்கும், எப்போதும் ஒரு நெருங்கிய நட்பு அல்லது காதல் உறவு உண்டு.

தங்கம், நம் மக்கள் மற்றும் முன்னோர்களின் ஒரு அங்கம். சமூக அந்தஸ்து தொடங்கி தேவைக்கு அடகு வைத்து பணத்தை பிரட்டிக் கொள்வது வரை எல்லாவற்றுக்கும் தங்கம் கை கொடுக்கிறது.

இப்படி தங்கத்துடன், நம் மனித இனத்துக்கு இருக்கும் உறவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. சரி இன்றைய விலை நிலவரத்துக்கு வருவோம்.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் சர்வதேச ஸ்பாட் தங்கத்தின் விலை கடந்த திங்கட்கிழமை 1,759 டாலரைத் தொட்டு எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. காரணம், கடந்த அக்டோபர் 12, 2012 அன்று தான் 1 அவுன்ஸ் சர்வதேச ஸ்பாட் தங்கம் தன் வாழ்நாள் உச்சமான 1,764 டாலரைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில டாலர்

ஒரு சில டாலர்

ஆக இன்னும் 5 டாலர் விலை ஏறினால், ஒரு அவுன்ஸ் சர்வதேச ஸ்பாட் தங்கத்தின் விலை மீண்டும் தன் வாழ்நாள் உச்சத்தைத் தொட்டு விடும். அந்த 5 டாலர் விலை ஏற்றத்தை இன்னும் எத்தனை நாட்களில் அல்லது வாரங்களில் தொடப் போகிறது என்பது தான் சஸ்பென்சாக இருக்கிறது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

பொருளாதார சீரடைந்தால் தான் தங்கத்தின் விலை ஏற்றம் கொஞ்சமாவது கட்டுக்குள் வரும். பொருளாதாரம் எப்போது சீரடையும் எனக் கேட்டால் "இப்போது இருக்கும் நிலையில், கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டு பிடிப்பதை வைத்து தான் பொருளாதாரம் எப்போது சீரடையும் எனச் சொல்ல முடியும்" என்கிறார் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பவல்.

விலை ஏற்றம் உறுதி

விலை ஏற்றம் உறுதி

ஆக, கொரோனாவுக்கு எப்போது மருந்து வரும் என்பது யாருக்கும் தெரியாது. ஆகையால் இப்போதைக்கு பொருளாதாரம் சீரடையாது. எனவே தங்கத்தின் விலையும் தொடர்ந்து தன் ஏற்றப் பாதையில் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

உயரும் தங்கம்

உயரும் தங்கம்

பொருளாதாரத்தில் ஒரு நிலையற்ற தன்மை தொடர்ந்து கொண்டு இருப்பதால், பலரும் தங்கள் பணத்தை பாதுகாத்துக் கொள்ள, தங்கத்தின் பணத்தை போட்டு வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். "தங்கம் வாங்க ஆள் இல்லை ஆனால் எப்படி விலை ஏறுது!" என்கிற கட்டுரையில் எப்படி யாருமே தங்கத்தை வாங்காத போதும், விலை ஏறுகிறது என விரிவாக எழுதி இருக்கிறோம். படித்துப் பாருங்கள்.

சென்னையில் தங்கம் விலை

சென்னையில் தங்கம் விலை

இன்று மே 20, 2020, சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,400 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 45,360 ரூபாய்க்கு விற்று வருகிறார்களாம்.

பவுன் கணக்கு

பவுன் கணக்கு

சென்னையில் 24 கேரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை கிராமுக்கு 4,840 ரூபாய் என்கிற கணக்கில் 38,720 ரூபாய்க்கு விற்கிறார்களாம். 22 கேரட் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 4,536 ரூபாய் என்கிற கணக்கில் 36,288 ரூபாய்க்கு விற்கிறார்களாம்.

எம் சி எக்ஸ் தங்கம்

எம் சி எக்ஸ் தங்கம்

ஜூன் 2020-க்கான 10 கிராம் தங்க காண்டிராக்டின் விலை 47,017 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்து கொண்டு இருக்கிறது. ஆகஸ்ட் 2020-க்கான 10 கிராம் தங்க காண்டிராக்டின் விலை 47,266 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

விரைவில் வரலாற்று உச்சம்

விரைவில் வரலாற்று உச்சம்

ஆக கூடிய விரைவில் இந்த கொரோனாவால், ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கத்தின் சர்வதேச விலை 1,764 டாலர் என்கிற உச்ச விலையக் கடந்து போகும் என எதிர்பார்க்கலாம். அதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளையும் கொரோனா வைரஸ் என்கிற ஒற்றை வடிவத்தி பார்க்க முடிகிறது.

ஜிம் ராஜர்ஸ்

ஜிம் ராஜர்ஸ்

உலகின் மிக முக்கியமான கமாடிட்டி வர்த்தகர்களில் ஒருவரான ஜிம் ராஜர்ஸ் "இந்த கொரோனா பிரச்சனை ஒரு முடிவுக்கு வருவதற்குள், தங்கத்தின் விலை ஒரு நல்ல ஏற்றத்தைக் கண்டு விடும்" எனச் சொன்னது, இப்போது தான் நினைவுக்கு வருகிறது. யார் தங்கத்தை வாங்கி லாபம் பார்க்கப் போகிறார்களோ தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chennai gold rate today International spot gold price is in 7 year high

The international spot gold price is in its 7 year high. This may touch its historical high very soon. We have given the Chennai gold rate details also.
Story first published: Wednesday, May 20, 2020, 19:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X