பட்டையை கிளப்பிய தங்கம்... குறைவான விலையால் இன்னும் களைகட்டும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தங்கத்தினை விரும்பாவதர்கள் அதிகம் இருக்க முடியாது. ஏனெனில் சிறு குழந்தை முதல் வயதான தாத்தா பாட்டி வரையில், விரும்பி அணியப்படும் ஒரு ஆபரணம் தங்கம்.

 

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சொல்லவே வேண்டாம். அந்தளவுக்கு தங்கத்தின் மீதான மோகமும், காதலும் உண்டு.

ஆக அதனை உறுதி செய்யும் விதமாகமே இந்த செய்தியும் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக பின்னடைவு

கொரோனா காரணமாக பின்னடைவு

உண்மையில் கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத நுண்கிருமி, உலக மக்களையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், சர்வதேச அளவில் பல நாடுகளும் லாக்டவுனை அமல்படுத்தின. இதன் காரணமாக லட்சக்கணக்கானோர் தங்களது, வேலை வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர் என்றே கூறலாம். இதன் காரணமாக அனைத்து கடந்த சில மாதங்களாக பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

மீண்டு வரும் தேவை

மீண்டு வரும் தேவை

ஆனால் இந்தியா உள்பட பல நாடுகளும் லாக்டவுனில் தளர்வுகளை அளித்துள்ளன. இதன் காரணமாக தற்போது தான் பொருளாதாரம் சற்று துளிர்விடத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தேவைகளும் மீண்டுவர தொடங்கியுள்ளன. இதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த செய்தி. ஏனெனில் என்ன தான் கொரோனா பரவினாலும் இன்றளவிலும் நகைகடைகளில் அலைமோதும் கூட்டத்தினை பார்க்கும்போது, இது புரியவரும்.

பட்டையை கிளப்பிய விற்பனை
 

பட்டையை கிளப்பிய விற்பனை

கடந்த சில மாதங்களாக பெரும் பின்னடைவை சந்தித்து வந்த தங்க ஆபரண விற்பனை, இந்த தந்தேரா விழாக்காலத்தில் விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரிக்கும் என்றும் நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். பல முக்கிய நகரங்களிலும் விற்பனை களைகட்டியதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் விற்பனை களைகட்டியதாக கூறியுள்ளனர்.

ஜீவல்லர்ஸ் அசோசியேஷன் மதிப்பீடு

ஜீவல்லர்ஸ் அசோசியேஷன் மதிப்பீடு

இந்திய புல்லியன் & ஜீவல்லர்ஸ் அசோசியேஷன் விற்பனை கடந்த ஆண்டை விட 35% அதிகரிக்கலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது. விலையுயர்ந்த ஆபரணமான 22 கேரட் தங்கம் விலை 10 கிராமுக்கு 50,000 ரூபாயிக்கு கீழாக குறைந்துள்ளது.

கடந்த திருமணம் சீசன்களையும் அக்ஷ்ய திருதியையிலும், கொரோனா லாக்டவுன் காரணமாக விற்பனை முடங்கியது. ஆனால் தற்போது பொருளாதாரம் மீண்டு வர தொடங்கியதற்கு இதுவே முக்கிய சாட்சி.

 

விற்பனை அதிகரிக்கும்

விற்பனை அதிகரிக்கும்

ஏனெனில் இந்த பெருந்தொற்று மக்களை அனாவசிய செலவுகளில் இருந்தும், அத்தியாவசியமற்ற செலவுகளில் இருந்தும் விலக்கியே வைத்தது. ஆக எட்டு மாதங்களுக்கு பிறகு நகைக்கடைக்காரர்கள், சந்தையில் தற்போது தேவை மீண்டு வருவதை காண்கின்றனர். நகைகள் விலை சற்று குறைந்த வண்ணம் உள்ளதாக இது இனி தேவையை இனியும் ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகம் உள்ளது

தேவை அதிகம் உள்ளது

இந்த தந்தேரா அன்று காலையில் இருந்தே விற்பனை சிறப்பாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதிலும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து, வெளிவரும் அறிக்கைகள் கடந்த தந்தேராஸுடன் ஒப்பிடும்போது 20% தேவை வளர்ச்சியினை காட்டுகின்றது. சந்தையில் ஏராளமான தேவை உள்ளது என்று IBJAவின் தேசிய செயலாளர் சுரேந்திரா மேத்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dhanteras 2020: gold jewellery sales jump 35% in this festival season

Dhanteras 2020: gold jewellery sales jump 35% in this festival season
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X