மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையை அறிந்திருக்க வேண்டுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு முன்னர் அந்த மியூச்சுவல் உள்ள திட்டங்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதே நிதி ஆலோசகர்கள் கூறிவரும் அறிவுரையாகும்.

 

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் இலக்கு, எதிர்கால நன்மைகள், உத்தேசமாக கிடைக்கக்கூடிய வருவாய் மற்றும் ரிஸ்குகள் ஆகியவற்றை கண்டிப்பாக ஒரு முதலீட்டாளர் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள் பங்கு சந்தை உள்ளிட்ட பிற விஷயங்களை கண்டிப்பாக தெரிந்து கொண்டிருக்க வேண்டுமா என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

எந்த ஒரு முதலீட்டிலும் முதலீடு செய்வதற்கு முன்னர் அந்த முதலீடு நமக்கு ஏற்றதா? நல்ல வருவாய் தரக்கூடியதுதானா? என்பதை அறிந்து கொண்டுதான் முதலீடு செய்வார்கள். குறிப்பாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன்னர் அந்த நிறுவனம் குறித்த முழுமையான புரிதல் கண்டிப்பாக முதலில் இருக்க வேண்டும். இல்லையெனில் நமது முதலீடு காணாமல் போக வாய்ப்பு உள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

ஆனால் அதே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்டில் செய்யும்போது அந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்துகொண்டால் போதும். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் பங்குச்சந்தைகள், பாண்டுகள், பண மார்க்கெட்டுக்கள் உள்ளிட்ட விவரங்களை அறிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

விமான பயணி
 

விமான பயணி

ஒரு விமானத்தில் நாம் பயணம் செய்ய வேண்டும் என்றால் விமான பயணிக்கு என்னென்ன தெரிந்திருக்க வேண்டுமோ, அது மட்டும் தெரிந்திருந்தால் போதும். விமானம் எப்படி செயல்படுகிறது? சிக்னல்களை எப்படி விமானிகள் பெறுகிறார்கள்? விமானத்தை எப்படி ஓட்ட வேண்டும்? என்பதெல்லாம் ஒரு பயணி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்?

என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்?

அதேபோல்தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும்போது அந்த முதலீடு எங்கெல்லாம் முதலீடு செய்யப்படுகிறது? எவ்வளவு ரிஸ்குகள் உள்ளன? இலக்குகள் என்ன? என்பதை மட்டும் ஒரு முதலீட்டாளர் தெரிந்து கொண்டால் போதும். பங்குச்சந்தை உள்ளிட்ட மற்ற விவரங்களை அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது ஃபண்ட் மேனேஜர் அதனை முழுமையாக தெரிந்து கொண்டு நமது முதலீட்டை பாதுகாப்பாக முதலீடு செய்து நமக்கு சராசரியான வருவாயை கொடுக்க உதவி செய்வார்.

ஆர்வம்

ஆர்வம்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நிதி இலக்குகளை அடையும் நோக்கத்திற்காக முதலீடு செய்ய தீர்மானிக்கும் பட்சத்தில் பங்குச்சந்தைகள் மற்றும் பண மார்க்கெட்டுக்களை அறிந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை அதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் தெரிந்து வைத்து கொள்வதில் தவறில்லை.

சரியான வருவாய்

சரியான வருவாய்

ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் உள்ள ஃபண்ட் மேனேஜர்கள் நமது முதலீட்டை சிறப்பான முறையில் வழிநடத்தி முதலீட்டாளர்களுக்கு சரியான வருவாயை பெற்று தருவார்கள். எனவே நாம் நமது முதலீடு குறித்து எந்தவித கவலையும் இன்றி இருக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do I need to understand stock, bond or money markets before I invest?

Investors investing in a mutual fund are advised by financial advisors to thoroughly understand the schemes of the mutual fund before investing. An investor must understand the objective, future benefits, expected returns and risks of a mutual fund scheme.
Story first published: Thursday, November 3, 2022, 7:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X