நடப்பு ஆண்டில் நடந்த நல்ல விஷயங்களில் தங்கத்தின் இறக்குமதி சரிவும் ஒன்று. ஏனெனில் ஒரு காலகட்டத்தில், அரசு இறக்குமதியை கட்டுப்படுத்த பலவேறு வகையான அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
ஆனால் இந்த கொரோனா எந்த வித நடவடிக்கைகளும் இல்லாமல் தங்கத்தின் இறக்குமதியினை குறைத்து விட்டது. இந்த நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க பல பெரும் நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் அப்போதெல்லாம் குறையாத இறக்குமதி, தற்போது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாமல் குறைந்து விட்டது.
இது ஒரு புறம் நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் இதனால் ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான்-ஐ கட்டுப்படுத்த முடியாது.. டெல்லி நீதிமன்ற பதிலால் ரிலையன்ஸ் ரீடைல்-க்கு பின்னடைவு..!

தங்கம் தேவை சரிவு
சரி வாருங்கள் நடப்பு ஆண்டில் தங்கம் இறக்குமதி எவ்வளவு தான் உள்ளது என பார்க்கலாம். கடந்த ஏப்ரல் - நவம்பர் இடையேயான காலகட்டத்தில் தங்கம் இறக்குமதியானது 40 சதவீதம் குறைந்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவின் மூலம் தெரிய வந்துள்ளது. கொரோனாவின் காரணமாக தேவை முடங்கியுள்ள நிலையில், இறக்குமதியும் சரிந்துள்ளது.

இறக்குமதி சரிவு
கடந்த 2019 - 20ம் ஆண்டின் ஏப்ரல் - நவம்பர் காலகட்டத்தில் தங்கத்தின் இறக்குமதி 20.6 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டின் இதே காலகட்டத்தில் 40% இறக்குமதி சரிந்து, 12.3 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. எனினும் கடந்த நவம்பரில் இறக்குமதி 2.65% வளர்ச்சியினை பதிவு செய்து, 3 பில்லியன் டாலராக இறக்குமதி பதிவு செய்துள்ளது.

வெள்ளி இறக்குமதி
வெள்ளி இறக்குமதியும் கடந்த ஏப்ரல் - நவம்பர் காலகட்டத்தில் 65.7% சரிந்து, 752 மில்லியன் டாலராக குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி சரிவு என்பது நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க உதவி செய்துள்ளது. இது கடந்த ஏப்ரல் - நவம்பர் காலகட்டத்தில் 42 பில்லியன் டாலர்களாக குறைக்க உதவியது. இது முந்தைய ஆண்டில் 113.42 பில்லியன் டாலர்களாக இருந்தது கவனிக்கதக்க விஷயமாகும்.

இந்தியாவின் இறக்குமதி
இந்தியா தங்கத்தினை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகும். இங்கு வருடத்திற்கு சுமார் 800 - 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டில் தங்கம் இறக்குமதியானது சரிந்துள்ள இதே காலகட்டத்தில் தங்கம் நகை ஏற்றுமதியும் 44 சதவீதம் வீழ்ச்சி கண்டு 14.30 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. ஒரு புறம் இறக்குமதி வர்த்தக பற்றாக்குறையை சரி செய்ய காரணமாக அமைந்தாலும், இதனால் ஏற்றுமதியும் சரிந்துள்ளது. விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.