தங்கத்தின் பயன்பாட்டில் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கும் இந்தியாவில், தங்கத்தினை விருப்பமான ஆபரணமாக மக்கள் அணிந்து வருகின்றனர். அதிலும் இந்தியாவினை பொறுத்த வரையில் ஆண் பெண் பாகுபாடின்றி அனைவரும் விரும்பி அணியக் கூடிய ஒரு ஆபரணம் தங்கமாகும்.
அதுவும் குழந்தை பிறப்பு முதற்கொண்டு திருமணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் தங்கம் இடம் பெறாமல் இருக்காது.
அதிலும் சிறுக சிறுக என்றாலும் அவ்வப்போது கிடைக்கும் தொகையில் ஒரு கிராம் தங்கமேனும் வாங்கி சேமித்து வைப்பது நம் பெண்களின் பழக்கம். ஆக இப்படியாக நம் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன தங்கத்தின் தேவை நடப்பு ஆண்டில் குறையுமாம்.

தங்கத்திற்கு தனி இடம்
இந்தியாவினை பொறுத்தமட்டில் தங்கம் ஒரு சிறந்த ஆபரணமாக மட்டும் அல்லாது, நம்மவர்களின் சிறந்த முதலீட்டு கருவியும் கூட. இன்றைய காலகட்டத்தில் பல வகையான முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும் கூட, அதனை, அதில் தங்கத்திற்கு என்று தனி இடம் உண்டு. இப்படி மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாய் இருக்கும் தங்கத்தின் உபயோகமான குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம் தேவை குறையும்
அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல, நடப்பு நிதியாண்டில் 35% தங்க ஆபரணத் தேவை குறையலாம் என்றும் கணித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இந்த கொரோனா தான். உலகம் முழுக்க கொரொனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் விலையும் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை காட்டிலும் தங்கம் விலையானது அதிகம் தான். குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத உச்சத்தினை தொட்டது.

தங்கம் வாங்க ஆர்வம்
கடந்த சில நாட்களாக சரிவினைக் கண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்களும் தங்கத்தினை வாங்க ஆர்வம் காட்டலாம். நகை வாங்குபவர்களும் இந்த சமயத்தில் வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது தங்க ஆபரணத்தின் தேவையானது 35% சரியலாம் என்று மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.

தங்கம் வாங்க ஆர்வமில்லை
இது கொரோனா காலகட்டத்தில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியிருந்ததால், பெரியளவிலான விழாக்கள் நடத்தப்படவில்லை. ஆக இந்த கால கட்டத்தில் மக்கள் அதிகளவு நகையை வாங்குவர். ஆனால் கொரோனா சமயத்தில் விழாக்களும் அதிகம் நடத்தப்படவில்லை. ஆக அந்த சமயத்தில் மக்களும் தங்கம் வாங்க அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை.

சில்லறை வர்த்தகத்திற்கு அனுமதி இல்லை
இதன் காரணமாக 2020ம் ஆண்டின் கடைசி காலாண்டில் 41% தேவை வீழ்ச்சி கண்டது. அதன்பிறகு நாட்டில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட பிறகு சில்லறை வர்த்தக கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக பல மாதங்களுக்கு கடைகள் இல்லை. இது இன்னும் தேவை சுருங்க காரணமாக அமைந்தது. மேலும் கொரோனா காரணமாக மக்களின் கையில் பணப்புழக்கம் குறைந்தது.

தேவை வீழ்ச்சி
இதன் காரணமாக அத்தியாவசிய தேவை தவிர, மற்றவற்றிற்கு செலவு செய்ய மக்கள் தயக்கம் காட்டினர். இதனால் அந்த காலகட்டத்தில் விலை உயர்ந்த ஆபரணமாக தங்கத்தினை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் குறிப்பாக கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் தங்கத்தின் தேவை 74% வீழ்ச்சி கண்டது. தங்கம் நகை வாங்க மக்கள் விரும்பும் நாளான அட்சய திருதியை அன்று கூட மக்கள் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை என்றே கூறலாம்.

தேவை மீண்டு வருகிறது
எனினும் விற்பனையாளர்களுக்கு சற்றே ஆறுதல் தரும் விதமாக இரண்டாவது பாதியில் தங்கம் தேவை மீண்டு வர ஆரம்பித்துள்ளது. எப்படியெனினும் கடந்த ஆண்டை காட்டிலும் தங்கம் தேவையானது சற்று குறைவு தான். ஆக இது கடந்த ஆண்டை காட்டிலும் தேவை நடப்பு ஆண்டில் சற்று குறையவே வாய்ப்புகள் அதிகம்.

தங்கத்திற்கான தேவை தற்போது தான் அதிகரிப்பு
இந்தியாவில் ரத்தினங்கள் மற்றும் நகைத் தொழில் முக்கியமாக திருமணத்தால் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக திருமண நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் திருமண நிகழ்வுகளுக்கான ஷாப்பிங்களும் ஒத்தி வைக்கப்பட்டன. எனினும் தற்போது தான் தங்கத்திற்கான தேவை சற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.