தங்கம் விலை கிராமுக்கு ரூ.8,200 தொடப் போகுதாம்! பேங்க் ஆஃப் அமெரிக்கா கணிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில், நிதி சார்ந்த விஷயங்களில், எல்லோருக்கும் புரியும் ஒரு விஷயம் தங்கம்.

 

நம் ஊர் புறங்களில், மக்கள் விலை வாசி பற்றி பேசும் போது கூட "என் கல்யாணத்தப்ப பவுன் தங்கமே ஆயிரம் ரூவா தான்" என்று பேசுவதைக் கேட்டு இருப்போம்.

அந்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் தங்கத்துக்கு என்று, ஒரு தனி ஹீரோ அந்தஸ்து உண்டு. சரி விஷயத்துக்கு வருவோம்.

சென்னையில் தங்கம்

சென்னையில் தங்கம்

இன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 45,310 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் சமீபத்தைய மிகப் பெரிய உச்ச விலையே 46,160 தான். ஆனால் ஆபரணத் தங்கம் விலை சுமாராக இதை விட 2 மடங்கு அதிகரித்தால் என்ன செய்வீர்கள்.

முதலீடுகள் காலி

முதலீடுகள் காலி

இப்போது, உலகம் முழுக்க பங்குச் சந்தைகள் மற்றும் கடன் பத்திரங்கள் என எதிலுமே முதலீட்டாளர்களுக்கு பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. எனவே தான், முதலீட்டாளர்கள் தங்கத்தில் குவிந்து கொண்டு இருக்கிறார்கள். தங்கத்தின் விலையும் கணிசமாக ஏற்றம் கண்டு கொண்டே இருக்கிறது.

பேங்க் ஆஃப் அமெரிக்கா
 

பேங்க் ஆஃப் அமெரிக்கா

சமீபத்தில், பேங்க் ஆஃப் அமெரிக்காவின் அனலிஸ்டுகள், தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில், அடுத்த 2021-ம் ஆண்டு முடிவுக்குள், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமாராக 3,000 அமெரிக்க டாலர் வரை தொடலாம் எனக் கணித்து எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் எவ்வளவு

இந்தியாவில் எவ்வளவு

இதை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால், 10 கிராம் தங்கத்துக்கு சுமாராக 82,000 ரூபாய் வருகிறது. இது இன்றைய அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்புக்கு வரும் தொகை என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும்.

எம் சி எக்ஸ்

எம் சி எக்ஸ்

இந்தியாவின், எம் சி எக்ஸ் (Multi Commodity Exchange) என்கிற கமாடிட்டி சந்தையில், தங்கம் ஃப்யூச்சர் காண்டிராக்ட்களாக வர்த்தகமாகி வருகின்றன. அதில் கூட ஜூன் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க காண்டிராக்ட் சமீபத்தில் 47,327 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது குறிப்பிடத்தகக்து.

சர்வதேச விலை

சர்வதேச விலை

இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,732 அமெரிக்க டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பேங்க் ஆஃப் அமெரிக்கா கணிப்பின் படி தங்கம் இன்னும் சுமாராக 1,300 டாலர் ஏற்றம் காண வேண்டும். அதற்கு இன்னும் சுமாராக 20 மாதங்கள் நேரம் இருக்கிறது.

எப்போது விலை ஏறும்

எப்போது விலை ஏறும்

பொதுவாக, உலக பொருளாதாரத்தில் ஒரு நிலையற்ற தன்மை நிலவும் போதும், முதலீடுகள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையும் போதும் தான் மக்கள் தங்கத்தை வாங்கிக் குவிப்பார்கள். அப்போது தான் தங்கத்தின் விலையும் அதிகரிக்கும். அது தான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.

ஜிம் ராஜர்ஸ்

ஜிம் ராஜர்ஸ்

தங்கத்தின் விலை, இந்த கொரோனா பிரச்சனை எல்லாம் ஒரு முடிவுக்கு வருவதற்குள், ஒரு நல்ல உச்சத்தை எட்டிப் பிடிக்கும் என, உலகின் மிக முக்கிய கமாடிட்டி முதலீட்டாளர்களில் ஒருவரான ஜிம் ராஜர்ஸ் சொல்லி இருந்ததும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.

அமெரிக்கா & சீன பொருளாதாரம்

அமெரிக்கா & சீன பொருளாதாரம்

அமெரிக்காவின் ஜிடிபி 2020-ம் ஆண்டின் 2-ம் காலாண்டில் சுமாராக 30 % சரியலாம் என கணித்து இருக்கிறார்கள். சீனாவில் இந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே 6.8 % பொருளாதாரம் சரிந்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியல் நிச்சயம் தொடரும். உலக பொருளாதாரமே ஒரு சில காலாண்டுகள் அடி வாங்கும்.

எல்லாம் டவுன்

எல்லாம் டவுன்

ஆக, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற மிகப் பெரிய பொருளாதார சக்திகளே கொரோனாவால் செம அடி வாங்கி இருக்கிறது. உலகில் அனைத்து பங்குச் சந்தைகள் தள்ளாடிக் கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே கொடுத்த கடன் திரும்ப வருமா எனத் தெரியவில்லை, இதில் கடன் பத்திரங்களில் எப்படி நம்பி முதலீடு செய்வது..?

க்ரீன் சிக்னல்

க்ரீன் சிக்னல்

எனவே முதலீட்டாளர்களுக்கு, தங்கம் தான் ஒரே வழி. எனவே பேங்க் ஆஃப் அமெரிக்கா அனலிஸ்டுகள் சொல்வது போல, தங்கத்தின் விலை டாப் கியரில் பறக்க வாய்ப்பு இருக்கிறது. தங்கத்தை வாங்குவது என்றால், இப்போதே வாங்கிவிடுங்கள், இல்லை என்றால் விலை ஏறிய பின் நீங்கள் வருத்தப்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold Price may touch Rs 82,000 for 10 gram with in 2021 Bank of America predict

The bank of america predicted that the 10 gram Gold price in india may touch Rs 82,000 with in the year 2021. So if any one wants to buy gold, you can invest now itself.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X