50,000-த்தை தொட்ட தங்கம் விலை! பவுனுக்கு எவ்வளவு? தங்கம் விலை பற்றி Goldman Sachs என்ன சொன்னார்கள்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம். இந்த விலை உயர்ந்த உலோகம் மட்டும் உலகத்தில் இல்லாமல் இருந்து இருந்தால், இந்திய பொருளாதாரத்தில் ஒரு கணிசமான பகுதி பணம் கையில் இருந்து இருக்கும்.

அந்த அளவுக்கு நம் இந்தியர்கள் தங்கத்தை வாங்கிக் குவிக்கிறார்கள். ஆண்டுக்கு சுமாராக 800 - 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இதனால், இந்தியாவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை எல்லாம் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அதெல்லாம் பற்றி நமக்குக் கவலை இல்லை என்று தங்கத்தை வாங்கிக் கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட தங்கம் விலை என்ன ஆச்சு? Chennai Gold rate என்ன? என்று தெரிந்து கொள்வோமா! வாருங்கள் பார்ப்போம்.

50,000-த்தை தொட்ட தங்கம்

50,000-த்தை தொட்ட தங்கம்

சென்னையில், வரலாறு காணாத அளவுக்கு 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை, நேற்று 50,280 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது. அதாவது ஒரு கிராம் 24 கேரட் ஆபரணத் தங்கம் விலை 5,028 ரூபாய் மேனிக்கு பவுனுக்கு (8 கிராம் தங்கத்துக்கு) 40,224 ரூபாய்கு விற்று இருக்கிறார்கள்.

46,000 தொட்ட 22 கேரட் தங்கம்

46,000 தொட்ட 22 கேரட் தங்கம்

அதே போல, சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று வரலாற்று உச்சமாக, 46,090 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் விலை 4.609 ரூபாய் என்கிற கணக்கில், ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை 36,872 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள்.

Goldman Sacs கணிப்பு
 

Goldman Sacs கணிப்பு

உலகின் மிக முக்கிய நிதி நிறுவனங்களில் ஒன்றான கோல்ட் மேன் சாக்ஸ், தங்கத்தின் விலை அடுத்த 3 மாதத்தில் 1,800 டாலரும், 6 மாதத்தில் 1,900 டாலரும், அடுத்த 12 மாதங்களுக்குள் 2,000 டாலரும் தொடும் எனக் கணித்து இருக்கிறது. இது நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்து இருக்கிறது.

ரூபாய் மதிப்பு தொடர் சரிவு

ரூபாய் மதிப்பு தொடர் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, 76 ரூபாயை விட்டு கீழே வருவதாகத் தெரியவில்லை. இந்த 2020-ம் ஆண்டில் மட்டும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 %-க்குக் மேல் சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பு சரிவும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

சர்வதேச தங்கம் விலை ஏற்றம்

சர்வதேச தங்கம் விலை ஏற்றம்

அமெரிக்கா டாலரில், சர்வதேச அளவில் வர்த்தகமாகும், ஒரு ட்ராய் அவுன்ஸ் (31 கிராம்) தங்கம் விலை, திடீரென 1,758 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் முழுக்க 1,735 டாலருக்குள் வர்த்தகமாகிக் கொண்டிருந்த தங்கம் விலை தற்போது 23 டாலர் அதிகரித்து வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது என்றால், சர்வதேச அளவிலும் தங்கத்துக்கான டிமாண்ட் அதிகமாக இருப்பதாகத் தானே பொருள்.

கமாடிட்டி சந்தையில் கலக்கும் தங்கம்

கமாடிட்டி சந்தையில் கலக்கும் தங்கம்

இந்தியாவின் Multi Commodity Exchange MCX-ல், ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்கத்துக்கான காண்டிராக்ட் விலை 48,230 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இது தன்னுடைய முந்தைய உச்ச விலையான 48,190 ரூபாயை விட அதிகம். ஆக இந்தியாவின் சந்தையிலும் தங்கத்துக்கான டிமாண்ட் அதிகரித்து, விலை அதிகரித்துக் கொண்டு இருப்பது இங்கே உறுதியாகிறது.

தங்கத்துக்கான டிமாண்ட் அதிகரிப்பு

தங்கத்துக்கான டிமாண்ட் அதிகரிப்பு

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அமெரிக்கா சீனா சண்டை, சீனா இந்தியா பதற்றம் போன்ற பல காரணங்களால், முதலீட்டாளர்கள் இன்னமும் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். எனவே தங்கத்துக்கான டிமாண்டும் அதிகமாகவே இருப்பதால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த காரணங்கள் போக, ரூபாய் பலவீனமடைவது, கோல்ட் மேன் சாக்ஸ் கம்பெனியின் கணிப்பு போன்றவைகளால், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்பதை தெளிவாகப் பார்க்க முடிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price touched Rs 50000 Gold price may rise further

Gold price touched Rs 50000 for 24 carat 10 gram. As per Goldman sachs company prediction, the gold price may rise further.
Story first published: Monday, June 22, 2020, 11:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X