தங்கம் பவுனுக்கு 1,920 ரூபாய் விலை சரிந்தது தெரியுமா..? மிஸ் பண்ணிட்டீங்களே பாஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்களைப் பொறுத்த வரை தங்கம் இன்றி அமையாது உலகு. கல்யாணத்தில் சாப்பாடு, உறவினர்களை அழைப்பது எல்லாம் கூட முன் பின் இருக்கலாம்.

ஆனால் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் சரி, ஒரு பவுன் தங்கமாவது திருமணத்தில் இடம் பிடிக்கும்.

அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த, தங்கத்தை வாங்க நமக்கு இரண்டு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அதை நாம் பயன்படுத்திக் கொண்டோமா..?

முதல் வாய்ப்பு

முதல் வாய்ப்பு

கடந்த அக்டோபர் 02, 2019 தான், தங்கத்தை வாங்க, நம்மைப் போன்ற நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு. கடந்த நான்கு மாத காலத்தில் இல்லாத மிகப் பெரிய விலை சரிவு தெரியுமா..? எவ்வளவு பெரிய விலை சரிவு என்றால் பவுனுக்கு 1,920 ரூபாய் விலை சரிவு.

விலை உச்சம்

விலை உச்சம்

கடந்த செப்டம்பர் 04, 2019 தான் இந்த 2019-ம் ஆண்டிலேயே தங்கத்தின் உச்ச விலை.
24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,107 ரூபாய் எனில் ஒரு பவுன் 32,856 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,768 ரூபாய் எனில் ஒரு பவுன் 30,144 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

சரிந்த விலை

சரிந்த விலை

இந்த விலை உச்சத்தில் அம்பானி கூட நகை வாங்க பயப்பட்டு இருப்பார். எனவே கடந்த அக்டோபர் 02, 2019 அன்று தங்கம் விலை நன்றாக குறைந்தது. கடந்த நான்கு மாதங்களில் இது தான் தங்கத்தின் மிகக் குறைந்த விலை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அக்டோபர் 02, 2019 விலை

அக்டோபர் 02, 2019 விலை

கடந்த அக்டோபர் 02, 2019 அன்று,
24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,867 ரூபாய் எனில் ஒரு பவுன் 30,936 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,545 ரூபாய் எனில் ஒரு பவுன் 28,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

பம்பர் ஆஃபர்

பம்பர் ஆஃபர்

ஆக கடந்த செப்டம்பர் 04, 2019 அன்றைக்கு தங்கம் விற்ற விலையையும், அக்டோபர் 02, 2019 அன்று விற்ற தங்கம் விலையையும் ஒப்பிட்டால், 24 கேரட் ஒரு பவுன் தங்கத்தை 1,920 ரூபாய் விலை குறைவாக வாங்கி இருக்கலாம். அதே போல 22 கேரட் ஒரு பவுன் தங்கத்தை 1,784 ரூபாய் விலை குறைவாக வாங்கி இருக்கலாம்.

புலம்பல்

புலம்பல்

ஐயோ போச்சே... போச்சே... கல்யாணத்துக்கு இந்த அக்டோபர் 02, 2019 அன்றைக்கு நகை வாங்கி இருக்கலாமே என வருத்தப்படுகிறீர்களா..? அட பலருக்கும் இப்படித் தாங்க. அதிர்ஷ்டம் இருப்பதில்லை. ஆனால் தங்கம் நம் மீது பரிதாபப்பட்டு, சமீபத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பை எத்தனை பேர் பயன்படுத்திக் கொண்டோம்..?

இரண்டாம் வாய்ப்பு

இரண்டாம் வாய்ப்பு

அந்த இரண்டாம் வாய்ப்பு டிசம்பர் 11, 2019. ஒரு வாரத்துக்கு முன் டிசம்பர் 11, 2019 அன்று
24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,917 ரூபாய் எனில் ஒரு பவுன் 31,336 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,591 ரூபாய் எனில் ஒரு பவுன் 28,728 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

விலை வித்தியாசம்

விலை வித்தியாசம்

ஆக கடந்த செப்டம்பர் 04, 2019 அன்றைக்கு தங்கம் விற்ற விலையையும், டிசம்பர் 11, 2019 அன்று விற்ற தங்கம் விலையையும் ஒப்பிட்டால், 24 கேரட் ஒரு பவுன் தங்கத்தை 1,520 ரூபாய் விலை குறைவாக வாங்கி இருக்கலாம். அதே போல 22 கேரட் ஒரு பவுன் தங்கத்தை 1,416 ரூபாய் விலை குறைவாக வாங்கி இருக்கலாம்.

இப்போது நிலவரம்

இப்போது நிலவரம்

இன்று டிசம்பர் 19, 2019, வியாழக்கிழமை,
24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,963 ரூபாய் என ஒரு பவுன் 31,704 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,633 ரூபாய் என ஒரு பவுன் 29,064 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

விலை ஏற்றம்

விலை ஏற்றம்

கடந்த டிசம்பர் 11, 2019 விலையுடன், இன்றைய (டிசம்பர் 19, 2019) விலையை ஒப்பிட்டால்... 24 கேரட் ஒரு பவுன் தங்கத்தை 368 ரூபாய் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டும். அதே போல 22 கேரட் ஒரு பவுன் தங்கத்தை 336 ரூபாய் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price went down around Rs 1920 for 8 gram missed it

The indian sentimental precious metal gold price had went down Rs 1,920 per poun (8 Gram). Many of us missed it. Again Gold price went down Rs. 1,520 per poun.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X