தொடர்ந்து மக்களை மிரட்டி வரும் தங்கத்தின் விலையினால் விலை கொஞ்சமேனும் குறையாதா? கொஞ்சமாவது வாங்கிவிட மாட்டோமா? என்று நினைக்கும் மக்கள் இங்கு ஏராளம்.
இப்படி ஒரு நிலையில் தொடர்ந்து நாளுக்கு நாள் விலை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது தொடர்ந்து உச்சம் கண்டு வரும் தங்கம் விலை கொஞ்சமேனும் குறைந்துவிடாதா? என்ற எண்ணும் மக்களுக்கு தான் இந்த கட்டுரை.
இந்தியாவைப் புரட்டிப்போட்ட தனியார் வங்கிகள்.. ரிசர்வ் வங்கியின் அதிரடி ஆட்டம்..!

பாதுகாப்புக்காக அதிகரிக்கும் முதலீடு
கொரோனா வைரஸின் பாதிப்பால் உலகளாவில் பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகிறது. மேலும் பரவி வரும் கொரோனா தாக்கத்தினால் பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது பாதுகாப்பு கருதி, தங்கத்தில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர்.

வட்டி விகிதம் குறையலாம்
இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமாக கருதப்படும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. மேலும் அமெரிக்காவின் 10 வருட பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாபம் 0.5% குறையலாம் என்றும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி காணலாம். இதனால் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் விலை
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் விலையில் அவுன்ஸூக்கு 0.25% ஏற்றம் கண்டு 1,676.80 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 1678.35 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று 1703.80 டாலர்களாக அதிகரித்து, பின்னர் இன்று 1658.25 டாலர்களர்கள் வரை குறைந்தும் வர்த்தககமாகியுள்ளது. எனினும் தற்போது 1678.35 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.

எம்சிஎக்ஸ் விலை
இதே இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் கடந்த இரண்டு சந்தை தினங்களாகவே வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்த நிலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும் 10 கிராம் ப்யூச்சர் காமாடிட்டி தங்கத்தின் விலையானது சற்று குறைந்து 44158 ஆக வர்த்தகமாகி வருகிறது. எனினும் இன்னும் அதிகரிக்கும் நிலையிலேயே செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆக நிச்சயம் ப்யூச்சரில் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வெள்ளி விலை
தங்கம் விலையை போன்று வெள்ளி விலையும் சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. வெள்ளியும் இரண்டாவது நாளாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக இன்று வெள்ளியின் விலை 1.67% குறைந்து 46,220 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 2,000 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆபரண தங்கத்தின் விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) தங்கத்தின் விலையானது 10 ரூபாய் வீழ்ச்சி கண்டு 4,198 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே சவரனுக்கு 33,584 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 4,580 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலையானது 45,800 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.