தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நிபுணர்கள் பலரும் இதனையே கணித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தங்கத்தின் விலையானது அடுத்த 12 - 15 மாதங்களில் உச்சம் தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இது குறித்து மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் கணிப்பு படி அடுத்த 12 - 15 மாதங்களில் அவுன்ஸூக்கு 2000 டாலர்களுக்கு மேலாக அதிகரிக்கலாம் என கணித்துள்ளது.
சொல்லப்போனால் முந்தைய வரலாற்று உச்சத்தினை கூட உடைக்கலாம் என கணித்துள்ளது.
5 வருட முடிவில் ரூ.20 லட்சத்திற்கு மேல்.. எவ்வளவு முதலீடு.. யாரெல்லாம் முதலீடு செய்யலாம்..!

மீடியம் டெர்ம் இலக்கு
இதே மீடியம் டெர்மில் தங்கம் விலையில் அடுத்த இலக்கு 1915 டாலர்கள் மற்றும் 1965 டாலர்களை தொடலாம். இதே சப்போர்ட் லெவல்களாக 1800 டாலர்கள், 1745 டாலர்களையும் தொடலாம் என கணித்துள்ளது. இதே அடுத்த 12 - 15 மாதங்களில் அவுன்ஸூக்கு 2000 டாலர்களுக்கு மேலாக அதிகரிக்கலாம் என கணித்துள்ளது.

ஆண்டு தொடக்கத்தில் ஏற்றம்
2021ம் ஆண்டின் தொடக்கத்தில் அதிகரித்து வந்த கொரோனா, அமெரிக்கா சீனா பிரச்சனை, தடுப்பூசி விகிதம், உருமாற்றம் அடைந்த கொரோனா பரவல், பொருளாதார வளர்ச்சி விகிதம், பணவீக்கம், பொருளாதார ஊக்க நடவடிக்கைகள், அரசியல் பிரச்சனைகள்,மருத்து பற்றாக்குறை என பலவும் தங்கத்திற்கு ஆதரவாக அமைந்தன. ஏனெனில் 2020ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரலாற்று உச்சத்தினை தொட்ட தங்கம் விலையானது 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் உச்சம் எட்டியது. எனினும் பிற்பாதியில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் மீண்டும் சரிவினைக் கண்டது.

தங்கம் விலை அதிகரிக்கலாம்
எனினும் பெரியளவில் சரிவினைக் காணவில்லை. 2020ம் ஆண்டில் காமெக்ஸ் தங்கத்தில் 25% வருமானம் கிடைத்தது. ஆனால் 2021ல் இது பெரியதாக கைகொடுக்கவில்லை. எப்படியிருப்பினும் நடப்பு ஆண்டில் மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஓமிக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தங்கம் விலை மீண்டும் அதிகரிப்படலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இதனை ஊக்குவிக்கும் விதமாக பணவீக்கமும் அதிகரித்து காணப்படுகின்றது.

பட்டையை கிளப்பிய வெள்ளி
இதற்கிடையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து அபான்ஸ் குழுமத்தின் (EVP & Head Capital & Commodities Market (Abans Group) மகேஷ் குமாரிடம் பேசினோம்.
கடந்த வாரத்தின் இறுதியில் தங்கம் விலையானது 1816.50 டாலர்கள் என்ற லெவலில் இருந்தது. அந்த லெவலில் இருந்து பார்க்கும் போது தங்கம் விலையானது சற்று அதிகரித்து, 1840 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. எனினும் தங்கத்தினை விட வெள்ளி விலை நன்றாக இருந்தது. 22.954 டாலராக இருந்த வெள்ளியின் விலை, தற்போது 24.207 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. இந்த வாரத்தில் தங்கம் விலை 1.32% ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் வெள்ளி விலை சுமார் 5.59% ஏற்றத்தில் காணப்படுகின்றது.

தங்கம் விலையில் அழுத்தம்
தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் பத்திர சந்தை காரணமாக தங்கம் விலையானது, கடுமையானது எதிர்ப்பினை கண்டு வருகின்றது. இது உலகம் முழுக்க பணவீக்க விகிதம் என்பது அதிகரித்து வரும் நிலையில் கூட கைகொடுத்ததாக தெரியவில்லை. எப்படியிருப்பினும் சர்வதேச பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், தொழிற்துறையில் இந்த விலைமதிப்பற்ற உலோகங்களின் தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி தேவை அதிகரிக்கலாம்
கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கில் பல நாடுகளும் பசுமை ஆற்றலுக்கு திரும்பி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் காரணமாக சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படும் வெள்ளியின் தேவையை ஊக்குவிக்கலாம். இது நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.

வெள்ளிக்கு ஆதரவு
சீனாவின் பொருளாதாரத்தில் நிலவி வரும் வலிமையான அறிகுறிகள், சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என அனைத்தும், தொழிற்துறை உலோகமான வெள்ளிக்கு ஆதரவாக அமையலாம். டிசம்பரில் சீனாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டினை காட்டிலும் +20.9% அதிகரித்துள்ளது.
இது தவிர அமெரிக்காவின் தொழிற்துறை குறித்தான தரவும் சாதமாக வந்த நிலையில், இது வெள்ளியின் தேவை எதிர்காலத்தில் அதிகரிக்க வழிவகுக்கலாம். இதற்கிடையில் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் மற்றும் சக ஊழியர்களின் உரை, ஃபெடரல் வங்கியின் ஜனவரி 25 - 26 கூட்டத்திற்கு பிறகு வெள்ளி விலை அதிகரிக்கலாம் என கூறியுள்ளார்.