தென்னிந்தியா முழுவதும் ஒரே விலை.. தங்கநகை வியாபாரிகளின் புதிய முயற்சி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக மார்க்கெட்டில் தங்கம் விலை ஒரே விலையாக விற்கப்பட்டு வந்த போதிலும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மாநிலங்களிலும் சில வித்தியாசங்கள் தங்கம் விலையில் இருப்பது தெரிந்ததே.

போக்குவரத்து செலவு, வரி உள்பட பல்வேறு காரணங்களால் தங்கம் விலையில் இடத்திற்கு இடம் சற்று மாறுதல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஒரு விலையும் கோவையில் ஒரு விலையும் மதுரையில் ஒரு விலையும் இருப்பதற்கு இதுதான் காரணம்.

இந்த நிலையில் ஒரே மாநிலத்தில் மட்டுமின்றி தென் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரே விலையில் தங்கத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

எப்பவுமே இந்த பங்குகளுக்கு மவுசு தான்.. வாங்க ரெடியா இருங்க.. 3 பங்குகளை பட்டியலிடும் நிபுணர்கள்! எப்பவுமே இந்த பங்குகளுக்கு மவுசு தான்.. வாங்க ரெடியா இருங்க.. 3 பங்குகளை பட்டியலிடும் நிபுணர்கள்!

தங்கத்தின் அவசியம்

தங்கத்தின் அவசியம்

தங்கம் என்பது அத்தியாவசியமான ஆபரணம் என்பதையும் தாண்டி அவசியமான சேமிப்பாகவும் இந்தியர்கள் மத்தியில் கருதப்பட்டு வருகிறது என்பதும் இதனால் தான் இந்தியர்களுக்கு ஆதிகாலத்திலிருந்தே தங்கத்தின் மீது ஈர்ப்பு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நகைகளாக மட்டுமின்றி அவசர தேவைக்கு வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெற்று கொள்ளும் வசதி இருப்பதால் அதிக அளவில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

 1300 டன் தங்கம்

1300 டன் தங்கம்

1,300 டன் தங்கம் இந்தியாவில் மட்டும் ஒரு ஆண்டில் விற்பனையாகி வருவதாகவும் இதில் கிட்டத்தட்ட 30% தமிழகத்தில் மட்டுமே விற்பனையாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தங்கத்தின் விலையை நாடு முழுவதும் ஒரே நிலையாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் ஒரே விலையில் தங்கம் விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 மாநிலங்கள்

5 மாநிலங்கள்

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் ஒரே விலையில் தங்கம் விற்பனை செய்யும் வகையில் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து முன்னணி நகைக் கடை உரிமையாளர் ஒருவர் கூறியபோது, ' ஒவ்வொரு நகை கடைகளிலும் ஒவ்வொரு விலைக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும், ஆன்லைனில் ஒரு விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும், இதனை தவிர்க்க ஒரே விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களுக்கு குழப்பம்

வாடிக்கையாளர்களுக்கு குழப்பம்

ஒவ்வொரு கடைக்கும் விலையில் வித்தியாசம் காணப்படுவதால் தங்க நகை விற்பனையில் தேவையற்ற போட்டி ஏற்படுகிறது என்றும், அதனால் வாடிக்கையாளர்களுக்கும் தங்கத்தின் விலை தொடர்பாக குழப்பம் சந்தேகம் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொண்டோம்.

ஒரே விலை

ஒரே விலை

எனவே அனைத்து தங்க நகை கடைகளிலும் ஒரே விலையில் விற்பனை செய்வதற்கான முயற்சியை எங்கள் சங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்காக கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் தென் மாநிலங்களை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்கள் இதில் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தீர்மானம்

தீர்மானம்

தென்னிந்தியா முழுவதும் ஒரே விலையில் தங்கம் விற்பனை செய்ய இந்த கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டதாகவும், ஆரம்பத்தில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் ஒருமனதாக இந்த கொள்கை ஏற்று கொள்ளப்பட்டது என்றும் நகைக்கடை உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

செய்கூலி - சேதாரம்

செய்கூலி - சேதாரம்

கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா, ஆகிய மாநிலங்களில் ஒரே விலையில் தங்கம் விற்பனை செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், அடுத்த கட்டமாக இந்த திட்டத்தை வட இந்தியாவிலும் செயல்படுத்தி நாடு முழுவதும் ஒரே விலையில் விற்பனை செய்ய ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் செய்கூலி மற்றும் சேதாரம் ஆகியவற்றுக்கும் ஒரே நிலை ஏற்பட முயற்சிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gold rate tamil nadu
English summary

Gold sale at same price in 5 southern states!

Gold sale at same price in 5 southern states! | தென்னிந்தியா முழுவதும் ஒரே விலை.. தங்கநகை வியாபாரிகளின் புதிய முயற்சி!
Story first published: Wednesday, August 24, 2022, 15:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X