மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை புரோக்கர் இல்லாமல் நேரடியாக முதலீடு செய்யலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் டிமேட் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டிஸ்ட்ரிபியூட்டர் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் யாருடைய உதவியுமின்றி நாமே நேரடியாக முதலீடு மியூச்சுவல் ஃபண்ட்களில் செய்யலாமா? என்ற கேள்விக்கு தற்போது விடை பார்ப்போம்.

லட்சங்களை கொட்டி தரும் சானிடரி நாப்கின் பிசினஸ்.. தொடங்குவது எப்படி? லட்சங்களை கொட்டி தரும் சானிடரி நாப்கின் பிசினஸ்.. தொடங்குவது எப்படி?

KYC மட்டுமே முக்கியம்

KYC மட்டுமே முக்கியம்

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு KYC உறுதி செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே முக்கியம் என்பதும் நேரடியாகவோ அல்லது டிஸ்ட்ரிபியூட்டர் மூலமாகவோ எப்படி வேண்டுமானாலும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்

ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்

KYC பணியை முடித்துவிட்டால் நீங்கள் நேரடியாக ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யலாம். ஆன்லைனில் முதலீடு செய்வதில் சில சந்தேகங்கள் இருந்தால் அருகிலுள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கிளைக்கு சென்று மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

ஆன்லைன் பரிவர்த்தனை

ஆன்லைன் பரிவர்த்தனை

மியூச்சுவல் ஃபண்ட்களில் நேரடியாக முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதற்கு ஆன்லைன் பரிவர்த்தனையே சிறந்தவழி. ஏனெனில் இது கமிஷன் தொகையை மிச்சப்படுத்தலாம். நாம் எந்த நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய போகிறோமோ அந்த நிறுவனத்தின் இணைய தளம் வழியாக தாராளமாக நாமே நேரடியாக முதலீடு செய்யலாம். அதேபோல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை திரும்ப வேண்டும் என்றாலும் அதே இணையதளத்தில் சென்று திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

லாகின் பாஸ்வேர்டு

லாகின் பாஸ்வேர்டு

ஆனால் அதே நேரத்தில் நீங்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்டில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது அந்தந்த நிறுவனத்தின் லாகின் பாஸ்வேர்டுகளை ஞாபகமாக நிர்வாகிக்க வேண்டியிருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

போர்ட்போலியோ

போர்ட்போலியோ

அதுமட்டுமின்றி நிதி திட்டத்தை உருவாக்குவது, இலக்குகளை நிர்ணயிப்பது, பொருத்தமான ஃபண்ட்களை தேர்வு செய்வது ஆகியவற்றை நீங்களே தெரிந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நீங்கள் எந்தெந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளீர்கள் என்ற போர்ட்போலியோவை அடிக்கடி நீங்களே கண்காணித்துக் கொள்ளவேண்டும்.

டிஸ்ட்ரிபியூட்டர்

டிஸ்ட்ரிபியூட்டர்

சரியான பங்குகளை தேர்வு செய்வது, போர்ட்போலியோவை சரியான முறையில் நிர்வாகம் செய்வது ஆகியவற்றில் பலருக்கு அனுபவம் இல்லை என்பதால் தான் டிஸ்ட்ரிபியூட்டர் மூலமாக எளிதாக முதலீடு செய்து வருகின்றனர். இவற்றை சமாளிக்கும் திறன் உங்களுக்கு இருந்தால் தாராளமாக நீங்கள் நேரடியாக முதலீடு செய்யலாம். ஆனால் அதே நேரத்தில் இதில் ஏதாவது குழப்பம் இருந்தால் டிஸ்ட்ரிபியூட்டர் வழியாக முதலீடு செய்வதே நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: mutual fund broker investment
English summary

How can I invest in Mutual Funds directly without any broker?

You can invest directly in a Mutual Fund either offline or online, if your KYC is complete. If you are uncomfortable transacting online, you can invest in a fund by visiting its nearest branch.
Story first published: Tuesday, October 4, 2022, 18:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X