இந்தியாவில் பல இனம், மதம், மொழிகள் என பலவகை இருந்தாலும், எல்லோருக்கும் பிடித்தமான ஒரே விலையுயர்ந்த உலோகம் தங்கம் தான். அது குழந்தை முதல் வயதான தாத்தா பாட்டி வரை.
அப்படி இருக்கையில், பலரும் லாக்டவுன் காலத்தில் கூட, ஆன்லைனில் தங்கத்தினை வாங்கிக் குவித்தனர். இதற்கிடையில் தற்போதைய விழாக்கால பருவம் முதல் கொண்டு, தொடர்ந்து பொங்கல் என பல பண்டிகைகளும் வரவுள்ளன.
இதன் காரணமாக தங்கம் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலை குறையுமா? அதிகரிக்குமா? அடுத்து என்ன செய்யலாம். வாருங்கள் பார்க்கலாம்.
தங்கம் விலை 15% சரிவு.. இப்போ தங்கம் வாங்கினால் லாபமா? நிபுணர்களின் கணிப்பு இதுதான்..!

சலுகைகள் ஏன்?
பொதுவாக தை பொறந்தால் வழி பிறக்கும் என கூறுவார்கள். ஏனெனில் இந்த காலகட்டம் அறுவடை காலம் என்பதால் விவசாயிகள் கையில் பண புரளும். இதன் காரணமாக பொதுவாக ஜனவரி மாதத்தில் தங்கம் மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்களுக்கும் சலுகை கொடுப்பது வழக்கம். ஏனெனில் விவசாய மக்கள் கையில் உள்ள பணத்தினை, தங்கமாக வாங்கி வைப்பர்.

கொரோனா தாக்கம்
அதோடு தங்கம் விலையானது அதிகரித்தாலும், குறைந்தாலும், மக்கள் தங்கம் வாங்குவது லாக்டவுன் ஆரம்பத்தில் இருந்து சற்று குறைந்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் லாக்டவுன காலகட்டங்களில் மக்கள் கையில் பணப்புழக்கம் வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக தங்கம் வாங்குவதும் குறைந்தது. அதோடு இது வரையில் கொரோனாவின் தாக்கம் குறைந்தபடாக இல்லை. சொல்லப்போனால் புதிய கொரோனா பரவல் தொற்று உள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர். தமிழரின் தொல்பெருமையைப் பறைசாற்றும் கீழடி நாகரீகத்தைத் தமிழர் நாகரீகம் அல்ல; அது பாரதப் பண்பாடு என வாய் கூசாமல் சொன்னவர்தான் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராகவே இருக்கின்றார் என்பது அதிமுக ஆட்சியின் வெட்கக்கேடான வரலாறு.

தள்ளுபடிகள் அதிகரிப்பு
இதற்கிடையில் பிசிகல் தங்கத்திற்கான தள்ளுபடிகள் அதிகரித்துள்ளது. அதோடு வரவிருக்கும் பண்டிகை காலத்தில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக விற்பனையை ஊக்குவிக்குபதற்காக டீலர்கள் தங்கத்திற்கு அதிக தள்ளுபடிகளை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் வரவிருக்கும் விழாக்காலத்தினை கருத்தில் கொண்டு, சலுகைகள் வாரி வழங்கப்பட்டு வருகின்றன.

சிங்கப்பூர் & ஆசிய நாடுகள்
இந்தியாவில் மட்டும் அல்ல, சிங்கப்பூர் மற்றும் சில ஆசிய நாடுகளிலும் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் விடுமுறை, விழாக்கால சலுகைகள், குறைந்த விலை என பலவற்றையும் பையர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வாங்க தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

தங்கம் வாங்குவது குறையலாம்
இந்திய மக்கள் கர்மாஸ் (Kharmass) என்ற இந்த நாட்களில் (டிசம்பர் 15 முதல் ஜனவரி 14 வரை), பொதுவாக தங்கம் வாங்குபவர்கள் இந்த காலகட்டத்தினை தவிர்ப்பதுண்டு. குறிப்பாக ஜார்கண்ட், உத்திர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் இது நடைமுறை வெகுவாக கடைபிடிக்கப்படுகிறது. இதே தென் பகுதிகளில் மார்கழி மாதமாக அனுசரிக்கப்படுகிறது. அதாவது இது ஆன்மீகம் தொடர்பான மாதமாக பார்க்கப்படுகிறது. ஆக இந்த காலகட்டத்தில் முகூர்த்த நாட்களும் அதிகம் இல்லை. இதனால் மக்கள் தங்கம் வாங்குவது குறையலாம்.

விடுமுறைகளில் கவனம்
மக்கள், அடுத்து வரவிருக்கும் காலகட்டங்களில் வரும் விடுமுறைகளில் கவனத்தினை செலுத்தி வருகின்றனர். இதனால் விலையுயர்ந்த ஆபரணங்களுக்கான தேவை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரவிருக்கும் வாரங்களில் தேவை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக டீலர்கள் தங்கத்தின் விலையில் அவுன்ஸூக்கு 2 டாலர்கள் தள்ளுபடியினை கொடுக்கின்றனர். எனினும் இதோடு தங்கம் இறக்குமதிக்கான வரி 12.5% மற்றும் விற்பனை 3% சேரும்.

சீனாவில் எப்படி?
இந்தியாவினை விட அதிகளவில் தங்கத்தினை உபயோகப்படுத்தும் ஒரு நாடு சீனா தான். அங்கு தள்ளுபடிகள் அவுன்ஸூக்கு 15 - 20 டாலர்களாகும். இது கடந்த வாரம் 16 - 20 டாலர்களாக இருந்தது. இதே ஹாங்காங்கில் கடந்த வாரத்தில் வசூல் செய்யப்பட்ட பிரீமியம் விலையானது 0.50 டாலர்களில் இருந்து, 0.50 - 1.50 டாலர்களாக அதிகரித்துள்ளது.

தங்கம் தள்ளுபடி
கொரோனாவின் காரணமாக தங்கம் வாங்குவது குறைந்த நிலையில், உலகின் மிகப்பெரிய நுகர்வோரான சீனாவின் கடந்த மார்ச் முதல் தங்கம் விலையானது தள்ளுபடியில் வர்த்தகம் செய்யப்பட்டது. இதற்கிடையில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் விலை குறைவாக இருப்பது தங்கத்தின் தேவையை அதிகரிக்கும். நுகர்வினையும் அதிகரிக்கும் என்று டீலர்கள் கூறியுள்ளனர்.

சிங்கபூரிலும் பிரீமியம் விலை
சிங்கப்பூரில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு, உலகளாவிய தங்கம் விலையை விட, அவுன்ஸூக்கு 0.90 - 1.20 டாலர்கள் வரை கூடுதலாக விற்கப்படுகிறது. இதே கடந்த வாரத்தில் 0.80 - 130 டாலர்கள் அதிகமாக இருந்தது. கிறிஸ்துமஸூக்கு முன்னதாக தங்கம் தேவை அதிகரித்ததால் விலை அதிகமானதாக டீலர்கள் கூறியுள்ளனர்.

தங்கம் வாங்க ரெடியா இருங்க
மற்ற நாடுகளில் தங்கம் விலையானது பிரீமிய விலையில் இருந்தாலும், இந்தியாவில் சற்று குறைவாக காணப்படும் நிலையில், நிபுணர்கள் வரும் வாரங்களில் விலை குறையலாம் என்றும் கூறுகின்றனர். ஆக இது விழாக்கால பருவத்தில் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.