மூத்த குடிமக்கள் கவனத்துக்கு! FD திட்டங்களுக்கு 6.6% மேல் வட்டி வேண்டுமா? இதப் படிங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் பரவலால், இந்தியப் பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, ஆர்பிஐ தன் வட்டி விகிதங்கள் மற்றும் சி ஆர் ஆர் விகிதங்களை பெரிய அளவில் குறைத்தது.

 

இதனால் ஒரு பக்கம் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைந்தது. மறு பக்கம் ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) திட்டங்களுக்கான வட்டி விகிதமும் குறைந்துவிட்டது.

எனவே வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit)-ல் இருந்து வரும் வட்டி வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்த பெரியவர்கள் & முதியவர்களுக்கு பண நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

6.6 சதவிகிதம் வட்டி

6.6 சதவிகிதம் வட்டி

பொதுவாகவே வயதானவர்கள் எஸ்பிஐ போன்ற அரசு வங்கிகளைத் தான் அதிகம் நம்புகிறார்கள். ஆனால் எஸ்பிஐயில் 6.2 % தான் அதிகபட்ச வட்டியாக மூத்த குடிமக்களுக்கு கிடைத்துக் கொண்டு இருக்கிறது. இப்போது நம் வீட்டு பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் எங்கு எந்த வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி (6.6 சதவிகிதத்துக்கு மேல்) பெறலாம் என்பதைத் தான் பார்க்கப் போகிறோம்.

யாருக்கு பொருந்தும்

யாருக்கு பொருந்தும்

இந்த வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் சிறப்பு வட்டி விகிதங்கள். எனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதுவும் 2 கோடி ரூபாய்க்குள் செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது எஸ்பிஐ, ஹெச் டி எஃப் சி வங்கி & ஆக்ஸிஸ் வங்கி போன்றவைகளை ஒப்பீடுக்கு எடுத்துக் கொள்கிறோம்.

வட்டிக் குறைப்பு
 

வட்டிக் குறைப்பு

ஹெச்டிஎஃப்சி வங்கி கடந்த 18 மார்ச் 2020 அன்று தான் தன் வட்டி விகிதங்களைக் குறைத்தது. எஸ்பிஐ கடந்த 28 மார்ச் 2020 அன்று தான் தன் FD-க்கான வட்டி விகிதங்களைக் குறைத்தது. ஆக்ஸிஸ் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் 2 ஏப்ரல் 2020 நிலவரப்படி கொடுத்து இருக்கிறோம்.

1 - 2 வருடம் FD Interest rate

1 - 2 வருடம் FD Interest rate

எஸ்பிஐ 1 - 2 வருடத்துக்கான மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு (Fixed Deposit) புதிய வட்டி விகிதங்கள் படி 6.2 % தான் வட்டி கொடுக்கிறார்கள். ஆனால் ஹெச் டி எஃப் சி வங்கி தன் 1 - 2 வருட மூத்த குடிமக்கள் Fixed Deposit திட்டத்துக்கு 6.65 % வட்டி கொடுக்கிறார்கள். இதற்கே ஷாக் ஆனால் எப்படி..? ஆக்ஸிஸ் வங்கியோ மூத்த குடிமக்களின் 1 - 2 வருட டெபாசிட் திட்டங்களுக்கு 7.05 - 7.15 % வட்டி கொடுக்கிறார்கள்.

2 - 3 வருடங்கள் FD Interest rate

2 - 3 வருடங்கள் FD Interest rate

இந்த 2 - 3 வருட மூத்த குடி மக்கள் டெபாசிட் திட்டத்துக்கு ஆக்ஸிஸ் வங்கி 7.0 - 7.15 % வட்டி கொடுக்கிறார்கள். ஆனால் அரசின் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இதே 2 - 3 வருட மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 6.2 % மட்டுமே கொடுக்கிறது. ஹெச் டி எஃப் சி வங்கி, ஓரளவுக்கு பரவாயில்லாமல், 6.75 % வட்டி கொடுக்கிறார்கள். ஆக இதிலும் ஆக்ஸிஸ் வங்கி தான் அள்ளிக் கொடுக்கிறது.

3 - 10 வருடம் FD Interest rate

3 - 10 வருடம் FD Interest rate

இந்த நீண்ட கால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களான 3 - 10 வருட ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு, ஆக்ஸிஸ் வங்கி 7.00 % வட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இது எஸ்பிஐ கொடுக்கும் 6.20 சதவிகிதத்தை விட 0.8 % அதிகம். ஹெச் டி எஃப்சி வங்கி 6.65 % தான் வட்டி கொடுக்கிறது. மூத்த குடிமக்கள் இப்போது எந்த வங்கியில் தங்கள் டெபாசிட் பணத்தை வைக்கலாம் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Senior Citizen FD Interest rates: SBI HDFC bank Axis Who is giving more interest

For Senior Citizens, Among State bank of india, HDFC bank, Axis bank who is paying more interest rates for the fixed deposits below 2 crore rupees.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X