தங்கம் விலை அதிகரிக்கலாம்.. சொல்வது உலக வங்கி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக தங்கம் விலையை பொறுத்தவரை, பொருளாதார நிபுணர்கள் அனைவரும் அதிகரிக்கும் என்றே தொடர்ந்து ஒரு கருத்தை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் உலக வங்கியே தங்கத்தின் விலை அவுன்சுக்கு 1600 டாலர் வரை செல்லலாம் என்றும் அதுவும், 2020ம் ஆண்டில் இது நடக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இது தான் உண்மையும் கூட. உலக வங்கியின் சமீபத்திய கணிப்பின் படி சந்தையில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் தங்கத்தில் விலையில் ஏற்றம் தொடரும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் சமீபத்திய அறிக்கையில் உலக வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய் கிழமையன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகளாவிய நிதி நிறுவனம் 2020ம் ஆண்டில் தங்கத்தின் விலையானது 5.6 சதவிகிதம் உயரும் என்றும், இதன் விலை அவுன்சுக்கு 1600 டாலர் வரை செல்லலாம் என்றும் கூறியுள்ளது.

தங்கம் எதிர்மறையான வளர்ச்சி

தங்கம் எதிர்மறையான வளர்ச்சி

விலைமதிப்பற்ற உலோகங்களின் விலைக் கண்ணோட்டத்திற்கான அபாயங்கள் தலைகீழாக உள்ளன. ஏனெனில் இது உலகப் பொருளாதாரத்தின் உயர்ந்த நிச்சயமற்ற தன்மை மற்றும் பலவீனமான வளர்ச்சி வய்ப்புகளையே இது பிரதிபலிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மூன்றாவது காலாண்டில் தங்கத்தின் விலையானது 12.6 சதவிகிதம் உயர்ந்து ஆறு வருட உயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் இந்த கருத்துகள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கலாம்

தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கலாம்

இந்த நிலையில் நடப்பு காலாண்டில் இதன் வளர்ச்சி 9.5 சதவிகிதம் லாபத்தை பதிவு செய்யலாம் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடப்பு நிதியாண்டில் வலுவான தேவை இதற்கு உறுதுணை புரிகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பானது, இன்னும் பொருளாதாரம் மேம்படவில்லை, இது இன்னும் நிச்சயமற்ற நிலையில் தான் இன்னும் உள்ளது என்றும், இதனால் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், இதனால் விலை மேலும் அதிகரிக்கவே இது வழிவகுக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

தங்க ஆபரண விற்பனையும் கைகொடுத்துள்ளது
 

தங்க ஆபரண விற்பனையும் கைகொடுத்துள்ளது

இது ஒரு புறம் எனில் மறுபுறம், மத்திய வங்கியின் கொள்முதலால் தங்கத்திற்கான தேவை மேலும் அதிகரித்துள்ளது என்றும், தங்கம் சம்பந்தமான வர்த்தக நிதிகளை முதலீட்டாளர்கள் வைத்திருப்பதாலும், மேலும் தங்க ஆபரண விற்பனை அதிகரித்திருப்பதாலும் விலை மேலும் மேலும் கூடிக் கொண்டே போகிறது, குறிப்பாக இந்தியாவில் தங்கம் ஆபரணம் விற்பனை விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

தொழில் துறையிலும் தேவை அதிகரிப்பு

தொழில் துறையிலும் தேவை அதிகரிப்பு

மேலும் தொழிற்துறையிலும் தேவை அதிகம் இருப்பதால் வெள்ளி, பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களும் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்றும், இவற்றை போலவே தங்கத்திற்கும் இங்கு தேவை அதிகமாகவே உள்ளது என்றும் இதனால் இதன் விலையும் சிறப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி விலை அதிகரிக்கும்

வெள்ளி விலை அதிகரிக்கும்

இதே வெள்ளியை பொறுத்த வரையில் உலக வங்கி அடுத்த ஆண்டு 4.9 சதவிகிதம் உயரும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இது அவுன்சுக்கு 19 டாலருக்கு அருகில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் உலோகத்தின் வளர்ச்சி 3.1 சதவிகிதமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

அடிப்படை உலோகங்கள் விலை குறையலாம்

அடிப்படை உலோகங்கள் விலை குறையலாம்

இந்த நிலையில் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியானது தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வருவதால், அடிப்படை உலோகங்களை விட, விலைமதிப்பற்ற உலோகங்களின் விலை அதிகரிக்கும் என்றும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது. எனினும் அடிப்படை உலோகங்களில் காப்பரின் விலை நடப்பு ஆண்டில் 8 சதவிகிதம் குறையும் என்றும், அடுத்த ஆண்டில் காப்பர் விலை மட்டும் 2.3% வளர்ச்சி இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அடிப்படை உலோகம் விலை வீழ்ச்சியடையும்

அடிப்படை உலோகம் விலை வீழ்ச்சியடையும்

எனினும் மொத்த அடிப்படை உலோகங்களும் அடுத்த ஆண்டும் 1.4 சதவிகிதம் வீழ்ச்சி காணும் எனவும், இதுவே நடப்பு ஆண்டில் 5.2 சதவிகித சரிவைக் காணும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனினும் காப்பருக்கான எதிர்மறையான கண்ணோட்டத்திலேயே தங்கம் விலை உள்ளது. உலகளாவிய சரிவு மற்றும் சீனாவில் குறைவான தேவை ஆகியவற்றால் காப்பருக்கான தேவை குறையும் என்றும், இதே சரிந்து பொருளாதாரத்தை தடுத்து நிறுத்த தங்கத்தில் அதிகளவு முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

இந்தியாவில் தங்கம்

இந்தியாவில் தங்கம்

மற்ற நாடுகளை விட இந்தியாவில் தங்கத்தின் தொழில் துறை பயன்பாடுகள் ஒரு புறம் இருந்தாலும், ஆபரண தங்கத்திற்கு தேவை அதிகமே, அதிலும் எவ்வளவு தான் விலை அதிகரித்தாலும், அதன் மீதான ஈடுபாடு குறையப்போவதில்லை. மேலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தங்கத்திற்கான விலை கூட இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. இந்திய ரூபாயின் வீழ்ச்சி. ஏனெனில் ரூபாயின் மதிப்பு மேலும் தங்கத்திற்கான விலையில் பிரதிபலிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World Bank says gold rate may touch in $1,600 an ounce in next year

World Bank says gold rate may touch in $1,600 an ounce in next year, but copper prices are going to down for economy crisis and china's demand fall
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X