இந்தியாவில் எஸ்ஐபி திட்டம் மிகவும் பிரபலமாக உள்ளது குறிப்பாக, இளம் முதலீட்டாளர்கள் மத்தியிலும், புதிதாக வேலைக்குச் சேர்ந்து முதலீடு மீது ஆர்வம் கொண்டவர்கள் அதிகளவில் SIP வாயிலாக முதலீடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வருடம் கொரோனா பாதிப்பால் இந்தியப் பங்குச்சந்தை அதிகளவிலான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில், எஸ்ஐபி வாயிலான முதலீடுகள் பெரிய அளவிலான நன்மையைக் கொடுத்துள்ளது.
அந்த வகையில் கடந்த ஒரு வருடத்தில் 25 சதவீதம் லாபம் கொடுத்த 4 எஸ்பிஐ பண்டுகளைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
1 லிட்டர் பெட்ரோல் வெறும் ரூ26.34 மட்டுமே.. ஆனா 90 ரூபாய்க்கு விற்பது ஏன்..?

பாங்க் ஆப் இந்தியா
நீங்கள் பாங்க் ஆப் இந்தியாவில் BOI Axa Tax Advantage பண்டில் SIP மூலம் முதலீடு செய்திருந்தால் கடந்த ஒரு வருடத்தில் கிட்டதட்ட 26 சதவீத லாபம் கிடைத்திருக்கும். கடந்த 5 முதல் 7 வருடத்தில் BOI Axa Tax Advantage Fund சிறப்பான லாபத்தைத் தனது முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யப்படும் காரணத்தால் அதிகளவிலான முதலீடுகள் குவிந்து வருகிறது. இந்தத் திட்டத்திற்குக் கிரிசில் அமைப்பு 5 ஸ்டார் கொடுத்துள்ளது.

இன்வெஸ்கோ இந்தியா
இன்வெஸ்கோ இந்தியா கான்டிரா பண்ட் திட்டத்தில் நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்பு முதலீடு செய்திருந்தால் தற்போது 21 சதவீத லாபம் கிடைத்திருக்கும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்ட முதலீடுகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்சி, இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றில் முதலீடு செய்கிறது.

கனரா ரோபெக்கோ
கிரிசில் மற்றும் வேல்யூ ரிசர்ச் ஆகிய அமைப்பால் 5 ஸ்டார் கொடுக்கப்பட்ட Canara Robeco Equity Tax Saver Fund கடந்த ஒரு வருடத்தில் 22 சதவீத லாபத்தைக் கொடுத்துள்ளது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
இன்போசிஸ், எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களில் இத்திட்ட முதலீடுகள் உள்ளது.

மீரே அசர்ட்
இத்திட்ட முதலீட்டு மூலம் முதலீட்டாளர்களுக்கு வருமான வரிச் சலுகை கிடைக்கும் என்பதால் மாத சம்பளக்காரர்கள் இத்திட்டத்தில் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகின்றனர்.
இத்திட்டம் சுமார் 4,400 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டுச் சொத்துக்களை நிர்வாகம் செய்து வருகிறது.