டெப்ட் ஃபண்டுகள்.. இது ஒரு சிறந்த முதலீடு.. எப்படி சிறந்த ஃபண்டினை தேர்வு செய்யலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெப்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் பொதுவாக ஒரு பாதுகாப்பான முதலீடு என்று கூறுவார்கள். இது பெரும்பாலும் கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படுகின்ற ஒரு திட்டம். இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் இதுல சில வருமான வரி சலுகையும் உண்டு.

அதோடு இந்த ஃபண்டுகளாக ஒரு வருடத்திற்கு மேல் வைத்திருந்தால் மூலதன ஆதாய வரி கிடையாது. இந்த திட்டத்தினை பொறுத்தவரை எத்தனை நாட்களூக்கு இந்த ஃபண்டை வைத்திருக்கிறோமோ? அவ்வளவு வருமானம் இருக்கும் என்பது தான்.

டெப்ட் ஃபண்டுகள்.. இது ஒரு சிறந்த முதலீடு.. எப்படி சிறந்த ஃபண்டினை தேர்வு செய்யலாம்..!

 

கொரோனாவின் அழுத்தம் தற்போது இந்த துறையில் காணப்பட்டாலும், விரைவில் மீட்பு விரைவில் மீண்டு வரும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் வங்கி டெபாசிட் மாதிரி கட்டாயம் இத்தனை வருடங்கள் வைத்திருந்தால் தான் வருமானம் என்பது இதில் கிடையாது. அது எல்லாவற்றையும் விட பங்கு சார்ந்த திட்டங்கள் போல இதில் என்ஏவியும் அதிகம் மாற்றம் காணாது.

இந்த ஃபண்டுகளில் நாம் முதலீடு செய்யுற காலத்தினை வைத்து இதனை மூன்று வகையா பிரிச்சிக்கலாம். ஒன்று ஷார்ட் டெர்ம் டெப்ட் ஃபண்ட், மீடியம் டெர்ம், லாங் டெர்ம் ஃபண்டுகள் என பிரிக்கப்பட்டுள்ளது.

ஆக நாம முதலீடு செய்யணும் நினைக்கும்போது இதில் தான் செய்யப்போறோம். இவ்வளவு காலத்துக்குள்ள, நம்ம பணம் நமக்கு வேணும் என்று தீர்மானித்து இதில் முதலீடு செய்யலாம். உதாரணத்துக்கு வரும் காலத்துல நீங்க ஒரு வீடு வாங்கவோ அல்லது திருமணத்திற்காக சேமித்து வைக்கிறீர்கள் என்றால், நிச்சயம் உங்களுக்கு ஏற்ற திட்டம் இது தான். ஏனெனில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையை பிக்ஸ்டு டெபாசிட், பாண்டுகள், அரசு கடன் பத்திரங்கள் இம்மாதிரியானவற்றில் தான் முதலீடு செய்வாங்க.

பொதுவா நாங்க எந்த ரிஸ்கும் எடுக்க விரும்பல, நான் இப்பதான் புதிதாக முதலீடு செய்யப்போறேன். வயதானவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த ஃபண்ட் ஏற்றது.

பைசாபஜார்.காம் அறிக்கையின் படி, நடப்பு ஆண்டில் சிறந்த ஐந்து டெப்ட் ஃபண்டுகள் என்னென்ன தெரியுமா?

நிப்பான் இந்தியா கில்ட் செக்யூரிட்டீஸ் ஃபண்டு- இது மூன்று வருடத்தில் 9.69 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.

எஸ்பிஐ மேக்னம் நடுத்தர கால நிதி (SBI Magnum Medium Duration Fund)- இது மூன்று வருடத்தில் 9.13% லாபம் கொடுத்துள்ளது.

கோடக் கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் (Kotak Credit Risk Fund) - இது மூன்று வருடத்தில் 6.96% லாபம் கொடுத்துள்ளது.

ஐசிஐ சி ஐ புரூடென்ஷியல் அல்ற்றா சார்ட் டெர்ம் ஃபண்ட் (ICICI Prudential Ultra Short Term Fund) - இது மூன்று வருடத்தில் 7.98% வருமானம் கிடைத்துள்ளது.

பிராங்கிளின் இந்தியா லிக்விட் ஃபண்ட் (Franklin India Liquid Fund) - இது மூன்று வருடத்தில் 6.99% வருமானம் கொடுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to choose the right debt fund?

Debt funds are one of the safest investment instruments. who wish to earn optimal returns on their investment, without betting on risky avenues can invest this fund.
Story first published: Sunday, June 28, 2020, 17:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X