18 வயதுக்கு குறைவான மைனர் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்ய முடியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது பாதுகாப்பானது என்றும் சரியானது என்றும் பொது மக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

18வயதுக்கு மேலானவர்கள் முதல்முதலில் சம்பாதிக்க தொடங்கிய உடன் மியூச்சுவல் பண்ட் முதலீட்டை தொடங்க வேண்டும் என்றும் அப்போதுதான் அவர்களுடைய ஓய்வு காலத்தில் ஒரு மிகப்பெரிய தொகையை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை 18 வயதுக்குக் குறைவான மைனர்கள் பெயரிலும் முதலீடு செய்ய முடியுமா என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

உலகின் 10 பிசியான விமான நிலையங்களின் பட்டியல்.. ஒரே ஒரு இந்திய நகரம்!உலகின் 10 பிசியான விமான நிலையங்களின் பட்டியல்.. ஒரே ஒரு இந்திய நகரம்!

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் தொடங்குவதற்கு முதல் விதி 18 வயதிற்கு மேலானவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் குழந்தைகள் திருமணம் மற்றும் மேற்படிப்பு ஆகியவற்றுக்காக குழந்தைகளின் பெயர்களிலும் சில பெற்றோர்கள் மியூச்சுவல் பண்டை முதலீடு செய்வது உண்டு.

மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்ட்

மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்ட்

18 வயதுக்கு உட்பட்டவர்கள் பெயர்களில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதில் என்னென்ன நடைமுறைகள் உள்ளன என்பதை பார்ப்போம். 18 வயதுக்குட்பட்ட மைனர் பெயரில் முதலீடு தொடங்குவதாக இருந்தால் அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் உதவியுடன் ஃபண்டில் முதலீடு செய்யலாம். மேலும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நபராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாயிண்ட் கணக்கு அனுமதி இல்லை

ஜாயிண்ட் கணக்கு அனுமதி இல்லை

ஆனால் அதே நேரத்தில் மைனர் மியூச்சுவல் பண்ட் போர்ட்போலியோவில் ஜாயிண்ட் கணக்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இலக்கு

இலக்கு

மைனர் நபருக்காக முதலீடு செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்ட் அவருடைய உயர்கல்வி, திருமணம் போன்ற வகைகளில் ஒன்றை இலக்காக கொண்டிருக்க வேண்டும் என்பதும் அவசியம். ஆனால் அதே நேரத்தில் குழந்தை வயதாகி 18 வயது ஆன பின்னர் அந்த மியூச்சுவல் ஃபண்ட் கணக்கை மேஜர் கணக்காக மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றவில்லை என்றால் அந்த கணக்கில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளும் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரி

வரி

 

மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகள் தொடங்கப்பட்டு இருந்தாலும் அந்த நபர் 18 வயதுக்கு மேற்பட்ட பிறகு அந்த முதலீடு, முதலீட்டின் வருமானத்திற்கான வரி பொருப்புகளையும் அவர் ஏற்க வேண்டும். மேலும் குழந்தை மைனராக இருக்கும் போது குழந்தையின் பெயரில் முதலீடு செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்டில் இருந்து கிடைக்கும் லாபங்களை அந்த மைனரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு அதற்கு பொருந்தக்கூடிய வரிகளையும் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேஜர்

மேஜர்

மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் பட்டிருக்கும் நிலையில் அந்த மைனர், மேஜர் ஆன பிறகு அவருடைய தனிப்பட்ட கணக்காக அந்த மியூச்சுவல் ஃபண்ட் கருதப்படும் என்பதும் அதன் பின்னர் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கும் அந்த கணக்கிற்கும் சம்பந்தம் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்காலம்

எதிர்காலம்

எனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை என்பதும் மைனர் பெயரிலும் ஒரு சில விதிமுறைகளை கடைபிடித்து முதலீடு செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணம் என்பது ஒரு பெற்றோருக்கு மிகப் பெரிய செலவாக இருந்துவரும் நிலையில் அந்த செலவை எதிர்காலத்தில் மிகவும் எளிதாக்க குழந்தையாக இருக்கும் போதே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமான ஒரு வழி வகை ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to invest in Mutual Funds in the name of a minor?

From time to time public awareness is created that mutual fund investment is safe and sound. People above the age of 18 are advised to start investing in Mutual Funds as soon as they start earning and that's when they get a huge sum in their retirement.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X