அடகு வைக்கும் நகைகளுக்கு ஆபத்து ஏற்படுமா? கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுமக்கள் தங்களது அவசர பணத்தேவைக்காக தங்க நகைகளை அடமானம் வைப்பது என்பது வழக்கமாக இருந்து வருகிறது.

 

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைக்கும் போது சில முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு கவனிக்காமல் தங்க நகைகளை அடகு வைத்தால் நகைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்ற எச்சரிக்கையும் செய்யப்பட்டு வருகிறது.

தங்க கடன் மட்டும் 1 லட்சம் கோடி.. திடீரென தங்க நகையை அடகு வைக்கும் மக்கள்.. ஏன்..?!

நகைக்கடன்

நகைக்கடன்

அவசரத் தேவைக்கு பணம் வேண்டும் என்றால் உடனடியாக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் அல்லது தனியார் வட்டிக் கடைகளிடம் சென்று நகைகளை அடகு வைத்து பணம் பெற்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரும்பாலும் நகையை வைத்து கடன் வாங்குவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றனர் என்பதும் இதனால் வங்கிகளில் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் நகை கடன் வழங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரத்தேவை

அவசரத்தேவை

குறிப்பாக இந்தியாவில் கொரோனா வைரஸ் காலத்தில் ஏராளமான நகைக்கடன்கள் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவசர தேவைக்கு பணம் வேண்டும் என்றால் ஒரு சில நிமிடங்களில் நகைக்கடன் கிடைத்து விடும் என்பதால் பொதுமக்கள் நகைக்கடனை பெற்று வருகின்றனர்.

விழிப்புணர்வு
 

விழிப்புணர்வு

ஆனால் அதே நேரத்தில் நகைகளை அடகு வைக்கும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு வீடு அல்லது நிலத்தின் மீது அடமானம் வைத்து லோன் வாங்கினால் அந்த வீடு அல்லது நிலத்தை யாரும் எடுத்துச் செல்ல முடியாது என்பதால் அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

நகைகளுக்கு ஆபத்து

நகைகளுக்கு ஆபத்து

ஆனால் நகையை பொறுத்தவரை அப்படி அல்ல, நிதி நிறுவனங்கள் நகையை வாங்கிக் கொண்டு கடன் தரும் நிலையில் திடீரென அந்த நிதி நிறுவனத்தில் திருட்டு போனால் நமக்கு நகைகள் திரும்ப கிடைக்க வாய்ப்பு மிகவும் குறைவு. அதேபோல் திடீரென நிதி நிறுவனங்கள் நஷ்டம் காரணமாக மூடினாலும் நமது நகைகளுக்கு ஆபத்து ஏற்படும். எனவே நகை கடன் பெறும் முன் அந்த நிறுவனம் தகுதியான நிறுவனமா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பகத்தன்மையற்ற நிறுவனம்

நம்பகத்தன்மையற்ற நிறுவனம்

நகைக்கடன் மிகவும் எளிதாக கிடைக்கிறது என்பதற்காக நம்பகத்தன்மையற்ற நிறுவனத்திடம் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கினால், அசலுக்கே ஆபத்து ஏற்படும் என்பதை நகைகளை அடமானம் வைப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

75% மட்டுமே கடன்

75% மட்டுமே கடன்

ரிசர்வ் வங்கியின் உத்தரவுபடி நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்க வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில் சில நிதி நிறுவனங்கள் கூடுதலாக நகைக்கடன்களை வழங்கி வருகின்றன. கூடுதலாக பணம் கிடைக்கின்றது என்பதற்காக நம்பகத்தன்மையற்ற நிதி நிறுவனங்களிடம் பணம் வாங்கக் கூடாது. அதே போல் நகைக்கடனுக்கான வட்டி எவ்வளவு என்பதை பார்த்து நகை கடன் வாங்க வேண்டும்.

வட்டி

வட்டி

நகைக்கடனுக்கான வட்டியை பொருத்தவரை வங்கிகளில் நகைக்கடனுக்கு குறைந்த வட்டி இருக்கும் என்பதால் வங்கிகளில் அடகு வைப்பதே சிறந்தது. ஆனால் சில வங்கிகளில் கடன் வாங்குவதில் தாமதம் ஆகலாம் என்பதால் நிதி நிறுவனங்கள் அல்லது வட்டி கடைகளில் நகை கடன்களை பலர் வாங்குகின்றனர். இந்த நிதி நிறுவனங்கள் பெறும் வட்டி விகிதம் எவ்வளவு? என்பதையும் கவனித்து நகைக்கடன்களை வாங்க வேண்டும்.

செயல்பாட்டு கட்டணம்

செயல்பாட்டு கட்டணம்

அதேபோல் வங்கிக் கடன் வாங்கும்போது செயல்பாட்டு கட்டணம், மதிப்பீடு கட்டணம் எவ்வளவு என்பதையும் கவனிக்கவேண்டும். பல வங்கிகளில் செயல்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை என்றாலும் மதிப்பீட்டுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் வங்கிக்கு வங்கி மாறுபடும் என்பதால் குறைந்த கட்டணம் எந்த வங்கியில் உள்ளது என்பதை கவனித்து நகைக்கடன்களை பெற்றுக்கொள்ளலாம்.

வட்டி மற்றும் தவணை

வட்டி மற்றும் தவணை

அதேபோல் நகை கடன் பெற்றவர்கள் மாதம் மாதம் வட்டி அல்லது மாதத்தவணைகளை முறையாக செலுத்தி கொண்டே வர வேண்டும். தவறும் பட்சத்தில் அடகு வைத்த நகையை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Some important features about gold loans!

Some important features about gold loans | அடகு வைக்கும் நகைகளுக்கு ஆபத்து ஏற்படுமா? கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X