மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பொதுவாக முதலீடுகள் செய்றது என்பது இன்றைய காலகட்டத்தில் முடியாத விஷயம் என்றாலும், இதை பற்றி தெரிந்து கொண்டால் நிச்சயம் அது என்றாவது பலன் அளிக்குமே.

அதிலும் மியூச்சுவல் முதலீடுகள் என்பதே சிலருக்கு யாரே சொல்கிறார்கள், நாம் முதலீடு செய்கிறோம். லாபம் கிடைக்குமா? இல்லையா என்பது தான் பலரின் தவிப்பாகவே உள்ளது.

 மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

 

சரி முதலில் நாம் ஒரு ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?

பொதுவாக ஒருவர் ஒரு ஃபண்டில் முதலீடு செய்யும் போது, ஒரே ஃபண்டில் முதலீட்டினை குவிப்பதை தவிர்க்கலாம். ஆக அதனை பிரிச்சு முதலீடு செய்வது தான் புத்திசாலித்தனம். இதனால் ரிஸ்கும் குறையும், ஒரு செக்டாரில் லாபம் குறைந்தாலும், மற்றொரு ஃபண்ட் கைகொடுக்கும்.

குறிப்பாக உங்களின் அவசர தேவைக்காக வைத்திருக்கும் பணத்தினை எப்போதும் எக்காரணத்தைக் கொண்டும் முதலீடு செய்யக் கூடாது. அதிலும் குறிப்பாக ரிஸ்க்கான ஃபண்டுகளில் முதலீடு எக்காரணம் கொண்டும் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.

மேலும் மார்கெட்டுகள் சரிந்திருக்கும் போது நல்ல ஃபண்டுகளில் என்ஏவி குறைவாக இருந்தால் அதனை வாங்கி வைக்கலாம். ஏனெனில் அதன் மூலம் கூடுதலான யூனிட்டுகள் கிடைக்க வாய்ப்புண்டு. அதன் மூலம் கூடுதல் லாபம் பெற வாய்ப்புகள் அதிகரிக்கும்.

எல்லாவற்றையும் விட கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். அது மியூச்சுவல் ஃபண்டு ஆனாலும் சரி, மற்ற முதலீடுகளானலும் சரி.

நீங்கள் புதியதாக முதலீடு செய்கிறீர்கள் என்றால், முதலீட்டு ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று பின்பு முதலீடு செய்வது நல்லது. ஏனெனில் சந்தை சரிவினை எப்போது சந்திக்கும் என்பதை உங்களால் அனுமானிப்பது அப்போது கடினமான ஒரு விஷயமாக இருக்கும்.

குறிப்பாக சந்தையை பற்றி முழுமையாக அறியும் வரை புதியவர்கள் குறைந்த அளவு முதலீடு செய்யலாம். மேலும் ஏற்கனவே நல்ல வருமானம் கொடுக்கும் ஃபண்டுகளை தேர்தெடுத்து முதலீடு செய்வது நல்லது.

அதோடு ஒரே துறை சார்ந்த செக்டோரல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.

மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் ஏதேனும் தவறு நடைபெறுவதாக தோன்றினாலோ அல்லது நீங்கள் நினைத்தாலே நிறுவனத்தினை அணுகி அதனை தெளிபடுத்திக் கொள்ள வேண்டும், அதனை எழுத்து பூர்வமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிடலாம். அதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், செபியிடம் முறையிடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Some Important Mutual fund investment guidance for investors

Mutual fund investment may seem complicated for the first time investors. So you can have a diversified mutual fund portfolio by investing as low.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X