மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யும் போது செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது பாதுகாப்பு மற்றும் அதிக வருவாய் தரக்கூடியது என்றாலும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதில் சில தவறுகள் செய்வது வழக்கமாக உள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வதற்கு முன் என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதை நிதி ஆலோசகரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் என்னென்ன தவறு செய்வார்கள் என்பதை தற்போது பார்ப்போம்.

18 வயதுக்கு குறைவான மைனர் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்ய முடியுமா? 18 வயதுக்கு குறைவான மைனர் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்ய முடியுமா?

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்து வந்தால் நமது ஓய்வு காலத்தில் மிகப் பெரிய தொகை கிடைக்கும் என்பதும் தெரிந்ததே. ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி செய்யப்படும் மியூச்சுவல் ஃப்ண்ட் சேமிப்பு என்பது நீண்டகாலத்திற்கு நிச்சயம் மிகப் பெரிய பலனை அளிக்கும். ஆனால் அதே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் செய்யும் ஒரு சில தவறுகளால் அவர்களுக்கு தேவையான பயன் கிடைக்காமல் போய் விடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திட்டங்களை புரிந்து கொள்தல்

திட்டங்களை புரிந்து கொள்தல்

முதலில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் திட்டங்களை பற்றி சரியாக புரிந்து கொள்ள வேண்டும். திட்டங்களை பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் முதலீடு செய்தால் நாம் எதிர்பார்த்த தொகை கிடைக்காமல் முதலீடு செய்வதன் பலனே இல்லாமல் போய்விடும். குறிப்பாக குறைந்த காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யக்கூடாது. நீண்ட காலத்திற்கு மட்டுமே ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை கொடுக்கும். எனவே குறைந்த காலத்தில் முதலீடு செய்பவர்கள் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யும் தவறை செய்யக்கூடாது.

ரிஸ்க்
 

ரிஸ்க்

அதேபோல் ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்டில் உள்ள ரிஸ்குகள் என்னென்ன என்பதை அறியாமல் முதலீடு செய்யக்கூடாது. அனைத்து மியூச்சுவல் ஃபண்டிலும் கண்டிப்பாக ரிஸ்குகள் இருக்கும். அந்த ரிஸ்க்குகள் நமது முதலீட்டு தொகை, இலக்கு ஆகியவற்றுக்கு பொருத்தமானதாக இருக்கிறதா என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

சரியான தொகை

சரியான தொகை

மூன்றாவதாக சரியான தொகையை முதலீடு செய்யாமல் இருப்பதும் ஒரு தவறாகும். எந்தவிதமான இலக்கும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யாமல் கையில் பணம் இருக்கும் போது மட்டும் குத்துமதிப்பாக முதலில் செய்வது பெரிய ஆதாயங்களை கொடுக்காது என்பதையும் முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இலக்கு

இலக்கு

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் செய்யும் தவறுகளில் ஒன்று இலக்கை அடையும் முன்பே பணத்தை திரும்ப எடுத்து விடுதல் ஆகும். சில நேரங்களில் முதலீட்டாளர்கள் பங்கு சந்தை சரிந்தால் பொறுமை இழந்து தங்களது முதலீட்டை திடீரென அந்த பணம் தேவை இல்லாத நிலையிலும் கூட எடுத்து விடுகின்றனர். மியூச்சுவல் ஃபண்டை பொருத்தவரை அதற்கு போதுமான நேரத்தை அளிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். எனவே ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அந்த இலக்கை அடையும்வரை இடையில் பணம் எடுக்காமல் இருக்க வேண்டும்.

கூட்டத்தோடு கூட்டமாக முதலீடு

கூட்டத்தோடு கூட்டமாக முதலீடு

பொதுவாக மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள் செய்யும் இன்னொரு தவறு அனைவரும் மியூச்சுவல் செய்கிறார்களே என்று ஏதாவது ஒரு திட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாக முதலீடு செய்வார்கள். அந்த மியூச்சுவல் ஃபண்ட் தங்களுக்கு ஏற்றதா என்பதை புரிந்து கொண்டு தங்களுக்கு ஏற்றது என்று தீர்மானம் செய்யாமல் முதலீடு செய்வதும் ஒரு தவறாகும்.

முதிர்வு

முதிர்வு

மேற்கண்ட தவறுகளை செய்யாமல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் கண்டிப்பாக முதலீட்டாளர்களுக்கு முதிர்வின் போது மிகப் பெரிய தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are some mistakes people make when investing in Mutual Funds?

Although mutual fund investment is safe and gives high returns, some common mistakes are made in investing in mutual funds. Before investing in mutual funds, you should consult a financial advisor and know what are the mistakes that should not be made. Now let's see what common mistakes mutual fund investors make.
Story first published: Saturday, October 29, 2022, 8:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X