உங்களுக்கு துணை மாத வருமானம் தேவையா?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

உங்களுக்கு துணை மாத வருமானம் தேவையா?
சென்னை: ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை வருமானமாகப் பெறுவதற்காக, சொத்துக்கள் மீது முதலீடு செய்வதற்குத் தயாராக ஒரு சில முதலீட்டாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் மிகப் பெரிய லாபத்தையோ அல்லது மிகப் பெரிய வளர்ச்சியையோ எதிர்பார்ப்பதில்லை. மாறாக மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடுகளிலிருந்து வருமானமாக எதிர்பார்க்கின்றனர். எனவே மாதம் ஒரு குறிப்பிட்ட வருமானத்தைப் பெற முதலீடு செய்யக் காத்திருப்போருக்கு பின்வரும் குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

(Top 5 gold saving schemes from reputed jewellers)

அரசுத் திட்டங்கள்:

மத்திய அரசு அதற்காக பலவிதமான திட்டங்களை வரையறுத்திருக்கிறது. குறிப்பாக அஞ்சலகம் வழங்கும் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், மாதா மாதம் ஒரு குறிப்பிட்டத் தொகையை வருமானமாகப் பெறலாம். குறிப்பாக அஞ்சலகத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு முழுமையான பாதுகாப்புக் கிடைக்கும். அதனால் எந்தவித பயமுமின்றி இத்தகைய அஞ்சலகத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டங்களில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் போதும். அதன் மூலம் மாதம் ஒரு குறிப்பிட்டத் தொகையை வருமானமாகப் பெறலாம். உதாரணமாக, நீங்கள் ரூ.4.5 லட்சம் முதலீடு செய்தால் உங்களுக்கு மாதம் ரூ.3000 வருமானம் கிடைக்கும். மேலும் வருமான வரி சட்டம் 80சி பிரிவின் படி இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு ரூ.1லட்சம் வரை வரி சலுகை பெற முடியும். நீங்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி அதன் திட்டங்களை அறிந்து உடனே அந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

வங்கி வழங்கும் சேமிப்புத் திட்டங்கள்:

வங்கிகள் மாத வருமான முதலீட்டுத் திட்டங்களை வழங்கி வருகின்றன. வங்கிகளில் முதலீடு செய்வதும் மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும். வங்கிகளில் செய்யப்படும் முதலீட்டுக்கு 6 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. ஆனால் இந்த வட்டி விகிதம், வட்டி விகிதத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும். அதுபோல் வங்கிகள் விருப்பத்திற்கு ஏற்ப வட்டி விகிதத்தை முடிவு செய்கின்றன.

நிதி திட்டங்கள்:

பல மீச்சுவல் பண்டுகள் முதலீட்டாளர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட வருமானத்தை வழங்குகின்றன. ஆனால் இந்த மீச்சுவல் பண்டுகளில் செய்யப்படும் முதலீடுகள், வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் செய்யப்படும் முதலீடுகளைவிட சற்று பாதுகாப்பு அற்றது. ஏனெனில் மீச்சுவல் பண்டுகள், நீங்கள் செய்யும் முதலீடுகளில் ஒரு பகுதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றன.

இந்த பண்டுகளின் பெரும் பகுதி முதலீடுகள் அரசு மற்றும் கார்பரேட் பாண்டுகளுகளுக்குச் செல்கின்றன. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையி்ல் முதலீடு செய்வதில் உள்ள ஆபத்துகள் தெரியப்படுத்தப்படாமல் இருக்கின்றன. மேலும் இந்த பண்டுகளில் செய்யப்படும் முதலீட்டுக்கு ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஆனால் டிவிடன்ட்டாக அளிக்கப்படுகின்றன. சந்தைக்குத் தகுந்தவாறு, பண்டுகளில் முதலீடு செய்யப்படுவதிலிருந்து கிடைக்கும் வருமானம் மாறிக் கொண்டிருக்கும். பொதுவாக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வருமானம் கிடைக்கும்.

நாம் பெறும் வழக்கமான மாத வருமானத்திலிருந்து இன்னும் கூடுதலாக வேறொரு வழியில் வருமானம் வந்தால் அது நமக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே முதலீட்டாளர்கள் தங்களுக்கு ஏற்ற திட்டத்தை ஆராய்ந்து முதலிடு செய்யவேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Looking for monthly income? Here are a few options? | உங்களுக்கு துணை மாத வருமானம் தேவையா?

There is a set of investors who want to invest in assets that provide monthly cash flow to meet their expenses. They do not look for multi bagger or even high growth but a decent monthly income out of their investment.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns