அந்நியச் செலாவணி மாற்றுரிமை கடன் பத்திரங்கள் (FCCB) என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்நியச் செலாவணி மாற்றுரிமை கடன் பத்திரங்கள் (FCCB) என்றால் என்ன?
அந்நியச் செலாவணி மாற்றுரிமை கடனீட்டுப் பத்திரங்கள் (எஃப்சிசிபி), என்பவை ஒரு வகை கடனீட்டுப் பத்திரங்கள் ஆகும். அவற்றை வழங்கக்கூடிய நிறுவனங்கள் உள்ளூர் நாணயம் மட்டுமின்றி இதர நாட்டு நாணயங்களிலும் வழங்கப்படும். மாற்றுரிமை கடனீட்டுப் பத்திரங்களின் அனைத்து உள்ளார்ந்த அம்சங்களோடு காணப்படும் இந்த எஃப்சிசிபிக்கள், அதனை வழங்குவோருக்கும், அதில் முதலீடு செய்வோருக்கும் சிறந்த ஒரு பணையமாக லாபகரமாக விளங்குகிறது.

3-7 வருடங்கள் வரையிலான மெச்சூரிட்டி காலத்தைக் கொண்டிருக்கும் எஃப்சிசிபிக்கள் முதலீடுகளை மீட்டெடுக்கவோ அல்லது எஃப்சிசிபிக்களை மெச்சூரிட்டி காலத்தின் இறுதியிலோ அல்லது அதற்கு முன்பாகவோ, முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில் ஈக்விட்டிக்களாக மாற்றவோ, பத்திரதாரர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. ஆகையால், எஃப்சிசிபிக்கள் ஒரு முதலீட்டாளரை கூப்பன் ரேட் பேமண்டுகளைப் பெறுவதற்கு தகுதியானவர்களாக ஆக்குவதோடுல்லாமல் கடனீட்டுப் பத்திரங்களை ஈக்விட்டிக்களாக்கக் கூடிய கூடுதல் வாய்ப்பையும் வழங்குகிறது.

எஃப்சிசிபிக்களைப் பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டு பின் வருமாறு:
‘X' என்ற ஒரு நிறுவனம் பின் வரும் மதிப்பீடுகளில் எஃப்சிசிபிக்களை வழங்குகிறது என்று வைத்துக் கொள்வோம்:

பங்கின் விலை: ரூபாய் 500
கூப்பன் விகிதம்: 2%
மெச்சூரிட்டி காலம்: 2 வருடங்கள்
ஈக்விட்டி பங்குகளாக ஒரு பங்குக்கு ரூபாய் 400 என்ற விகிதத்தில் மாற்றத்தக்க வகையில் உள்ளது

இத்தகைய நிலையில், ஒரு முதலீட்டாளர் இது போன்ற 4 பத்திரங்கள் வாங்க முடிவு செய்வாராயின் மொத்த முதலீட்டுத் தொகை சுமார் 2000 ரூபாயாக இருக்கும். இந்த பத்திரத்தின் காலக்கெடுவின் படி, பத்திரதாரர் 2 வருடங்களுக்கு சுமார் 2% கூப்பன் ரேட் பெற தகுதி பெறுவார்.

மேலும், இந்த பத்திரம், சுமார் 400 ரூபாய் விகிதத்தில் ஈக்விட்டியாக மாற்றக்கூடிய உள்ளார்ந்த வசதியோடு வருவதினால், பத்திரதாரர் அவ்வாறு மாற்றும்போது அப்பங்குகளின் அப்போதைய சந்தை விலையைப் பொறுத்து இந்த வசதியை அவரது விருப்பத்திற்கேற்ப செயல்படுத்திக் கொள்ள முடியும். ஈக்விட்டியாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை உபயோகித்துக் கொள்ளும் பட்சத்தில், முதலீட்டாளர் 5 (2000/400) பங்குகளைப் பெறுவதற்கு உரியவராகிறார். இல்லையெனில், அவர் முதலீடு செய்த பணத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பையும் தேர்வு செய்யலாம்.

‘X' நிறுவனத்தின் பங்குகள் சுமார் 500 ரூபாய் வீதத்தில், அதாவது மாற்றுரிமை விலையைக் காட்டிலும் அதிகமாக, விற்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். இத்தகைய சூழலில், முதலீட்டாளர் தன் மாற்றுரிமை வசதியை உபயோகப்படுத்திக் கொள்வதன் மூலம் அவர் 2000/400 = 5 பங்குகள் பெறக் கூடிய தகுதியைப் பெறுவார். அவ்வாறு உபயோகிக்காத பட்சத்தில், அவருக்கு 2000/500 = 4 பங்குகளே கிடைக்கும்.

ஆனால், அப்பங்குகளின் சந்தை விலை, மாற்றுரிமை விலையைக் காட்டிலும் மிகக் குறைவாக, உதாரணமாக 200 ரூபாயாக, இருப்பின் முதலீட்டாளர் மாற்றுரிமையை உபயோகிக்காமல் சந்தை விலையிலேயே 2000/200 = 10 பங்குகள் பெறலாம். அதுவே, மாற்றுரிமையை உபயோகித்தால் அவருக்கு 5 பங்குகள் மட்டுமே கிடைக்கக்கூடும். எனவே இத்தகைய சந்தர்ப்பத்தில், மொத்த முதலீட்டுத் தொகையை மீட்டெடுப்பதே சிறந்த யோசனையாகும்.

ஆகவே, முதலீட்டுத் தொகையை மீட்டெடுக்கவோ அல்லது மாற்றுரிமையை உபயோகித்துக் கொள்ளவோ, இவற்றில் ஒன்றை தேர்வு செய்து பத்திரதாரர் எடுக்கக்கூடிய முடிவானது, அந்நிறுவனப் பங்குகளின் சந்தை விலையைப் பொறுத்தே அமையும். ஒரு வேளை, மாற்றுரிமை விலையானது மெச்சூரிட்டி காலத்தின் போது இருக்கக்கூடிய சந்தை விலையை விட குறைவாக இருக்கும் பட்சத்தில், பத்திரதாரர் பங்குகளை ஈக்விட்டிக்களாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை உபயோகிக்கலாம், இல்லையேல் முதலீடு செய்யப்பட்ட தொகையை பூரணமாக மீட்டுக் கொள்ளப் பார்க்கலாம்.

எஃப்சிசிபிக்களின் சிறப்பியல்புகள்

1. வழக்கமான கடனீட்டுப் பத்திரங்களைக் காட்டிலும், எஃப்சிசிபிக்கள் குறைவான வட்டி விகிதங்களைக் கொண்டிருக்கும். முதலீட்டாளர்கள் எஃப்சிசிபிக்களை ஈக்விட்டிக்களாக மாற்றிக் கொள்ளும் உள்ளார்ந்த வசதியின் பொருட்டே குறைவான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.

2. எஃப்சிசிபிக்களை வழங்குவதற்கு எவ்விதமான பிணைகளோ அல்லது பாதுகாப்போ தேவையில்லை.

3. எஃப்சிசிபிக்கள், கார்பரேட்கள் குறைந்த விலையில் கடன் வாங்கக்கூடிய கடன் மூலாதாரமாகத் திகழ்கின்றன.

4. எஃப்சிசிபிக்கள் வழங்குவதன் மூலம் சேர்க்கப்படும் நிதி பல்வேறு விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் கார்பரேட்களின் மூலதன செலவீனத் தேவைகளை நிறைவேற்ற உபயோகிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are foreign currency convertible bonds (FCCBs)?

Foreign currency convertible bonds (FCCBs) are a type of convertible bonds that are issued in currency other than the domestic currency of the issuing company. FCCB's are issued by corporates for raising funds in foreign currency.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X