ஸ்டாக் ஸ்ப்ளிட் என்றால் என்ன??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்டாக் ஸ்ப்ளிட் என்றால் என்ன??
பங்குச்சந்தை முதலீட்டாளராக போனஸ், ரைட்ஸ் மற்றும் பங்கு பிரித்தல் (ஸ்டாக் ஸ்ப்ளிட்) போன்ற பல வகையான கார்பரேட் ஆக்ஷன்களால் பயன் பெறுவார்கள். இவ்வகை கார்பரேட் ஆக்ஷன்களால் பங்கு விலைகளிலும் ஏற்றம் இறக்கம் இருக்கக்கூடும். இதனால் நாம் பங்குகளை விற்கும் போது குறுகிய கால மூலதன ஆதாயம் மாறுபடும்.

குறுகிய கால மூலதன ஆதாயத்தில் தாக்கம் இருப்பதால், ஒரு வருஷத்திற்குள் பங்குகளை விற்றோமானால் வரி விதிப்பதிலும் மாறுதல்கள் ஏற்படும்.

 

பங்குகளை பிரித்தல் என்றால் என்ன?

 

பங்குகளை பிரித்தல் என்பது கார்பரேட் ஆக்ஷன் எனப்படும் நிறுவன செயல்களாகும். அதன்படி பங்குதார்களின் நிலுவையில் இருக்கும் பங்குகளின் எண்ணிக்கைக்கு அதிகமான பங்குகளை வழங்குதல். உதாரணத்திற்கு, இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பங்கு பிரித்தல் அறிவிக்கப்பட்டால், வைத்திருக்கும் ஒவ்வொரு பங்கிற்கும் இன்னொரு கூடுதல் பங்கு அளிக்கப்படும். இதன்படி பங்கு பிரித்தலுக்கு முன் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பங்குகளை கொண்டிருந்தால், பிரித்தலுக்கு பின் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான பங்குகள் கைவசம் இருக்கும். இதனால் நிறுவனத்தின் சந்தை முதலாக்கத்தில் எந்த ஒரு அதிகரிப்பும் இருக்காது. அதனால் பங்கு பிரித்தலுக்கு பின் ஒரு பங்கின் மதிப்பு குறைந்து விடும். ஆனால் பங்குகளின் எண்ணிக்கை கூடுவதால் மொத்த மதிப்பு குறையாது. மேற்கூறிய உதாரணத்தில் ஒரு பங்கின் விலை பாதியாக குறையும்.

பங்கு பிரித்தலுக்கான காரணம்?

பொதுவாக பங்குகளை சுலபமாக விற்கமுடியாமல் போகும் நிலையை நேர்மாறாக்க நிர்வாகம் பங்கு பிரித்தலை அறிவிக்கும். பங்குகளின் விலை அதிகமாக இருக்கும் போது அதனை வாங்குவதற்கு குறைந்த அளவே முதலீட்டாளர்கள் இருப்பார்கள். இதனால் இவ்வகை பங்குகளை விற்பது மிகவும் கடினமாகும். அதனால் தான் பங்கு பிரித்தல் நடக்கிறது.

வரி நிர்ணயம்

பங்கு பிரித்தல் என்பது போனஸ் பங்குகள் வழங்குவதை போல தான். ஆனால் வரி கணக்கிடும் முறை சற்று வேறுபடும். போனஸ் பங்குகளை பொருத்தவரை கையகபடுத்தும் செலவு என்று எதுவும் கிடையாது. ஆனால் பங்கு பிரித்தலில் கையகபடுத்தும் செலவு பிரித்தலின் நேர்மாறான விகிதத்தில் குறையும். உதாரணத்திற்கு ஒருவர் 100 பங்குகளை வைத்திருக்கிறார். ஒரு பங்கின் விலை 200 ரூபாய். அவரின் மொத்த முதலீடு 20,000 ரூபாய் ஆகும். இந்த நேரத்தில் அந்த நிறுவனம் இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பங்கு பிரித்தலை அறிவித்தால், அந்த பங்குதாரரிடம் 200 பங்குகள் இருக்கும். அனால் கையகப்படுத்திய விலை 100-ஆக (200/2 = 100) இருக்கும்.

இப்போது முதலீட்டார்கள் சந்தையில் ஒரு பங்கின் விலையை 200 ரூபாய்க்கு ஒரு வருடம் முன்னாள் விற்றால், குறுகிய கால மூலதன ஆதாயம் 20,000 [200 * (200-100)] ரூபாய் கிடைக்கும். குறுகிய கால மூலதன ஆதாயத்தை கணக்கிட பங்குகள் வாங்கிய விலையை 100 ரூபாயாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும். மேற்கூறிய படி 200 ரூபாயாக எடுத்துக்கொள்ள கூடாது. குறுகிய கால மூலதன ஆதாயம் 20,000 ரூபாயில் தான் கணக்கிடப்படும்.

பங்கு விலையில் தாக்கம்

பொதுவாக பங்கு பிரித்தல் செய்யும் போது பிரித்தலுக்கு பிறகு பங்கு விலையை அதிகரிக்கவே செய்யும். தற்போது குறைந்த விலையில் கிடைக்கும் பங்குகள், சிறிய அளவு முதலீட்டார்கள் உருவாக்கும் தேவைப்பாட்டினால் விலை அதிகரிப்புக்கு உள்ளாகும். பிரித்தலுக்கு முன்னாள் பங்குகளின் விலை அதிகமாக இருந்ததால் இப்போது இந்த பங்கு நன்மையை தரும் என்ற மன ரீதியான எண்ணத்தாலும் பங்குகளின் விலை அதிகரிக்கும். பிரித்தலுக்கு பின் நல்ல விதமாக செயல் ஆற்றும் என்ற நம்பிக்கையின் காரணமாக கூட சிறிய காலத்திலேயே விலை அதிகரிப்பு ஏற்படலாம்.

நேர்மாறான பங்கு பிரித்தல்

பங்கு பிரித்தலை போலவே மற்றறொரு கார்பரேட் ஆக்ஷன் உள்ளது. ஆனால் இது நேர்மாறாக செயல்படும். இதன்படி நிலுவையில் இருக்கும் பங்குகளை ஒன்று சேர்த்து, சந்தையில் உள்ள நிறுவனத்தின் மொத்த பங்குகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். இதனாலேயே இதனை நேர்மாறான பங்கு பிரித்தல் என்று அழைக்கிறோம். மேம்படுத்துனர்கள் தங்கள் நிறுவன பங்குகளின் மதிப்பை அதிகரிக்கவே இந்த முறையை கையாளுகிறார்கள். தங்கள் நிறுவன பங்குகளின் மதிப்பு மிகவும் குறையும் போது அதன் வர்த்தகம் பாதிக்கப்படும். அதனால் பங்குகளின் மதிப்பை உயர்த்த நேர்மாறான பங்கு பிரித்தலை அறிவிப்பார்கள்.

பங்கு பிரித்தலில் கணக்கிட்ட படி தான் குறுகிய கால மூலதன ஆதாயம் கணக்கிடப்படும். ஆனால் இங்கே கைவசம் உள்ள பங்குகளின் எண்ணிக்கை குறைவதால் கையகப்படுத்தும் விலை அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு நேர்மாறான பங்கு பிரித்தலின் விகித அளவுக்கு சமமாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the tax implications on a stock split?

As stock market investors, we are beneficiaries to various corporate actions like bonus, rights and stock splits. These corporate actions are accompanied by stock price movements in short and long run affecting capital gains whenever we sell shares.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X