திட்டமிடுதல் எவ்வளவு முக்கியம் என்பதை உணர இதை படிங்க பாஸ்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"திட்டமிடத் தவறுதல், தவறு செய்யத் திட்டமிடுதலுக்கு ஒப்பானது" என்ற பழமொழி நம் வாழ்வின் பல்வேறு கூறுகளுக்கும் பொருந்தக் கூடியதாகும். உண்மையில் திட்டமிடுதல் என்றால் என்ன? திட்டமிடுதல் என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை எட்டுவதற்கான வழிகளை யோசித்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதே ஆகும். உங்கள் இலக்கு அல்லது குறிக்கோளில் நீங்கள் தெளிவாக இல்லையெனில், உங்களால் சரிவர திட்டமிட இயலாது. எனவே, திட்டமிடுதலுக்கு அதி முக்கியமானது முதலில் நீங்கள் விரும்பும் இலக்கு என்ன என்பதைப் பற்றிய தெளிவு தான்!!!.

 

நம் வாழ்வில் ஏராளமான விஷயங்களுக்கான திட்டத்தை மனதளவிலேயே நிகழ்த்தப்படுகிறது. நிரூபணமான உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களைக் கொண்டு திட்டமிடுதல் என்பது மிக அரிதான ஒன்று. முக்கியமாக நிதி தொடர்பான வாழ்வியல் முறை சம்பந்தமாக எடுக்கப்படும் முக்கிய முடிவுகளில் இதுவே நடைமுறையாகும். உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தையின் மேற்படிப்புக்கு உதவும் வண்ணம் ஏதேனும் ஒரு தொகையை சேமிக்க எண்ணுகிறீர்கள். ஒரு குழந்தை நலத்திட்டத்தை தேர்வு செய்து அது உங்கள் எண்ணம் ஈடேறுவதற்கு உதவும் என்று நீங்களாகவே முடிவு செய்து கொள்கிறீர்கள். அதே போல், ஏதோ ஒரு பென்ஷன் திட்டத்தை தேர்வு செய்து உங்கள் கடமையை செய்து விட்டதாக மன நிறைவு கொள்கிறீர்கள்.

திட்டமிடுதல் எவ்வளவு முக்கியம் என்பதை உணர இதை படிங்க பாஸ்!!!

குழந்தையின் படிப்பு மற்றும் பணி ஓய்வு போன்ற இலக்குகள் உங்கள் மனதில் இருந்தாலும், நீங்கள் தேர்வு செய்யும் திட்டங்களின் குறை நிறைகளை எடை போட்டு, உங்களுக்கு தேவையான பலன் எப்போது கிடைக்க வேண்டும் என்பதை நிர்ணயித்து, உங்கள் இலக்கை அடைய நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அலசி ஆராய்ந்து நல்ல முடிவெடுக்க நீங்கள் தவறி விடுகிறீர்கள். இது சரியான திட்டமிடுதல் ஆகாது. மேம்போக்காக ஏதோ ஒன்றை தேர்வு செய்து எதிலோ ஒன்றில் முதலீடு செய்வது உங்கள் இலக்கை எட்டுவதற்கு எவ்வழியிலும் உங்களுக்கு உதவாது.

 

இலக்குகள்

நாம் அனைவருக்கும் நம் வாழ்நாளில் எட்ட வேண்டியவை என்று சில இலக்குகள் மற்றும் மைல்கற்கள் இருக்கும். இவை தொழில்முறை சார்ந்ததாகவோ தனிப்பட்ட வாழ்வை சார்ந்ததாகவோ இருக்கலாம். இவற்றுள் பெரும்பாலானவற்றுக்கு, அதிலும் முக்கியமாக தனிப்பட்ட வாழ்வைச் சார்ந்தவற்றுக்கு, பணம் அத்தியாவசியமானதாக இருக்கலாம். எனவே உங்கள் வாழ்வின் சில பிரதான குறிக்கோள்களை எட்டுவதற்கு, எவ்வளவு நன்றாக நிதி நிலவரத்தை திட்டமிட்டுள்ளீர்கள் என்பதே அடிப்படையாக இருக்கும்.

நிதி திட்டமிடுதல்

யோசித்துப் பாருங்கள் - தனிப்பட்ட வாழ்வின் குறிக்கோள்களான கனவு இல்லத்தை வாங்குவது, கனவு வாகனத்தை சொந்தம் கொள்வது, குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை அளிப்பது, விடுமுறைகளுக்குச் செல்வது, விரும்பும் நேரத்தில் பணி ஓய்வு பெறுவது போன்ற அனைத்திற்கும் பணம் தேவைப்படுவதினால், இவை அனைத்தும் நிதி சார்ந்த இலக்குகளாக இருக்கிறது. இவை அனைத்திற்கும் திட்டமிடுதல் மிக அவசியமாகும். இதுவே நிதி தொடர்பான திட்டமிடுதல் என்பதாகும்.

நிதி திட்டமிடுதல் = வாழ்வின் இலக்கு

நிதி தொடர்பான திட்டமிடல் என்பது சிறப்பான நிதி நிர்வாகத்தின் மூலம் வாழ்வின் இலக்குகளை எட்டுவதற்கான ஒரு செயல்பாடாகும். இது ஒரு தனிப்பட்ட நபரின்/குடும்பத்தின் தேவைகள் மற்றும் விருப்பங்களை கண்டு கொள்ள விழையும், அவற்றை பணத்தின் அளவீடுகளிலான இலக்குகளாக மாற்றி, தனிப்பட்ட நபரின்/குடும்பத்தின் எதிர்கால குறிக்கோள்களை சரியான நேரத்தில் எட்டுவதற்குண்டான நிதி முதலீடுகளை திட்டமிட உதவும் ஒரு பயிற்சியாகும். ஒரு நிதித்திட்டம் என்பது உங்கள் எதிர்கால இலக்குகளுக்கானதொரு வரைபடமாகத் திகழ்கிறது.

திட்டமிடுதல் எவ்வளவு முக்கியம் என்பதை உணர இதை படிங்க பாஸ்!!!

மூன்று முக்கிய கேள்விகள்

நிதி திட்டமிடுதல், வாழ்வில் மூன்று முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்க உதவுகிறது -
• என்னுடைய நிதி சார்ந்த இலக்குகள் என்ன?
• இதுவரை என் இலக்குகளை எட்டுவதற்கு நான் என்ன செய்துள்ளேன்?
• என் இலக்குகளை எட்டுவதற்கு இப்போதிலிருந்து நான் என்ன செய்ய வேண்டும்?

பதிலின் விளைவு

இக்கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பது பற்றியும், எவ்வாறு நீங்கள் அதனை செயல்படுத்தலாம் என்பது பற்றியும் உங்களுக்கு நல்ல தெளிவு பிறக்கும். நிதி சார்ந்த திட்டமிடல் உங்கள் வாழ்வின் குறிக்கோள்களை தெளிவாக படம் பிடித்துக் காட்டுவதுடன், வாழ்வின் எந்த புள்ளியிலும், நிதி தொடர்பான உங்கள் முடிவுகளின் தாக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ளவும் உதவும்.

திரு மற்றும் திருமதி

இந்த கோட்பாட்டை மேலும் நன்றாக புரிந்து கொள்ள நாம் ஒரு உவமையை எடுத்துக் கொள்வோம். திரு மற்றும் திருமதி ஏ, மற்றும் திரு மற்றும் திருமதி பி என்ற இரண்டு தம்பதிகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இவ்விரு தம்பதிகளும் சாலை வழியாக இஸட் (Z) என்ற பிரபலமான ஒரு சுற்றுலாத் தலத்துக்குச் சென்று வர முடிவெடுக்கின்றனர்.

திரு மற்றும் திருமதி ஏ

ஏ தம்பதியர் தாங்கள் செல்ல வேண்டிய இடம் பிரபலமான ஒன்றாக இருந்தாலும், எவ்வித கஷ்டமும் இன்றி அவ்விடத்துக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்று யோசிக்கிறார்கள். திரு ஏ அவரது காரை சோதித்துப் பார்த்து, தேவையான அளவு எரிபொருள் மற்றும் காற்றை நிரப்பி, ஒரு முதலுதவிப் பெட்டியையும் தன் காரில் வைக்கிறார். திருமதி ஏ, செல்ல வேண்டிய இடத்துக்கான வரைபடத்தின் ப்ரிண்ட்-அவுட்டை எடுத்து, முக்கிய திருப்பங்களைக் குறித்து வைத்துக் கொள்கிறார். மேலும் அவர், தங்கள் பயணம் முழுக்க தங்களுக்கு தேவைப்படக்கூடிய உணவுப் பதார்த்தங்களை எடுத்துக் கொண்டோமா என்பதையும் உறுதி செய்து கொள்கிறார். இத்தம்பதியரின் பயணம் இனிமையாகவும், ரசித்து அனுபவிக்கத்தக்கதாகவும் அமைகின்றது. இத்தம்பதியர் தாங்கள் திட்டமிட்டவாறே சரியான நேரத்தில் சென்றடைந்து, அடுத்த தம்பதியனர் நேரத்தையும் இனிமையாகக் கழிக்கின்றனர்.

திரு மற்றும் திருமதி பி

திரு மற்றும் திருமதி பி, கடைசி நேரத்தில் கையில் கிடைத்த சில பொருட்களை அவசர கோலத்தில் எடுத்து வைத்துக் கொண்டு, அவர்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு தாமதாகக் கிளம்பி சென்று கொண்டிருக்கும் போது, சிறிது நேரத்திற்கெல்லாம் எரிபொருள் பத்தாது என்பது தெரிய வந்து, ஒரு பெட்ரோல் பங்க்கைக் கண்டுபிடித்து எரிபொருளை நிரப்பிக் கொள்கிறார்கள். அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான வரைபடத்தை கையோடு கொண்டு செல்லாததினால் ஆங்காங்கே நிறுத்தி சரியான வழியில் செல்கிறோமா என்பதை வழிப்போக்கர்களிடம் கேட்டு உறுதிபடுத்திக் கொள்கின்றனர். அவ்வப்போது சரியான வழியை தவற விட்டு, மறுபடியும் வேறு வழிகளில் செல்ல வேண்டி வருகிறது. திரு பி அவர்களுக்கு பசி எடுக்கிறது. சாப்பிடக்கூடிய இடம் எதுவும் தென்படாததால், அவரது பசியை ஆற்றிக் கொள்ள இயலவில்லை. அதனால் அவருக்கு தலை வலிக்க ஆரம்பிக்கிறது. அவரது நிலைமை ஒரளவுக்கு சரியாகும் வரை காத்திருந்து, அவரால் வண்டி ஓட்ட முடிந்த பின்னர் தங்கள் பயணத்தைத் தொடர்கின்றனர். சரியான முறையில் தயாராகி வராத தங்களின் மடமையை நொந்து கொண்டு, ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டு, ஒரு வழியாக அவர்கள் அடைய வேண்டிய இடத்திற்கு அதீத எரிச்சலோடும், களைப்புடனும் வந்து சேர்கின்றனர்.

வேறுபாடு

இவ்விரு தம்பதிகளுக்கு இடையிலும் உள்ள வேறுபாடு என்ன? இருவருமே ஒரே இடத்தைத் தேர்வு செய்து அதனை சென்று அடைகிறார்கள். ஆனால் அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் தரத்தில் தான் அந்த வித்தியாசம் ஒளிந்துள்ளது. ஏ தம்பதியர், அவர்களின் பயணத்திற்கு முன்கூட்டியே திட்டமிட்டு, எந்த ஒரு சிறு விஷயமும் விடுபட்டு விடாத வண்ணம் இனிதே நிறைவேற்றுகின்றனர். ஆனால் பி தம்பதியர் அசட்டையாக இருந்து, அவர்களின் பயணத்துக்கு எவ்வித ஏற்பாடுகளும் இன்றி கிளம்புகின்றனர். ஏ அவர்களின் பயணம் வெற்றி பெறும் அதே வேளையில் பி அவர்களின் பயணம் தோல்வியடைகிறது.

திட்டமிடுதல் எவ்வளவு முக்கியம் என்பதை உணர இதை படிங்க பாஸ்!!!

இலக்கை அடைய இதை படிங்க பாஸ்!!

நம் இலக்குகளை நோக்கிய நம் பயணத்திற்கான நமது திட்டமிடல், ஒரு மிகப் பெரும் வித்தியாசத்தை உண்டாக்கும். நிதி சார்ந்த திட்டமிடல் உங்கள் வாழ்வில் இருக்கக்கூடிய சில ஐயப்பாடுகளைக் களைந்து எதையும் சந்தர்ப்ப வசப்படி நடக்க விடாமல் தடுக்க உதவும். இது எப்படி சாத்தியம்?

• உங்கள் வாழ்க்கை, உடல்நலம் மற்றும் சொத்து ஆகியவை தொடர்பான அபாயங்களுக்கு நீங்கள் காப்புறுதி செய்துள்ளதை உறுதிபடுத்திக் கொள்ள உதவுகிறது.

• இக்கட்டான சூழலுக்கு உதவக்கூடிய வகையில் சிறிது தொகையை எதிர்பாராச் செலவுக்கான நிதியாக தனியே எடுத்து வைத்துக் கொள்வதற்கான யோசனையை உங்களுக்கு முன்மொழிகிறது

• உங்கள் இலக்குகளுக்கு ஏற்றவாறு உங்கள் முதலீடுகள் இருக்கும்படி செய்து, முதலீடுகளில் வரக்கூடிய இடர்பாடுகளை களையச் செய்கிறது

• உங்கள் கடன் தொகைகள் அளவுக்கு அதிகமாக விஞ்சி விடாமல், உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதோடு, உடனடி மன நிறைவையும் அளிக்கக்கூடியவாறு செலவீனம் மற்றும் சேமிப்புகளில் ஒரு சமன்பாட்டைக் கொண்டு வர உங்களுக்கு உதவக்கூடியது

• உங்கள் வரிகளை நீங்கள் சிறப்பான முறையில் திட்டமிடுவதற்கும் உதவுகிறது

• உங்களின் இறப்புக்குப் பின், உங்கள் அசையாச் சொத்துக்கள் உங்கள் குடும்பத்தினருக்கு எவ்வித தடைகளும் இன்றி கிடைக்கக்கூடியவாறு வழி செய்யக்கூடியது

• மாறுபட்ட சூழ்நிலைகள் அல்லது இலக்குகளுக்கு ஏற்றவாறு உங்கள் எதிர்கால நிதி நடவடிக்கைகளை மறுசீரமைக்க உதவக்கூடியது

• மகிழ்ச்சியான, நிம்மதியான மற்றும் வசதியான நிதி வாழ்வை அளிப்பதையே தன் குறிக்கோளாகக் கொண்டது

நிதி சார்ந்த திட்டமிடல் இல்லாமல் உங்கள் இலக்குகளை எட்ட முடியாது என்றில்லை. ஆனால் உங்கள் நிதிப் பயணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பது தான் கேள்வி. திரு மற்றும் திருமதி ஏ அவர்களைப் போல் உங்கள் பயணத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறீர்களா அல்லது திரு மற்றும் திருமதி பி அவர்களைப் போல் சூழ்நிலைக் கைதியாக இருக்க விரும்புகிறீர்களா? முடிவு உங்கள் கையில்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Failing to plan is planning to fail

The quote "fail to plan, plan to fail" can be applied to various aspects of our lives. Here though, we are using it in the context of ones financial life.
Story first published: Saturday, August 31, 2013, 18:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X