பங்கு சந்தையில் பங்கு பிரித்தல் என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்கு பிரித்தல் (ஸ்டாக் ஸ்ப்லிட்), அதன் பெயரே அதன் அர்தத்தை உங்களுக்கு விளக்கி விடும். ஆம், அப்படியென்றால் பங்குகளை குறிப்பிட்ட அளவுகளாக பிரித்து அதன் முகமதிப்பு அதற்கேற்ப குறைக்கப்படும். நிறுவன பங்கிருப்பின் சந்தை முதலாக்கத்தில் எந்த ஒரு மாற்றமும் இன்றி இந்த பங்கு பிரிவினை நடைபெறும். அதனால் பிரிதல் நடந்த பின்பு அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களின் பங்கு மதிப்பில் எந்த ஒரு மாறுதலும் இருக்காது.

பங்கு சந்தையில் பங்கு பிரித்தல் என்றால் என்ன?

பங்கு பிரித்தலுக்கான காரணம்:

நிறுவனத்தின் பங்குகளுடைய விலை அதிகமாக இருக்கும் போது, பல முதலீட்டு வகையை சேர்ந்த முதலீட்டாளர்களால் அதனை வாங்க இயலாத போது, அந்த நிறுவனம் பங்கு பிரித்தலை அறிவிக்கும். மேலும் பங்குகளை எளிதில் பணமாக்கக்கூடிய தன்மையை புகுத்துவதற்காகவும் பங்கு பிரித்தல் நடக்கிறது. பங்கு பிரித்தலுக்கு பின், அதிகரித்த லிக்விடிட்டியுடன், சந்தையில் உள்ள தேவையும் வழங்கு நிலையும் பொறுத்து பங்குகளின் விலை தீர்மானிக்கப்படும்.

பங்கு பிரித்தல் எப்படி வேலை செய்கிறது:

உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்திடம் 10 ரூபாய் முக மதிப்பில் 10 கோடி பங்குகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு பங்கின் விலை 1000 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் அந்த நிறுவனத்தின் சந்தை முதலாக்கம் (பங்குகளின் எண்ணிக்கை x இன்றைய சந்தை விலை) 10,000 கோடியாகும்.

இப்போது அந்த நிறுவனம் பங்கு பிரித்தலை 1:5 என்ற விகிதத்தில் அறிவித்துள்ளது. அப்படியானால் பங்கு பிரித்தலுக்கு பின், பங்குகளின் மொத்த எண்ணிக்கை 50 கோடியாக மாறி விடும். அதன் முக மதிப்பு 2 ரூபாயாக மாறி விடும். மேலும் ஒரு பங்கின் விலை 200 ரூபாயாக மாறிவிடும். ஒரு பங்கின் விலை குறைந்தாலும் கூட சந்தை முதலாக்கம் அப்படியே தான் இருக்கும் (50 கோடி பங்குகள் x 200 ரூபாய்). அதனால் பங்கு பிரித்தலுக்கு முன்பாக 200 பங்குகள் உடைய முதலீட்டாளர் பிரித்தலுக்கு பின்னர் 1000 பங்குகளை வைத்திருப்பார்.

பங்கு பிரித்தலில் முதலீட்டாளரின் நிலைப்பாடு என்ன?

பங்கு பிரித்தலுக்கு பின் குறையும் பங்கின் விலையை மனதில் வைத்து அந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்யக்கூடாது. முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்யும் பணம் அதிக பயனை பெற பங்கு முதலீட்டு வணிகத்தில் அதிக அளவு ஈடுபடுகின்றனர் என்பதை தரகக நிறுவனம் கவனித்து வருகின்றனர். இருப்பினும் பங்கு பிரித்தலில் ஈடுபட்ட நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முன் அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு மற்றும் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is a stock split?

Stock split as the term makes it clear is the splitting of the stock into pre-determined number of shares with lower face value.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X