மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன? எவ்வாறு செயல்படுகிறது??

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சந்தையில் தற்போது சிறப்பான முதலீட்டு திட்டங்களில் ஒன்று மியூச்சுவல் ஃபண்ட், ஆனால் பலருக்கும் அதன் பற்றிய தெளிவான எண்ணம் இன்னும் கிடைக்கைவில்லை என்றே சொல்ல வேண்டும். எனவே இங்கு மிக எளிமையான வழியில் மியூச்சுவல் ஃபண்ட்டை பற்றி நாங்கள் விளக்குகிறோம்.

 

பங்குகளை பற்றியோ பங்கு சந்தை பற்றியோ எந்த ஒரு ஐடியாவும் இல்லாத முதலீட்டாளர் நீங்கள் என நினைத்து கொள்ளுங்கள். அப்படியானால் வல்லுனர்களின் உதவியும் சிறப்பறிவுத் தன்மையும் உங்களுக்கு அவசியம் தேவைப்படும்.

மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன? எவ்வாறு செயல்படுகிறது??

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மியூச்சுவல் ஃபண்ட்கள் திட்டத்தில் முதலீடு செய்வது தான். முதலீட்டார்களிடம் நிதியை பெறும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம், அதனை வைத்து பங்குகளை வாங்கவும் விற்கவும் செய்யும்.

இதோ உங்களுக்காக ஒரு உதாரணம்:

சூப்பர் ரிடர்ன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் என்று ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை சூப்பர் ரிடர்ன்ஸ் அசட் மேனேஜ்மென்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது என வைத்துக் கொள்வோம். இந்த திட்டம், சூப்பர் ரிடர்ன் மிட் காப் திட்டம் என்ற புதிய சலுகையை அளித்திடும். ஒரு 100 கோடி ரூபாயை திரட்டியவுடன், பல முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டிய தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும். இந்த திட்டம் ஈக்விட்டி திட்டம் என்றால், அந்த தொகையில் பெரும்பான்மையானவை பங்குகளில் முதலீடு செய்யப்படும். அதுவே டெபிட் (கடன்) திட்டம் என்றால், அந்த தொகையில் பெரும்பான்மையானவை அரசாங்க பங்குகள், கடன் பத்திரங்கள் போன்றவைகளில் முதலீடு செய்யப்படும்.

இப்போது ரூ.10/- என்ற வீதத்தில் அந்த ஃபண்ட் உங்களுக்கு யூனிட்களை வழங்கும். ஒரு யூனிட்டை ரூ.10/-க்கு நீங்கள் வாங்குவீர்கள். நீங்கள் 1000 யூனிட்களை ரூ.10/- என்ற வீதத்திற்கு வாங்கினால், மொத்தமாக ரூ.10,000/-ஐ செலுத்துவீர்கள். சூப்பர் மிட் காப் ஃபண்ட் மூலமாக பங்குகளில் முதலீடு செய்ப்பட்டு ஒரு வருடம் காலம் ஓடிய பிறகு, அதன் மதிப்புகள் உயர்ந்து, இப்போது நிகர சொத்து மதிப்பு (நெட் அசட் வால்யூ - NAV) ரூ.12/- ஆக உயர்ந்திருக்கிறது என வைத்துக் கொள்வோம்.

 

இப்போது நீங்கள் உங்கள் யூனிட்களை மீண்டும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடமே ரூ.12/- என்ற வீதத்தில் விற்கலாம். அதனால் உங்களின் 1000 யூனிட்களுக்கு நீங்கள் ரூ.12,000/-ஐ பெறுவீர்கள்.

இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்!!

யூனிட்களை வாங்க விருப்பப்படும் புதிய முதலீட்டாளர்களுக்கு என்ன நடக்கும்?

நிகர சொத்து மதிப்பு இப்போது உயர்ந்துள்ளதால், யூனிட்களை வாங்க விருப்பப்படும் புதிய முதலீட்டாளர்கள், ஒரு யூனிட்டை ரூ.12/- என்ற வீதத்தில் வாங்க வேண்டும். அப்படியனால் ஒரு யூனிட்டிற்கு அவர் ரூ.12/-ஐ கட்ட வேண்டும். நாம் கூறிய உதாரணத்தில், சூப்பர் ரிடர்ன் மிட் காப் ஃபண்ட்டை ஓபன் எண்டட் ஃபண்டாக கருதி, மிக எளிய வகையில் நாங்கள் விளக்கியுள்ளோம். வாசகர்களை குழப்பாமல் இருக்க, நுழைவு கட்டணம் மற்றும் வெளியேறு கட்டணம் போன்ற விவரங்களை பற்றி குறிப்பிடுவதை தவிர்த்துள்ளோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is a mutual fund?

Let's explain this term in a very simple way. Let's assume that you as an investor have no idea of shares and stocks. You need professional help and expertise. All you have to do is invest in a mutual fund scheme.
Story first published: Friday, October 31, 2014, 10:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X