சூப்பரான முதலீடு.. வெறும் 10,000 ரூபாய் முதலீடு 1 லட்சமாக மாற்றியது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிலத்திலும், தங்கத்திலும் அதிகம் முதலீடு செய்து வந்த இந்தியர்கள் தற்போது புதிய புதிய முதலீடுகளுக்குச் சர்வ சாதாரணமாக மாறி வருகின்றனர். சமீபத்தில் பிரபலமான கிரிப்டோகரன்சியில் கூட அரசு கைவிட்டபோதிலும் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

ஆனால் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பங்குச்சந்தை மிகமுக்கிய முதலீட்டுத் தளமாக மாறி வருகிறது. இந்நிலையில் வெறும் 3 வருட காலத்தில் 10,000 ரூபாய் முதலீட்டை 1 லட்சம் ரூபாய் அளவிற்கு மாற்றிய சிறந்த பங்குகள் உங்களுக்காக.

3 வருடம்
 

3 வருடம்

ஜனவரி 2, 2015 முதல் ஜனவரி 2, 2018 வரையிலான காலத்தில் 1,000 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்த முக்கிய நிறுவனங்களைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

1,000 சதவீதம் என்றால், 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் 3 வருட காலத்தில் உங்களுக்கு 1,00,000 லட்சம் ரூபாய்க் கிடைத்திருக்கும். 1000 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி கண்ட 3 நிறுவனங்களைப் பற்றித் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

மின்டா இண்டஸ்ட்ரீஸ்

மின்டா இண்டஸ்ட்ரீஸ்

ஆட்டோமொபைல் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனமான மின்டா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் கடந்த 3 வருடத்தில் 1,010 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

2015, ஜனவரி 2ஆம் தேதியில் வெறும் 113 ரூபாயாக இருந்த இந்நிறுவனப் பங்குகள் தற்போது 1,257 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேகாலக்கட்டத்தில் நிஃப்டியில் இந்நிறுவனப் பங்குகள் 24 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

 இந்தியாபுல்ஸ் வென்சர்ஸ்

இந்தியாபுல்ஸ் வென்சர்ஸ்

இந்தியாபுல்ஸ் வென்சர்ஸ் நிறுவனப் பங்குகள் 3 வருட காலத்தில் வெறும் 24.20 ரூபாயில் இருந்து 259.65 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இது கிட்டதட்ட 973 சதவீத வளர்ச்சியாகும்.

ரெயின் இண்டஸ்ட்ரீஸ்
 

ரெயின் இண்டஸ்ட்ரீஸ்

2015ஆம் ஆண்டு வெறும் 42 ரூபாயில் இருந்த ரெயின் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 3 வருடத்தில் 438 ரூபாய் வரையில் உயர்ந்து சுமார் 922 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

அதிகப்படியான வளர்ச்சி

அதிகப்படியான வளர்ச்சி

ஜனவரி 2, 2015 முதல் ஜனவரி 2, 2018 இடையிலான 3 வருட காலத்தில் அவன்டி பீட்ஸ், கேப்லின் பாயின்ட் லேப், டால்மியா பாரத், வாக்ராங்கி, ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ், நவின் ப்ளூரோ, ஏபிஎல் அப்போலோ, எஸ்கார்ட்ஸ், ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் 500 சதவீதம் முதல் 700 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

 அதிகப்படியான சரிவு

அதிகப்படியான சரிவு

இதேகாலக்கட்டத்தில் வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ், ரெலிகேர் எண்டர்பிரைசர்ஸ், ஐஓபி, ஓரியென்ட்ல் பாங்க், யூகோ பேங்க், அதானி எண்டர்பிரைசர்ஸ் மற்றும் ஜஸ்ட் டைல் நிறுவனப் பங்குகள் 50 சதவீதம் வரையில் சரிவை சந்தித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazing investment: Rs10000 becomes Rs1 lakh in 3 years

Amazing investment: Rs10000 becomes Rs1 lakh in 3 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X