சிறு முதலீட்டாளர்களுக்கு சரியான வாய்ப்பா.. எலக்ட்ரானிக்ஸ் மார்ட் ஐபிஓ இன்று தொடக்கம்.. விவரம் இதோ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுப் பங்கு வெளியீடு என்பது பொதுவாக பங்கு சந்தையில் சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

 

அந்த வகையில் இன்று எலக்ட்ரானிக்ஸ் மார்ட் ஐபிஓ தொடங்கியுள்ளது. இது அக்டோபர் 4 தொடங்கி, அக்டோபர் 7 அன்று முடிவடையவுள்ளது.

அது எல்லாம் சரி, இந்த வெளியீட்டின் விலை நிலவரம் என்ன? எவ்வளவு மதிப்பில் இந்த ஐபிஓ வெளியிடப்படுகின்றது. இதன் லாட் சைஸ் எவ்வளவு? மற்ற கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

LIC வாங்கிய மருந்து பங்கு.. உங்க போர்ட்போலியோவிலும் இருக்கா..கொஞ்சம் பாருங்க! LIC வாங்கிய மருந்து பங்கு.. உங்க போர்ட்போலியோவிலும் இருக்கா..கொஞ்சம் பாருங்க!

விலை வரம்பு

விலை வரம்பு

இந்த எலக்ட்ரானிக்ஸ் மார்ட் ஐபிஓ அக்டோபர் 4 தொடங்கி, 7 அன்று முடிவடைய உள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் விலை வரம்பானது 56 - 59 ரூபாயாகும். இந்த வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம் 500 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. இதில் ஆஃபர் பார் சேல் மூலம் எந்த பங்கும் விற்பனை செய்யப்படவில்லை.

லாட் சைஸ்

லாட் சைஸ்

இந்த பங்கு வெளியீட்டில் ஒரு லாட் சைஸ் என்பது 254 பங்குகளாகும். இதன் மூலம் ஒருவர் குறைந்தபட்சம் 14,986 ரூபாய் இதற்காக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இதன் முகமதிப்பு ஒரு பங்குக்கு 10 ரூபாயாகும். இதில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு 35% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே 50% நிறுவன முதலீட்டாளர்களுக்கும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் 15% ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

எப்போது பட்டியல்?
 

எப்போது பட்டியல்?

இந்த பங்கானது என் எஸ் இ மற்றும் பி எஸ் இ என இரண்டிலும் பட்டியலிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளிட்யீட்டின் ஒதுக்கீடானது அக்டோபர் 12 அன்று செய்யப்படவுள்ளது. பங்கு கிடைக்காதவர்களுக்கு அக்டோபர் 13 அன்று திரும்ப கொடுக்கப்படவுள்ளது. இதில் டீமேட்களுக்கு அக்டோபர் 14 அன்று பங்குகள் பரிமாற்றம் செய்யப்படும். இதன் பங்குகள் அக்டோபர் 17 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதற்காக இந்த ஐபிஓ?

எதற்காக இந்த ஐபிஓ?

இந்த நிதி திரட்டல் மூலம் அதன் வணிக வளர்ச்சியினை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. திரட்டப்படும் 500 கோடி ரூபாயில், அதன் வளர்ச்சிக்காக 111 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளதாகவும், அதன் மூலதன செலவிற்காக 220 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யவுள்ளது. இது தவிர கடனை அடைக்க 55 கோடி ரூபாயும், மற்ற செலவினங்களுகாகக் மொத்தம் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தெரிகிறது.

 நிறுவனம் பற்றி?

நிறுவனம் பற்றி?

EMI நிறுவனம் இந்தியாவின் 4வது பெரிய நுகர்வோர் பொருட்கள் விற்பனையாளராகும். குறிப்பாக தென் இந்தியாவின் மிகப்பெரிய ஷோரூம்களை கொண்டுள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் தற்போது கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ள நிலையில், வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். எனினும் இந்த நிறுவனத்திற்கு போட்டியும் அதிகம் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

எத்தனை கடைகள்?

எத்தனை கடைகள்?

EMI நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் 112 ஸ்டோர்களை கொண்டுள்ளது. இதில் 100 ஸ்டோர்கள் அனைத்து பிராண்டுகளை கொண்டுள்ள ஒரு மல்டி ஸ்டோர் ஆக உள்ளது. 12 பிரதேயேக பிராண்டுகளாக உள்ளன. இதற்கிடையில் இன்னும் சில ஆண்டுகளில் கூடுதலாக இன்னும் 60 கடைகளை இந்த பட்டியலில் நிறுவனம் சேர்க்க உள்ளது.

கவனம் செலுத்தணும்

கவனம் செலுத்தணும்

நிறுவனம் ஸ்டோர்களின் எண்ணிக்கையை விட லாபத்தினை முதன்மைபடுத்துகிறது. ஆக விற்பனையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதுவே நல்ல மார்ஜினை எட்டவும் வழிவகுத்துள்ளது. எனினும் ஆன்லைன் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் விற்பனையை மேம்படுத்துவதே இதன் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Electronics mart IPO opens Today? Are you planning to buy?

Electronics Mart IPO start on October 4 and end on October 7. The price range of this share issue is Rs 56 - 59. The company is looking to raise Rs 500 crore through this issue.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X