தனியார் துறை முதலீடு: குஜராத்துக்கு முதலிடம்! தமிழகத்துக்கு 7-வது இடம்!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

டெல்லி: நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களின் மொத்த முதலீட்டில் குஜராத் மாநிலம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. தமிழகம் 7-வது இடத்தில் இருக்கிறது.

தொழில்துறை அமைப்பான அசோசெம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:

- 2012ஆம் ஆண்டு ஜுன் நிலவரப்படி, 20 மாநிலங்கள் ஈர்த்த முதலீட்டு அளவு வரிசையாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இப் பட்டியலில் அதிகபட்ச முதலீட்டை ஈர்த்து குஜராத் மாநிலம் முதல் மாநிலமாக திகழ்கிறது.

- நாடு முழுவதும் ரூ.140 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தனியார் துறையினர் மட்டும் ரூ.82.90 லட்சம் கோடி முதலீடு! குஜராத் மாநிலத்தில் மொத்தம் ரூ.14.80 லட்சம் கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தனியாரின் பங்கு 70%

-ஒடிஷா மாநிலம் ரூ.8.80 லட்சம் கோடி தனியார் முதலீட்டை ஈர்த்துள்ளது. இது, நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த தனியார் துறை முதலீட்டில் 10.7% . குஜராத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் ரூ.11.80 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தனியாரின் பங்களிப்பு 75%.

- மகாராஷ்டிரா மாநிலம் 8.9% முதலீட்டை ஈர்த்து மூன்றாவது இடத்திலும், ஆந்திர மாநிலம் 8.4% முதலீட்டை பெற்று நான்காவது இடத்திலும் கர்நாடகா (7.2%) ஐந்தாவது இடத்திலும், ஜார்க்கண்ட் (7.1%) ஆறாவது இடத்திலும் 5.2% முதலீட்டை ஈர்த்து தமிழ்நாடு ஏழாவது இடத்திலும் உள்ளது.

- மேற்கு வங்காளம் (5%), அரியானா (4.8%), உத்தரபிரதேசம் (4.8%), மத்தியபிரதேசம் (4.6%) முதலீடு பெற்று எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது மற்றும் பதினோராவது இடங்களில் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gujarat No. 1 in investment proposals | தனியார் துறை முதலீட்டில் குஜராத் முதலிடம்! தமிழகத்துக்கு 7-வது இடம்!

Gujarat has emerged as one of the top investment destinations in the country attracting proposals of more than Rs 14.8 lakh crore as on June 2012, an industry body study has said.
Story first published: Sunday, October 28, 2012, 9:50 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns